Showing posts with label Queen. Show all posts
Showing posts with label Queen. Show all posts

Monday, June 22, 2026

159 - Daya Shatakam - 72- பெரிய பிராட்டியும் தயாதேவியும் - Daya Devi and Periya Piratti

   श्री:

जय गरुड सुपर्ण 
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

72- பெரிய பிராட்டியும் தயாதேவியும் - Daya Devi and Periya Piratti

 वृषगिरि पतेर्हृद्या विश्वावतार सहायिनी 
क्षपित निखिलावद्या देवि क्षमादि निषेविता । 
भुवन जननी पुंसां भोगापवर्ग विधायिनी 
वितमसि पदे व्यक्तिं नित्यां बिभर्षि दये स्वयम् ॥ 72 ॥

पदच्छेदः
वृषगिरि पते: हृद्या विश्व अवतार सहायिनी 
क्षपित निखिल अवद्या देवि क्षमा आदि निषेविता । 
भुवन जननी पुंसां भोग अपवर्ग विधायिनी 
वितमसि पदे व्यक्तिं नित्यां बिभर्षि दये स्वयम् ॥ 72 ॥

दये देवि — தயாதேவியே!
वृषगिरि पते: — திருவேங்கடநாதனுக்கு
हृद्या — இதயத்தில் இருப்பவளாய் (மார்பில் உறைபளாய்)
विश्व अवतार — எல்லா அவதாரங்களிலும்
सहायिनी — துணையாய் நிற்பவளாய்
क्षपित निखिल अवद्या — எல்லா குற்றங்களையும் ஒழித்தவளாய்
क्षमा आदि निषेविता  — பொறுமை முதலிய குணங்களால் (பூமி முதலிய தேவியாரால் ஸேவிக்கப்பட்வளாய்)
भुवन जननी— உலகங்களுக்குத் தாயாய்
पुंसां — சேதநர்களுக்கு
भोग— இம்மைப் பயனையும்
अपवर्ग — மோக்ஷத்தையும்
विधायिनी — அளிப்பவளாயுள்ள நீ
वितमसि — தமோ குணமில்லாத
पदे — ஸ்ரீ வைகுண்டத்தில்
स्वयम् — தானாகவே
नित्यां — சாசுவதமான
व्यक्तिं — தோற்றத்தை (திருமேனியை)
बिभर्षि — கொண்டுள்ளாய்.

பெரிய பிராட்டியும் தயாதேவியும்

தயாதேவியே! உனக்கும் பெரிய பிராட்டிக்கும் மிகுந்த ஒற்றுமை உள்ளது. திருவேங்கடமுடையானது திருமார்பிலே பெரியபிராட்டி உறைகின்றாள். நீயும் அவனது உள்ளத்தில் உறைகின்றாய்; பிராட்டி எம்பெருமான் கொள்ளும் எல்லா அவதாரங்களிலும் தானும் அவதரித்துத் துணை புரிகின்றாள். நீயும் அவ்வாறே எல்லா அவதாரங்களிலும் பிரியாது நின்று அவன் செயலுக்குத் துணை புரிகின்றாய். கருணை இல்லாவிடில் எம்பெருமானுடைய அவதாரம் ஏது? பிராட்டி சேதநர்களின் பாபத்தை ஒழிக்கின்றாள். நீ இருக்கும் இடத்திலும் சேதநர்களின் பாபங்கள் முன் நில்லாது பறந்துபோய்விடுகின்றன. பட்டமஹிஷியான பெரிய பிராட்டியை க்ஷமை (பூமி தேவி) முதலிய மற்றைத் தேவிமார் வணங்கி வழிபடுகின்றனர். உனக்கு க்ஷமை (பொறுமை) முதலிய மற்றக் குணங்கள் அடங்கி நின்று ஏவல் புரிகின்றன. பிராட்டி உலகுக்குத் தாயாய் விளங்குகின்றாள். நீயும் உலகப் படைப்புக்குக் காரணமாயிருப்பதால் தாயேயாகின்றாய். பிராட்டி சேதநர்க்கு இம்மைப் பயன்களையும் மோக்ஷத்தையும் அருளவல்லவள். அவ்வாறே உன் உதவி கொண்டுதான் சேதநர்கள் அப்பயன்களைப் பெற முடிககின்றது. பிராட்டி தமோகுணமே இல்லாத ஸ்ரீவைகுண்டத் தில் நித்யமான திருமேனியுடன் எப்பொழுதும் இருக்கின்றாள். நீயும் தமோ குணம் கலவாது ஸத்துவ குணமே தலையெடுத்த ஸாதுக்களிடம் தானாகவே சென்று சாசுவதமாய் உறைகின்றாய். இப்படி உனக்கும் பெரிய பிராட்டிக்கும் உள்ள ஒற்றுமைகளை நோக்கும்போது நீங்கள் இருவரும் ஓர் உருவமோ என்று கருத இடமாகின்றது. (72) 

