Showing posts with label Guna. Show all posts
Showing posts with label Guna. Show all posts

Monday, June 22, 2026

159 - Daya Shatakam - 72- பெரிய பிராட்டியும் தயாதேவியும் - Daya Devi and Periya Piratti

   श्री:

जय गरुड सुपर्ण 
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

72- பெரிய பிராட்டியும் தயாதேவியும் - Daya Devi and Periya Piratti

 वृषगिरि पतेर्हृद्या विश्वावतार सहायिनी 
क्षपित निखिलावद्या देवि क्षमादि निषेविता । 
भुवन जननी पुंसां भोगापवर्ग विधायिनी 
वितमसि पदे व्यक्तिं नित्यां बिभर्षि दये स्वयम् ॥ 72 ॥

पदच्छेदः
वृषगिरि पते: हृद्या विश्व अवतार सहायिनी 
क्षपित निखिल अवद्या देवि क्षमा आदि निषेविता । 
भुवन जननी पुंसां भोग अपवर्ग विधायिनी 
वितमसि पदे व्यक्तिं नित्यां बिभर्षि दये स्वयम् ॥ 72 ॥

दये देवि — தயாதேவியே!
वृषगिरि पते: — திருவேங்கடநாதனுக்கு
हृद्या — இதயத்தில் இருப்பவளாய் (மார்பில் உறைபளாய்)
विश्व अवतार — எல்லா அவதாரங்களிலும்
सहायिनी — துணையாய் நிற்பவளாய்
क्षपित निखिल अवद्या — எல்லா குற்றங்களையும் ஒழித்தவளாய்
क्षमा आदि निषेविता  — பொறுமை முதலிய குணங்களால் (பூமி முதலிய தேவியாரால் ஸேவிக்கப்பட்வளாய்)
भुवन जननी— உலகங்களுக்குத் தாயாய்
पुंसां — சேதநர்களுக்கு
भोग— இம்மைப் பயனையும்
अपवर्ग — மோக்ஷத்தையும்
विधायिनी — அளிப்பவளாயுள்ள நீ
वितमसि — தமோ குணமில்லாத
पदे — ஸ்ரீ வைகுண்டத்தில்
स्वयम् — தானாகவே
नित्यां — சாசுவதமான
व्यक्तिं — தோற்றத்தை (திருமேனியை)
बिभर्षि — கொண்டுள்ளாய்.

பெரிய பிராட்டியும் தயாதேவியும்

தயாதேவியே! உனக்கும் பெரிய பிராட்டிக்கும் மிகுந்த ஒற்றுமை உள்ளது. திருவேங்கடமுடையானது திருமார்பிலே பெரியபிராட்டி உறைகின்றாள். நீயும் அவனது உள்ளத்தில் உறைகின்றாய்; பிராட்டி எம்பெருமான் கொள்ளும் எல்லா அவதாரங்களிலும் தானும் அவதரித்துத் துணை புரிகின்றாள். நீயும் அவ்வாறே எல்லா அவதாரங்களிலும் பிரியாது நின்று அவன் செயலுக்குத் துணை புரிகின்றாய். கருணை இல்லாவிடில் எம்பெருமானுடைய அவதாரம் ஏது? பிராட்டி சேதநர்களின் பாபத்தை ஒழிக்கின்றாள். நீ இருக்கும் இடத்திலும் சேதநர்களின் பாபங்கள் முன் நில்லாது பறந்துபோய்விடுகின்றன. பட்டமஹிஷியான பெரிய பிராட்டியை க்ஷமை (பூமி தேவி) முதலிய மற்றைத் தேவிமார் வணங்கி வழிபடுகின்றனர். உனக்கு க்ஷமை (பொறுமை) முதலிய மற்றக் குணங்கள் அடங்கி நின்று ஏவல் புரிகின்றன. பிராட்டி உலகுக்குத் தாயாய் விளங்குகின்றாள். நீயும் உலகப் படைப்புக்குக் காரணமாயிருப்பதால் தாயேயாகின்றாய். பிராட்டி சேதநர்க்கு இம்மைப் பயன்களையும் மோக்ஷத்தையும் அருளவல்லவள். அவ்வாறே உன் உதவி கொண்டுதான் சேதநர்கள் அப்பயன்களைப் பெற முடிககின்றது. பிராட்டி தமோகுணமே இல்லாத ஸ்ரீவைகுண்டத் தில் நித்யமான திருமேனியுடன் எப்பொழுதும் இருக்கின்றாள். நீயும் தமோ குணம் கலவாது ஸத்துவ குணமே தலையெடுத்த ஸாதுக்களிடம் தானாகவே சென்று சாசுவதமாய் உறைகின்றாய். இப்படி உனக்கும் பெரிய பிராட்டிக்கும் உள்ள ஒற்றுமைகளை நோக்கும்போது நீங்கள் இருவரும் ஓர் உருவமோ என்று கருத இடமாகின்றது. (72) 

