श्री:
Jaya Garuda Suparna
श्रीमते निगमान्त महादेशिकाय नम:
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
दाक्षिण्यरम्या गिरिशस्य मूर्तिः
देवी सरोजासन धर्मपत्नी ।
व्यासादयोऽपि व्यपदेश्यवाचः
स्फुरन्ति सर्वे तव शक्तिलेशैः ।। 7
पदच्छेदः
दाक्षिण्यरम्या गिरिशस्य मूर्तिः
देवी सरोज आसन धर्म पत्नी ।
व्यासादय: अपि व्यपदेश्य वाचः
स्फुरन्ति सर्वे तव शक्ति लेशैः ।। 7
गिरिशस्य - சிவனுடைய
दाक्षिण्यरम्या - தெற்கு நோக்கி (அமர்ந்த) அழகிய
मूर्तिः - மூர்த்தியும் ( தக்ஷிணாமூர்த்தி)
सरोज आसन - தாமரையில் அமர்ந்த பிரமனுடைய
धर्म पत्नी - தருமபத்தினியான
देवी - ஸரஸ்வதி தேவியும்
व्यपदेश्य वाचः - மிகப் போற்றுதற்கு உரிய பேச்சை உடைய
व्यासादय: - வ்யாஸர் முதலிய
सर्वे अपि - அனைவரும்
तव - உன்னுடைய ( ஹயக்ரீவனின்)
शक्ति लेशैः - சக்தியின் திவலைகளால்
स्फुरन्ति - உயர்ந்து விளங்குகின்றனர்
ஸ்ரீஹயக்ரீவப் பெருமானே! சிவன் முன்பு ஆலமரத்தின் நிழலில் தக்ஷிணாமூர்த்தியாய் அமர்ந்து அகஸ்த்யர்-புலஸ்த்யர்- தக்ஷர்-மார்க்கண்டேயர் என்னும் நான்கு முனிவர்களுக்குத் தத்துவார்த்தங்களை உபதேசித்தான்; மற்றும் அண்டினவர்களுக்கு உபதேசிக்கவல்லனாய் விளங்கினான். பிரமனுக்கு மனைவியான ஸரஸ்வதிதேவி தன்னை வழிபடுமவர்க்குக் கல்வியறிவை அருள்கின்றாள். வ்யாஸர் - பராசரர்-வால்மீகி முதலிய மஹர்ஷிகள் உலகம் புகழும்படி சிறந்த நூல்களை இயற்றியுள்ளனர். இன்னும் பல பல பெரியோர்கள் சிறந்த க்ரந்தங்களை உலகுக்கு ஈந்துள்ளார்கள். இவ்வனைவரும் நீ அருளிய அறிவுத் துளிகளால் அல்லவோ இத்துணைப் பெருமை பெற்று விளங்குகின்றனர்.
O SriHayagriva Perumal! Long ago, Shiva sat
under the shade of the banyan tree as Dhakshinamurthy and taught the truths of
philosophy to the four sages—Agastya, Pulastya, Dakṣa, and Markaṇḍeya—and He stood as one capable of teaching all who approached Him. SaraswatiDevi,
the consort of Brahma, blesses those who worship her with learning and
knowledge. Great sages such as Vyasa, Parasara, and Valmiki
composed excellent works that are praised by the whole world, and many other
noble souls have gifted great texts to humanity. Do not all of them shine with
such greatness only because of the drops of knowledge graciously bestowed by
You?
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