Daya Devi and Periya Piratti

O Daya Devi! There is a remarkable resemblance between You and Periya Piratti.

Periya Piratti resides eternally on the divine chest of Tiruvengadamudaiyan. Likewise, You dwell within His very heart.

Whenever Emperuman takes an Avatharam, Periya Piratti also incarnates along with Him and assists Him in His divine mission. In the same way, You never leave Him in any Avatharam and remain constantly by His side, supporting all His actions. Indeed, without compassion, what purpose would there be for His Avatharams?

Periya Piratti removes the sins of Chethanas. Similarly, wherever You are present, sins cannot remain; they flee and disappear.

Periya Piratti, the crowned Queen, is worshipped and revered by the other divine consorts such as Kshama (Bhudevi) and others. Likewise, virtues such as Kshama (forbearance) and many other noble qualities stand obediently before You and serve You.

Periya Piratti is the universal mother of all beings. You too are a mother, for You are instrumental in the creation, sustenance, and welfare of the world.

Periya Piratti grants both worldly benefits and Moksha to Chethanas. In the same manner, it is only through Your help and intercession that Chethanas are able to obtain these blessings.

Periya Piratti eternally resides in Sri Vaikuntham, possessing a divine form untouched by Tamo Guna. Likewise, You naturally dwell forever among noble Jeevans in whom Sattva Guna alone predominates and Tamo Guna has no place.

When we reflect upon all these similarities between You and Periya Piratti, one cannot help but wonder whether You both are, in truth, manifestations of a single divine reality. (72)

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Sunday, June 21, 2026

158 - Daya Shatakam - 71 - பாபிகளையும் அரவணைக்கும் தயையின் ஒப்பற்ற துணிவு - The Unmatched Courage of Daya That Embraces Even Sinners

   श्री:

जय गरुड सुपर्ण 
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

71 - பாபிகளையும் அரவணைக்கும் தயையின் ஒப்பற்ற துணிவு - The Unmatched Courage of Daya That Embraces Even Sinners

त्रिविध चिदचित् सत्तास्थेम प्रवृत्ति नियामिका 
वृषगिरि विभोरिच्छा सा त्वं परैरपराहता । 
कृपण भरभृत् किंकुर्वाण प्रभूत गुणान्तरा 
वहसि करुणे वैचक्षण्यं मदीक्षण साहसे ॥ 71 ॥

पदच्छेदः
त्रिविध चित् अचित् सत्ता स्थेम प्रवृत्ति नियामिका 
वृषगिरि विभो: इच्छा सा त्वं परै: अपराहता । 
कृपण भर भृत् किंकुर्वाण प्रभूत गुणान्तरा 
वहसि करुणे वैचक्षण्यं मत् ईक्षण साहसे ॥ 71 ॥