Daya Devi and Periya Piratti

O Daya Devi! There is a remarkable resemblance between You and Periya Piratti.

Periya Piratti resides eternally on the divine chest of Tiruvengadamudaiyan. Likewise, You dwell within His very heart.

Whenever Emperuman takes an Avatharam, Periya Piratti also incarnates along with Him and assists Him in His divine mission. In the same way, You never leave Him in any Avatharam and remain constantly by His side, supporting all His actions. Indeed, without compassion, what purpose would there be for His Avatharams?

Periya Piratti removes the sins of Chethanas. Similarly, wherever You are present, sins cannot remain; they flee and disappear.

Periya Piratti, the crowned Queen, is worshipped and revered by the other divine consorts such as Kshama (Bhudevi) and others. Likewise, virtues such as Kshama (forbearance) and many other noble qualities stand obediently before You and serve You.

Periya Piratti is the universal mother of all beings. You too are a mother, for You are instrumental in the creation, sustenance, and welfare of the world.

Periya Piratti grants both worldly benefits and Moksha to Chethanas. In the same manner, it is only through Your help and intercession that Chethanas are able to obtain these blessings.

Periya Piratti eternally resides in Sri Vaikuntham, possessing a divine form untouched by Tamo Guna. Likewise, You naturally dwell forever among noble Jeevans in whom Sattva Guna alone predominates and Tamo Guna has no place.

When we reflect upon all these similarities between You and Periya Piratti, one cannot help but wonder whether You both are, in truth, manifestations of a single divine reality. (72)

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Sunday, June 21, 2026

158 - Daya Shatakam - 71 - பாபிகளையும் அரவணைக்கும் தயையின் ஒப்பற்ற துணிவு - The Unmatched Courage of Daya That Embraces Even Sinners

   श्री:

जय गरुड सुपर्ण 
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

71 - பாபிகளையும் அரவணைக்கும் தயையின் ஒப்பற்ற துணிவு - The Unmatched Courage of Daya That Embraces Even Sinners

त्रिविध चिदचित् सत्तास्थेम प्रवृत्ति नियामिका 
वृषगिरि विभोरिच्छा सा त्वं परैरपराहता । 
कृपण भरभृत् किंकुर्वाण प्रभूत गुणान्तरा 
वहसि करुणे वैचक्षण्यं मदीक्षण साहसे ॥ 71 ॥

पदच्छेदः
त्रिविध चित् अचित् सत्ता स्थेम प्रवृत्ति नियामिका 
वृषगिरि विभो: इच्छा सा त्वं परै: अपराहता । 
कृपण भर भृत् किंकुर्वाण प्रभूत गुणान्तरा 
वहसि करुणे वैचक्षण्यं मत् ईक्षण साहसे ॥ 71 ॥

करुणे — தயாதேவியே !
त्रिविध — மூவகைப்பட்ட
चित् अचित् — சேதநம் அசேதநம் இவற்றின்
सत्ता — ஸ்வரூபத்தையும்
स्थेम — இருப்பையும்
प्रवृत्ति — செயலையும்
नियामिका  — நியமிப்பவளாய்
 परै:  — பிறரால்
अपराहता — தடுக்கப்படாதவளாய்
कृपण — பேதைகளின்
भर भृत्  — பொறுப்பைத் தாங்குமவளாய்
किंकुर्वाण  — குற்றேவல் புரிகின்ற
प्रभूत — பெருமையுள்ள
गुणान्तरा — மற்றைக் குணங்களையுடையளாய்
वृषगिरि विभो: — திருமலையிலுள்ள பிரபுவின்
इच्छा — விருப்பத்தின்  வடிவாயுள்ள
सा — அத்தகைய
त्वं — நீ
मत् ईक्षण — என்னைக் கடாக்ஷிப்பது என்ற
साहसे — துணிவுச் செயலில்
वैचक्षण्यं — ஸாமர்த்யத்தை
वहसि — தாங்கி நிற்கின்றாய்.

