Tuesday, January 20, 2026

Hayagriva Stotram - 6 - The Vedas hail Hayagrivan; I am also making a humble attempt

  श्री:

Jaya Garuda Suparna
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

श्रीहयग्रीवस्तोत्रम् Hayagriva Stotram - ஹயக்ரீவ ஸ்தோத்ரம்

अपौरुषेयैरपि वाक्प्रपञ्चैः 
अद्यापि ते भूतिमदृष्टपाराम् । 
स्तुवन्नहं मुग्ध इति त्वयैव 
कारुण्यतो नाथ! कटाक्षणीयः ।। 6

पदच्छेदः
अपौरुषेयै: अपि वाक्प्रपञ्चैः 
अद्य अपि ते भूतिम् अदृष्ट पाराम् । 
स्तुवन् अहं मुग्ध: इति त्वया एव 
कारुण्यत: नाथ! कटाक्षणीयः ।। 6

नाथ - ஸ்வாமி! 
अपौरुषेयै: - ஒருவராலும் இயற்றப்படாதவையான (அநாதியான) 
वाक्प्रपञ्चैः अपि - வேத விரிவுகளாலும் 
अद्य अपि - இன்றளவும் 
अदृष्ट पाराम् - எல்லைகாண முடியாததான 
 ते - உன்னுடையதான 
भूतिम् - பெருமையை 
स्तुवन्  - துதிக்கின்ற 
अहं - அடியேன் 
मुग्ध: इति - அறியாப் பிள்ளையென்று 
त्वया - உன்னால் 
कारुण्यत: एव - கருணையாலேயே 
कटाक्षणीयः - கடாக்ஷிக்கத் தகுந்தவன். 

ஸ்ரீஹயக்ரீவப் பெருமானே ! ஒருவராலும் இயற்றப்படாது. அநாதியாய் வரும் வேதவேதாந்தங்கள் உன் ஸவரூபம்-திரு மேனி-குணம் முதலிய செல்வத்தைக் கூறத் துணிந்து இன்றளவும் அதன் எல்லை காண இயலாதனவாய்த் தவிக்கின்றன. அத்தகைய உன் பெருமையைத் துதிக்க இப்பொழுது அடியேன் துணிந்து முன் வந்துள்ளேன். நீ இவன் ஓர் ”அசட்டுச் சிறுவன்” என்று கருதி உன் கருணை கலந்த கடாக்ஷங்களை அடியேன் பால் பொழிந்தருளவேண்டும். 

O Hayagriva! The Vedas and Vedanta, which are beginningless and not composed by any person, try to describe Your true nature—Your divine form, Your auspicious qualities, and Your infinite greatness—but even to this day they struggle, unable to find their limits. Such is Your immeasurable glory. Even so, I have now gathered the courage to come forward and praise You. Please do not think of me as just a foolish little child; instead, kindly shower Your compassionate and merciful glances upon me.


🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

SarvamSriKrishnarpanam