करुणे — தயாதேவியே !
त्रिविध — மூவகைப்பட்ட
चित् अचित् — சேதநம் அசேதநம் இவற்றின்
सत्ता — ஸ்வரூபத்தையும்
स्थेम — இருப்பையும்
प्रवृत्ति — செயலையும்
नियामिका  — நியமிப்பவளாய்
 परै:  — பிறரால்
अपराहता — தடுக்கப்படாதவளாய்
कृपण — பேதைகளின்
भर भृत्  — பொறுப்பைத் தாங்குமவளாய்
किंकुर्वाण  — குற்றேவல் புரிகின்ற
प्रभूत — பெருமையுள்ள
गुणान्तरा — மற்றைக் குணங்களையுடையளாய்
वृषगिरि विभो: — திருமலையிலுள்ள பிரபுவின்
इच्छा — விருப்பத்தின்  வடிவாயுள்ள
सा — அத்தகைய
त्वं — நீ
मत् ईक्षण — என்னைக் கடாக்ஷிப்பது என்ற
साहसे — துணிவுச் செயலில்
वैचक्षण्यं — ஸாமர்த்யத்தை
वहसि — தாங்கி நிற்கின்றாய்.

பாபிகளையும் அரவணைக்கும் தயையின் ஒப்பற்ற துணிவு

தயாதேவியே! சேதநர் மூவகைப்படுவர். (1) பத்தர் (ஸம்ஸாரத்தில் உழல்பவர்) (2) முக்தர்-(மோக்ஷம் பெற்றவர்) (3) நித்யர் (நித்யஸூரிகள்). அசேதநமும் மூவகைப்படும். (1) ப்ரக்ருதி (2) காலம் (3) சுத்தஸத்துவம். இந்த மூவகைச் சேதந-அசேதநங்களுடைய ஸ்வரூபம்-அவை நீடித்து நிற்றல்-அவற்றின் செயல் ஆகிய அனைத்தையும் நீ தான் நடத்துகின்றாய். உன் போக்கை எவரும் தடுக்கமுடியாது. பக்தி யோகமென்னும் கடின உபாயத்தைச் செய்யமுடியாது வருந்துமவர்கள் ப்ரபத்தியைச் செய்கின்றனர். அவர்களைக் காக்கும் பொறுப்பு முழுதையும் நீயே ஏற்றுக்கொண்டுவிடுகின்றாய். எம்பெருமானுடைய மற்ற உயர்ந்த குணங்கள் அனைத்தும் உன்னைப் பேரரசியாய் வைத்து உனக்குத் தொண்டுபுரிகின்றன. திருவேங்கடநாதனுடைய ஆசையே தான் நீ. தயை என்பது தன் பயனைக் கருதாது பிறர் துன்பம் துடைக்க விரும்புவது தானே? இத்துணைப் பெருமைகளுடன் எல்லோரினும் எல்லாவற்றினும் மேம்பட்டு நிற்கும் நீ மிகத் துணிவான ஒரு செயலைச் செய்கின்றாய். என்னுடைய ஸம்பந்தம் உனக்கு வந்தால் உனக்கும் பெருமை குறையுமோ என்று அஞ்சும்படி அவ்வளவு கொடிய பாபங்களைச் செய்தவன் யான். இத்தகைய என்னையும் நான் செய்யும் ப்ரபத்தியென்னும் எளிய உபாயத்தைக் கொண்டு என்னைக் குளிரக் கடாக்ஷிக்கின்றாய். இச்செயலைச் செய்ய உன்னையன்றி வேறு எவருக்கும் துணிவும் ஆற்றலும் வருமோ? இது உனக்கே உரிய ஒரு தனிப் பண்பைக் காட்டுகின்றது. (71) 

The Unmatched Courage of Daya That Embraces Even Sinners

O Daya Devi!

Sentient beings (Chethanas) are of three kinds:

1.      Baddhas – those who wander in Samsara.

2.      Muktas – those who have attained Moksha.

3.      Nityas – the Nitya Suris who are eternally free.

Insentient entities (Achethanas) are also of three kinds:

1.      Prakriti – primordial matter.

2.      Kala – time.

3.      Suddha Sattvam – the pure spiritual substance of the divine realm.

The Swaroopam (essential nature), Sthithi (continued existence), and Pravritthi (functions and activities) of all these categories are sustained and governed by You. No one can obstruct Your course.

There are many who suffer because they are unable to perform the difficult path of Bhakti Yoga. Such people resort to Prapatti, the simple and accessible means. The moment they surrender, You take upon Yourself the entire responsibility of protecting them.