பாபிகளையும் அரவணைக்கும் தயையின் ஒப்பற்ற துணிவு

தயாதேவியே! சேதநர் மூவகைப்படுவர். (1) பத்தர் (ஸம்ஸாரத்தில் உழல்பவர்) (2) முக்தர்-(மோக்ஷம் பெற்றவர்) (3) நித்யர் (நித்யஸூரிகள்). அசேதநமும் மூவகைப்படும். (1) ப்ரக்ருதி (2) காலம் (3) சுத்தஸத்துவம். இந்த மூவகைச் சேதந-அசேதநங்களுடைய ஸ்வரூபம்-அவை நீடித்து நிற்றல்-அவற்றின் செயல் ஆகிய அனைத்தையும் நீ தான் நடத்துகின்றாய். உன் போக்கை எவரும் தடுக்கமுடியாது. பக்தி யோகமென்னும் கடின உபாயத்தைச் செய்யமுடியாது வருந்துமவர்கள் ப்ரபத்தியைச் செய்கின்றனர். அவர்களைக் காக்கும் பொறுப்பு முழுதையும் நீயே ஏற்றுக்கொண்டுவிடுகின்றாய். எம்பெருமானுடைய மற்ற உயர்ந்த குணங்கள் அனைத்தும் உன்னைப் பேரரசியாய் வைத்து உனக்குத் தொண்டுபுரிகின்றன. திருவேங்கடநாதனுடைய ஆசையே தான் நீ. தயை என்பது தன் பயனைக் கருதாது பிறர் துன்பம் துடைக்க விரும்புவது தானே? இத்துணைப் பெருமைகளுடன் எல்லோரினும் எல்லாவற்றினும் மேம்பட்டு நிற்கும் நீ மிகத் துணிவான ஒரு செயலைச் செய்கின்றாய். என்னுடைய ஸம்பந்தம் உனக்கு வந்தால் உனக்கும் பெருமை குறையுமோ என்று அஞ்சும்படி அவ்வளவு கொடிய பாபங்களைச் செய்தவன் யான். இத்தகைய என்னையும் நான் செய்யும் ப்ரபத்தியென்னும் எளிய உபாயத்தைக் கொண்டு என்னைக் குளிரக் கடாக்ஷிக்கின்றாய். இச்செயலைச் செய்ய உன்னையன்றி வேறு எவருக்கும் துணிவும் ஆற்றலும் வருமோ? இது உனக்கே உரிய ஒரு தனிப் பண்பைக் காட்டுகின்றது. (71) 

The Unmatched Courage of Daya That Embraces Even Sinners

O Daya Devi!

Sentient beings (Chethanas) are of three kinds:

1.      Baddhas – those who wander in Samsara.

2.      Muktas – those who have attained Moksha.

3.      Nityas – the Nitya Suris who are eternally free.

Insentient entities (Achethanas) are also of three kinds:

1.      Prakriti – primordial matter.

2.      Kala – time.

3.      Suddha Sattvam – the pure spiritual substance of the divine realm.

The Swaroopam (essential nature), Sthithi (continued existence), and Pravritthi (functions and activities) of all these categories are sustained and governed by You. No one can obstruct Your course.

There are many who suffer because they are unable to perform the difficult path of Bhakti Yoga. Such people resort to Prapatti, the simple and accessible means. The moment they surrender, You take upon Yourself the entire responsibility of protecting them.

All the other exalted Kalyana Gunas of Emperuman stand around You like attendants serving their Empress.

Indeed, You are nothing but the very compassionate will of Tiruvengadanathan.

What is Daya? It is the desire to remove the suffering of others without seeking any benefit for oneself.

Though You possess such immeasurable greatness and stand above all beings and all things, You perform an act of astonishing boldness.

I am one who has committed such terrible sins that one may wonder whether even You would lose some of Your glory by associating with me.

Yet, when I perform the simple act of Prapatti, You cast Your cooling and comforting glance upon me.

Who other than You would possess the courage and power to do such a thing?

Who else would willingly accept and protect one burdened with such grave sins?

This reveals a unique quality that belongs to You alone.