All the other exalted Kalyana Gunas of Emperuman stand around You like attendants serving their Empress.

Indeed, You are nothing but the very compassionate will of Tiruvengadanathan.

What is Daya? It is the desire to remove the suffering of others without seeking any benefit for oneself.

Though You possess such immeasurable greatness and stand above all beings and all things, You perform an act of astonishing boldness.

I am one who has committed such terrible sins that one may wonder whether even You would lose some of Your glory by associating with me.

Yet, when I perform the simple act of Prapatti, You cast Your cooling and comforting glance upon me.

Who other than You would possess the courage and power to do such a thing?

Who else would willingly accept and protect one burdened with such grave sins?

This reveals a unique quality that belongs to You alone.

Your greatness is not merely in protecting the virtuous; it lies in embracing even the most fallen Jeevathmas and making them worthy of salvation through Your boundless compassion. (71)

Central Message

The verse highlights the extraordinary courage of Daya. While others may hesitate to associate with sinners, Daya Devi does not. She accepts even those burdened with immense sins when they approach through Prapatti, taking full responsibility for their protection and upliftment. This fearless compassion is presented as a unique and incomparable attribute of Daya.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Saturday, June 13, 2026

150 - Daya Shatakam - 63 - தயையின் ஆட்சி - The Sovereignty of Compassion

 श्री:

जय गरुड सुपर्ण 
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

05. श्री श्रीदयाशतकम्  Daya Shatakam ஸ்ரீ தயா சதகம்

 63 - தயையின் ஆட்சி - The Sovereignty of Compassion

अनन्याधीनः सन् भवति परतन्त्रः प्रणमतां 
कृपे सर्वद्रष्टा न गणयति तेषामपकृतिम् । 
पतिस्त्वत्पारार्थ्यं प्रथयति वृष क्ष्माधर पतिः 
व्यवस्थां वैयात्यादिति विघटयन्ती विहरसि ॥ 63 ॥

पदच्छेदः
अनन्याधीनः सन् भवति परतन्त्रः प्रणमतां 
कृपे सर्व द्रष्टा न गणयति तेषाम् अपकृतिम् । 
पति: त्वत् पारार्थ्यं प्रथयति वृष क्ष्माधर पतिः 
व्यवस्थां वैयात्या इति विघटयन्ती विहरसि ॥ 63 ॥

कृपे — தாயதேவியே!
वृष क्ष्माधर पतिः  — திரு வேங்கடநாயகன்
अनन्याधीनः सन्  — பிறருக்கு வசப்படாதவனாயிருந்தே
प्रणमतां— சரணமடைவர்க்கு
परतन्त्रः  — வசப்பட்டவனாக
भवति — ஆகின்றான்.
सर्व द्रष्टा — எல்லாவற்றையும் காண்பவனாயிருந்தும்
तेषाम् — அவர்களின்
अपकृतिम् — அபராதத்தை
न गणयति — எண்ணுவதில்லை.
पति:  — உனக்குக் கணவனாய் (தலைவனாய்) இருந்தும்
त्वत् पारार्थ्यं — உனக்கு அடியனாந்தன்மையை
प्रथयति — வெளியிடுகின்றான்.
इति — இவ்வாறு (நீ)
वैयात्या — (உனது) தைரியத்தால்
व्यवस्थां — வரையறையை
विघटयन्ती — குலைத்துக்கொண்டு
विहरसि — விளையாடுகின்றாய்.