Your greatness is not merely in protecting the virtuous; it lies in embracing even the most fallen Jeevathmas and making them worthy of salvation through Your boundless compassion. (71)

Central Message

The verse highlights the extraordinary courage of Daya. While others may hesitate to associate with sinners, Daya Devi does not. She accepts even those burdened with immense sins when they approach through Prapatti, taking full responsibility for their protection and upliftment. This fearless compassion is presented as a unique and incomparable attribute of Daya.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Wednesday, June 17, 2026

154 - Daya Shatakam - 67- அமுத நதியாய் பெருகும் தயை – எம்பெருமானின் குணங்களுக்கு உயிரூட்டும் கருணை - Daya: The River of Nectar that Enlivens All Divine Qualities

 श्री:

जय गरुड सुपर्ण 
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

67- அமுத நதியாய் பெருகும் தயை – எம்பெருமானின் குணங்களுக்கு உயிரூட்டும் கருணை - Daya: The River of Nectar that Enlivens All Divine Qualities

दये दुग्धोदन्वद्व्यति युत सुधा सिन्धु नयतः 
त्वदाश्लेषान्नित्यं जनित मृत सञ्जीवन दशाः । 
स्वदन्ते दान्तेभ्यः श्रुति वदन कर्पूर गुळिकाः 
विषुण्वन्तश्चित्तं वृषशिखरि विश्वं भर गुणाः ॥ 67 ॥

पदच्छेदः
दये दुग्ध उदन्वत् व्यतियुत सुधा सिन्धु नयतः 
त्वत् आश्लेषात्  नित्यं जनित मृत सञ्जीवन दशाः । 
स्वदन्ते दान्तेभ्यः श्रुति वदन कर्पूर गुळिकाः 
विषुण्वन्त: चित्तं वृषशिखरि विश्वंभर गुणाः ॥ 67 ॥

दये - தயாதேவியே!
दुग्ध उदन्वत् - திருப்பாற்கடலுடன்
व्यतियुत - நன்றாய்க் கலந்த
सुधा सिन्धु  - அமுத நதியின்
नयतः  - முறையில்
त्वत् आश्लेषात्  – உன் கூடுதலால்
जनित मृत सञ्जीवन दशाः  - இறந்தவரைப் பிழைப்பூட்டும் நிலையுண்டாகப் பெற்றனவாய்
श्रुति वदन – வேதங்களின் வாய்க்கு
कर्पूर गुळिकाः  - பச்சைக் கருப்பூரக் குளிகைகளாய்
चित्तं - உள்ளத்தை
विषुण्वन्त - பிழிவனவாயுள்ள
वृषशिखरि  – திருமலையில் விளங்குகின்ற
विश्वंभर - ஜகத் ரக்ஷகனுடைய
गुणाः  - திவ்ய குணங்கள்
दान्तेभ्यः  - இந்திரியங்களை வென்றவர்க்கு
नित्यं - எப்பொழுதும்
स्वदन्ते - சுவைக்கின்றன.