தயையின் ஆட்சி — ஸ்வதந்த்ரனையும் வசப்படுத்தும் சக்தி

            தாயதேவியே! நீ உன் நாயகன திருவேங்கடமுடையானை உன் இஷ்டப்படி ஆட்டி வைக்கின்றாய். அவன் பிறருக்கு அடங்காமல் ஸ்வதந்த்ராயிருப்பவன். அப்படியிருப்பவனைச் சரணமடைந்தவர்க்குக் கீழ்ப்படிந்து தேரோட்டுதல் - தூது செல்லல் முதலிய இழிசெயல்களைச் செய்யுமாறு ஏவுகின்றாய். அதுமட்டுமா? அவன் ஸகல வஸ்துக்களையும் ஒரே காலத்தில் கண்கூடாகத் தானே காண்பவன். அத்தகைய அவனை அடியார்களின் குற்றங்களைக் காணாதவன் போலாக்கிக் குற்றத்தைப் புறக்கணிக்கச் செய்கின்றாய். அவன் உன் கட்டளைக்குக் கீழ்ப்படியத்தானே வேண்டியிருக்கின்றது. அவன் உனக்கு நாயகனாயிருந்தும் தன்னை உனக்கு வசப்பட்டவனாக உலகுக்கு வெளிப்படையாய்க் காட்டிக்கொள்கின்றான். சாஸ்த்ரங்களில் எம்பெருமானைப்பற்றிக் கூறிய வரையறைகளையெல்லாம் இவ்வாறு நீ குலைத்து அவனுக்கு இயற்கையாயுள்ள தன்மைகளை மாற்றிப் பல திருவிளையாடல்களைப் புரிகின்றாய். இவற்றுக்கெல்லாம் உனது தைரியம் தானே காரணம்? (63) 

The Sovereignty of Compassion — The Power that Governs Even the Independent Lord

O Daya Devi!

You make your Lord, Tiruvengadamudaiyan, act according to your wish. He is absolutely independent (Swatantra), subject to none. Yet you command Him to perform humble services for those who surrender to Him—such as becoming a charioteer, serving as a messenger, and carrying out tasks that appear lowly for the Supreme Lord. And that is not all.

He is the One who directly perceives all things at all times. Nothing escapes His vision. Yet you make Him behave as though He does not see the faults of His devotees. You cause Him to overlook their shortcomings and treat them with mercy instead of judgment. He has no choice but to obey your command.

Though He is your Lord, He openly reveals to the world that He is under your influence. In this way, you seem to overturn all the usual descriptions found in the Shaastras concerning Bhagavan. You transform the natural expressions of His sovereignty and make Him perform countless divine acts of grace.

What is the reason for all this? Is it not the boundless courage and authority of your compassion? (63)

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Sunday, May 24, 2026

130 - Daya Shatakam - 43 - திருப்பொய்கையாகிய திருமால் திருமேனி - Srinivasan’s Divine form is a pond

 श्री:

जय गरुड सुपर्ण 
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

43 - திருப்பொய்கையாகிய திருமால் திருமேனி - Srinivasan’s Divine form is a pond 

नाभी पद्म स्फुरण सुभगा नव्य नीलोत्पलाभा 
क्रीडा शैलं कमपि करुणे वृण्वती वेङ्कटाख्यम् । 
शीता नित्यं प्रसदनवती श्रद्दधानावगाह्या 
दिव्या काचिज्जयति महती दीर्घिका तावकीना ॥ 43 ॥

पदच्छेदः
नाभी पद्म स्फुरण सुभगा नव्य नीलोत्पल आभा 
क्रीडा शैलं कमपि करुणे वृण्वती वेङ्कट आख्यम् । 
शीता नित्यं प्रसदनवती श्रद्दधान अवगाह्या 
दिव्या काचित् जयति महती दीर्घिका तावकीना ॥ 43 ॥

करुणे — தயாதேவியே!
नाभी पद्म — திருவுந்தித் தாமரையின்
स्फुरण — பிரகாசத்தால்
सुभगा  — அழகு பெற்றதாய்
नव्य नीलोत्पल आभा  — புதிய கருநெய்தலின் காந்தியையுடையதாய்
शीता — குளிர்ந்ததாய்
नित्यं — எப்பொழுதும்
प्रसदनवती — தெளிவுடையதாய்
श्रद्दधान — சிரத்தையுடையரால்
अवगाह्या — நீராடுவதற்கு (அனுவிப்பததற்கு) ஏற்றதாய்
दिव्या — மிக உயர்ந்ததாய்
महती — மிகப் பெரியதாயுள்ள
तावकीना — உன்னுடையதான
काचित् — ஒரு
दीर्घिका — பொய்கையானது
वेङ्कट आख्यम् — திருவேங்கடமென்னும் பெயருடைய
कमपि — ஆச்சரியமான
क्रीडा शैलं — விளையாட்டு மலையை
वृण्वती — அடைந்ததாய்
जयति — விளங்குகின்றது.