அமுத நதியாய் பெருகும் தயை – எம்பெருமானின் குணங்களுக்கு உயிரூட்டும் கருணை
    தயாதேவியே! திருப்பாற்கடல் மிக இனிமையானது. அமுதமாகவே ஓர் ஆறு இருப்பின் அது பாற்கடலினும் மிக இனியதாயிருக்கும். அமுதத்துக்கு இறப்பவரைப் பிழைப்பூட்டும் வல்லமையுண்டு. திருப்பாற்கடலோடு அமுதவாறு சேர்ந்தால் அதன் சிறப்பைக் கூறவேண்டுமோ! திருவேங்கடநாதன் திருமலையின் உச்சியில் நின்றே உலக முழுவதும் காக்கின்றான். அவனுடைய மற்றைக் குணங்கள் அநுபவிக்கப் போக்யமாயிருப்பன. அவற்றைக் காட்டிலும் போக்யமாயிருப்பவள் நீ. அந்தக் குணங்களுடன் நீ கூடுவது பாற்கடலுடன் அமுதவாறு கூடுவது போலாகின்றது. நீ கூடுவதால் அக்குணங்களுக்கும் பெருமை அதிகமாகின்றது. தத்துவ உணர்ச்சியே இல்லாது இறந்தவர் போலுள்ள சேதநர்களை நீ உஜ்ஜீவிக்கச் செய்கின்றாய். ஸ்ரீநிவாஸனுடைய தயையாகிய உன்னால் தானே சேதநர் நல்லறிவு பெற்று கடைசியில் நற்கதி பெறுகின்றனர். உன் ஸம்பந்தத்தால் அவனுடைய மற்றைக் குணங்களும் சேதநர்களை நற்கதி சேர்க்கும் சக்தி பெறுகின்றன. இது மட்டுமோ? பச்சைக் கருப்பூரக் குளிகைகளை வாயிற்போட்டுக்கொண்டால் மணமும் சுவையும் ஏற்படுமல்லவோ? வேதத்தின் வாய்க்கு மற்றைக் குணங்கள் பச்சைக் கருப்பூரக்குளிகைகள் போலுள்ளன. அதாவது - வேதங்களின் வாயாகிய உபநிடதம் அக்குணங்களைப் புகழ்ந்து இன்புறுகின்றது. இச்சிறப்பும் அக்குணங்களுக்கு நீ கலந்து நிற்பதாலேயே வருகின்றது. மேலும் குணங்கள் தங்களை அனுபவிப்பவர்களின் உள்ளத்தைப் பிழிந்தெடுத்து நினைந்து உருகச் செய்கின்றன. இந்திரியங்களை வெளியுலகில் பட்டி மேய விடாமல் அடக்கிய பெரியோர்கள் அக்குணங்களையே எப்பொழுதும் அநுபவித்து இன்பமடைகின்றனர். நீ கலந்ததால் தானே அவற்றுக்கு இந்தச் சிறப்புக்கள். நீ இல்லாவிடில் எம்பெருமானுடைய மற்றைக் குணங்களால் சேதநர்க்கு வரும் பயன் யாது? உன் பெருமையே அனைத்துக்கும் காரணமாகும். (67)

Daya: The River of Nectar that Enlivens All Divine Qualities
O Daya Devi of Sri Venkatanatha!
The Milk Ocean is exceedingly sweet. If there were a river flowing with nectar itself, it would be even sweeter than the Milk Ocean. Nectar has the power to restore life to one who is as good as dead. If such a river of nectar were to merge with the Milk Ocean, how great would its glory be!
Sri Srinivasa stands atop Tiruvengadam and protects the entire universe. His many divine qualities are delightful to experience and contemplate. Yet, among them, You are the most delightful. When You unite with His other qualities, it is like a river of nectar joining the Ocean of Milk. Through Your presence, those qualities become even more glorious and effective.
Jeevathmas, who are spiritually lifeless due to the absence of true Tattva-jnanam, are revived by You. It is through Your compassion that they gain right understanding and ultimately attain the supreme goal. Because of Your association, the Lord’s other divine qualities also gain the power to lead Jeevans toward Moksham.
There is more. When one places green camphor pellets in the mouth, they produce both fragrance and sweetness. In a similar way, the Lord’s other qualities are like fragrant camphor pellets to the mouth of the Vedas. The Upanishads—the very mouth of the Vedas—joyfully praise and celebrate those qualities. This greatness too arises because You are present within them.
Furthermore, these divine qualities melt the hearts of those who experience them. Great Jeevans, who have withdrawn their senses from worldly distractions and brought them under control, constantly relish these qualities and rejoice in them. The reason these qualities possess such sweetness, and transformative power is Your presence within them.
Without You, what benefit could the Lord’s other qualities bring to Jeevathmas? It is Your greatness that gives purpose, power, sweetness, and saving efficacy to all of them.
Thus, O Daya Devi, you are the life, beauty, and effectiveness of all the divine qualities of Sri Srinivasa. (67)

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Monday, June 15, 2026

152 - Daya Shatakam - 65 - தயை வெள்ளமும் ஸௌசீல்யத்தின் அதிசயமும் - The Flood of Compassion and the Wonder of Saulabhyam

  श्री:

जय गरुड सुपर्ण 
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

65 - தயை வெள்ளமும் ஸௌசீல்யத்தின் அதிசயமும் - The Flood of Compassion and the Wonder of Saulabhyam

निषादानां नेता कपि कुल पतिः काSपि शबरी 
कुचेलः कुब्जा सा व्रज युवतयो माल्यकृदिति । 
अमीषां निम्नत्वं वृषगिरि पतेरुन्नतिमपि 
प्रभूतैः स्रोतोभिः प्रसभमनुकम्पे समयसि ॥ 65 ॥