திருப்பொய்கையாகிய திருமால் திருமேனி

உலகில் பேரரசி விநோதமாய்ப் பொழுது போக்குவதற்கு மலைக்குச் செல்வது வழக்கம். அம்மலையில் பெரிய பொய்கை அமைந்திருக்கும். அதில் புதிய புதிய கருநெய்தல் மலர்களும் தாமரைப் பூக்களும் மலர்ந்து பொய்கையை அழகுபடுத்தும். தெளிந்த நீர் அதில் நிரம்பி எப்பொழுதும் குளிர்ந்திருக்கும். அதன் சீர்மையைக் கண்டு ஜனங்களும் ஆவலோடு வந்து நீராடிச் செல்வர். தயாதேவியே! ஸ்ரீநிவாஸனுடைய பட்டமஹிஷியாகிய உனக்கு உற்சாகமாய்ப் பொழுதுபோக்கத் திருவேங்கடமென்னும் உயர்ந்த மலை அமைந்துள்ளது. இதில் உனக்குப் பயன்படுவதற்கு ஏற்ற எம்பெருமானது திருமேனியே ஒரு பெரிய உயர்ந்த பொய்கையாகும். இப்பொய்கையில் திருவுந்திக் கமலம் மலர்ந்து நிற்கின்றது. இந்தத் திருமேனியில் ஓடும் நீலநிறம், புதிய கருநெய்தல் மலர்கள் பூத்துக் குலுங்குவதுபோல் காட்சியளித்துத் திருமேனியின் அழகைப் பெருக்குகின்றது. இந்தத் திருமேனி ஸேவிப்பவர்களின் கண்களுக்கு நல்விருந்தாய்க் குளிர்ந்து நிற்கின்றது; தன்னை ஸேவிக்கும் சேதநர்களுக்கு அநுக்ரஹம் செய்யப் பாங்கானது; சிரத்தையுடைய மக்கள் எப்பொழுதும் அநுபவித்துத் தங்கள் தாபத்தைத் தீர்த்துக்கொள்ள உரியது. இத்தகைய திருமேனிப் பொய்கை உனக்கு உரியதாய் மிக்க பெருமையுடன் விளங்குகின்றது. (43) 

Srinivasan’s Divine form is a pond

In this world, it is customary for a great queen to visit a mountain for joyful recreation and relaxation. On that mountain there is usually a beautiful pond filled with clear, cool water. Fresh blue lilies and lotus flowers bloom there and add beauty to the pond. Seeing its charm, people eagerly come to bathe in it and refresh themselves.

O Goddess of Compassion! For you, the crowned queen of Lord Srinivasa, the lofty Tiruvengadam hill serves as such a delightful place of enjoyment. And within this sacred hill, the divine body of the Lord itself is like a great and splendid pond meant for your delight. In this pond, the lotus arising from His divine navel blooms beautifully. The dark blue color flowing through His divine form appears like clusters of fresh blue water-lilies blossoming everywhere, increasing the beauty of that sacred form.

This divine form stands cooling and pleasing to the eyes of all who behold it. It is ever ready to shower grace upon the beings who worship Him. Devoted people continuously experience and enjoy this divine beauty, and by doing so, the heat and suffering of their hearts are removed. Thus, this pond-like divine form, filled with beauty and grace, shines gloriously as something specially belonging to you. (43)

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


Monday, May 11, 2026

117 - Daya Shatakam - 30 - பாப சக்கரவர்த்தி சரணடைந்த கருணைச் சக்கரவர்த்தினி - The Emperor of Sins Seeking the Queen of Compassion

  श्री:

जय गरुड सुपर्ण 
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

30 -  பாப சக்கரவர்த்தி சரணடைந்த கருணைச் சக்கரவர்த்தினி - The Emperor of Sins Seeking the Queen of Compassion

अहमस्म्यपराध चक्रवर्ती 
करुणे त्वं च गुणेषु सार्वभौमी । 
विदुषी स्थितिमीदृशीं स्वयं मां 
वृषशैलेश्वर पादसात्कुरु त्वम् ॥ 30 ॥

पदच्छेदः

अहम् अस्मि अपराध चक्रवर्ती 
करुणे त्वं च गुणेषु सार्वभौमी । 
विदुषी स्थितिम् ईदृशीं स्वयं मां 
वृषश शैल ईश्वर पादसात्  कुरु त्वम् ॥ 30 ॥

करुणे — தயாதேவியே!
अहम् — நான்
अपराध  — பாபங்களுக்கு
चक्रवर्ती — சக்கரவர்த்தியாக
अस्मि — உள்ளேன்.
त्वं च — நீயும்
गुणेषु — குணங்களுக்கு
सार्वभौमी — சக்ரவர்த்தினியாக உள்ளாய்.
स्थितिम् — நிலைமையை
विदुषी त्वम् — அறிகின்ற நீ
मां— என்னை
स्वयं — தானாகவே
वृषश शैल ईश्वर — திருவேங்கட நாதனுடைய
पादसात्  — திருவடியின் கீழ் அமரும்படி
कुरु — செய்.

பாப சக்கரவர்த்தி சரணடைந்த கருணைச் சக்கரவர்த்தினி

தயாதேவியே! குற்றங்களுக்கெல்லாம் யான் சக்கரவர்த்தியாயுள்ளேன். குற்றங்களே என் ஆளுகைக்கு உள்பட்ட வஸ்துக்களாகும். நீயோ எம்பெருமானுடைய குணங்களுக்குள் சக்கரவர்த்தினியாய் உள்ளாய். மற்ற குணங்கள் அனைத்தும் உன் ஆளுகைக்கு அடங்கியனவே. இப்படி நம் இருவருக்கும் சமமாக உள்ள பெருமையை நீ நன்கு அறியவேண்டும். பெண்ணரசியான நீ என்மீது தானாகவே படையெடுத்துக் குற்றங்களென்னும் எனது இராச்சியத்தை நீ கவர்ந்துகொண்டு, என்னையும் பிடித்துத் திருவேங்கடமுடையானது திருவடியின் கீழ் சிறைப்படுத்தி வைக்கவேண்டும். குணங்கள் தலைமை பெற்ற நீ பாபகளுக்குத் தலைமைபெற்ற என் பாபங்களைத் தொலைத்து என்னைத் திருவேங்கடநாதன் தாளிணைக்கீழ் சேர்த்தருளவேண்டுமென்று பிரார்த்தித்தபடி. பாபச் சுழலில் அகப்பட்டு நிற்கும் நான் அபராத சக்கர வர்த்தி. நீ குணங்களுக்குச் சக்கரவர்த்தினி. சமமான பதவியிலுள்ளவர்கள் ஒருவருக்கொருவர் உதவிசெய்வது நியாயம் தானே! ஆதலால் கருணையாகிய நீ உனக்கும் உறைவிடமான ஸ்ரீநிவாஸன் திருவடிகளில் என்னைச் சேர்த்துவிடலாகிய இந்த உதவியை எனக்குச் செய்தருள வேண்டும்- என்றும் கருத்துக் கூறுவர். (30)

 

The Emperor of Sins Seeking the Queen of Compassion

O Goddess of Compassion! I am the emperor of all faults and sins. Sins are the subjects under my rule. You, on the other hand, are the empress among all the divine qualities of the Paramathma. All His other qualities stand under your authority. You must recognize that both of us hold positions of equal greatness in our own realms.

Therefore, you, the queen of divine qualities, should march against me, conquer my kingdom of sins, capture me, and place me as a prisoner beneath the divine feet of Paramathma Srinivasa. Since you are the leader among virtues, you must destroy the sins ruled by me, the leader among sinners, and unite me with the feet of Tiruvengadanatha.

Another inner meaning is this: I am the emperor trapped in the whirlpool of sins, while you are the empress of virtues. Is it not natural for rulers of equal rank to help one another? Therefore, you, who dwell at the feet of Srinivasa, should grant me this help also—by placing me at those very divine feet. (30)