पदच्छेदः
निषादानां नेता कपि कुल पतिः काSपि शबरी 
कुचेलः कुब्जा सा व्रज युवतय: माल्यकृत् इति । 
अमीषां निम्नत्वं वृषगिरि पते: उन्नतिम् अपि 
प्रभूतैः स्रोतोभिः प्रसभम् अनुकम्पे समयसि ॥ 65 ॥

अनुकम्पे — கருணையே!
निषादानां — வேடர்களுக்கு
नेता — தலைவனான குகன்
कपि कुल पतिः — வானரக் குழுத்தலைவனான ஸுக்ரீவன்
काSपि शबरी  — ஒரு வேடுவச்சி
कुचेलः  — இழிவான உடையுடுத்த குசேலன்
सा कुब्जा — அந்தக் கூனி
व्रज युवतय:  — ஆயர் குலத்து மங்கையர்
माल्यकृत् इति  — மாலாகாரர் என்ற
अमीषां — இவர்களின்
निम्नत्वं — தாழ்வையும்
वृषगिरि पते:: — திருவேங்கடநாதனுடைய
उन्नतिम् अपि  — உயர்வையும்
प्रभूतैः  — மிகப் பெரிய
स्रोतोभिः  — வெள்ளங்களால்
प्रसभम् — வலிமையாக
समयसि — ஸமமாக்குகின்றாய்.

தயை வெள்ளமும் ஸௌசீல்யத்தின் அதிசயமும்

தயாதேவியே! மேலும் பள்ளமுமான இடத்தில் ஒரு பெரிய வெள்ளம் வந்தால் மேட்டிடத்தைத் தாழ்த்தியும் பள்ளத்தை உயர்த்தியும் சம பூமியாக்கிவிடும். அவ்வாறே நீ உனது வெள்ளத்தால் மலைமீது உள்ள திருவேங்கடமுடையானை வலியப் பிடித்திழுத்து மிகத் தாழ்ந்தவர்களோடு சமமாய்க் கலந்து பரிமாறும்படி செய்கின்றாய். பிறருக்குத் துன்பம் விளைவிப்பதையே இயல்பாகக்கொண்ட வேடுவர் மரபினர்க்குத் தலைவன் குஹன். ஸர்வேசுவரனான ஸ்ரீநிவாஸனை இராமாவதாரத்தில் அந்தக் குஹனிடம் தோழமை கொள்ளச் செய்தாய்! வானர ஜாதிக்குத் தலைவனை ஸுக்ரீவனைத் தனக்கு ஆருயிர்த் தோழ எனக் கொண்டாடச் செய்தாய்! வேடர் குலத்துப் பிறந்து காட்டில் திரிந்த சபரி கொடுத்த தீங்கனிகளை ஏற்று அவளுக்கு நற்கதி கொடுக்கச் செய்தாய்! உடுத்தற்கு உரிய உடையுமின்றிக் கந்தையை அணிந்து குசேலப் பெயர்கொண்ட அந்தணனுடன் கிருஷ்ணாவதாரத்தில் விசித்திர முறையில் கூடிக் கலக்கச் செய்தாய்! கண்டவர் வெறுப்புக்கு இலக்கான ஒரு கூனியை மிக அழகிய இளங்குமரியாகச் செய்தாய்! அறிவு வாஸனையேயில்லாத இடைக்குலத்து மங்கையர் மனமகிழ அவர்களுடன் அவனைக் கலந்து நிற்கச் செய்தாய்! மாலை கட்டி விற்று வாழ்க்கை நடத்திய மாலாகாரர் இல்லம் சென்று அவருக்குப் பரிபூர்ண அநுக்ரஹம் செய்யுமாறு செய்தாய்! தயாதேவியே! இப்படி ஸர்வேசுவரனாய்ப் புருஷோத்தமனான திருவேங்கட நாதனை நின் பெரிய வெள்ளங்களால் வலியப் பிடித்திழுத்துத் தாழ்ந்தவர்களுடன் சமமாய்க் கூடிக்கலந்து மகிழும்படி செய் தவள் நீ தானே! கருணையில்லாவிடில் எம்பெருமான் இப்படித் தாழ்ந்தவர்களுடன் சமமாய்க் கலப்பது ஒருபோதும் முடியாது. மிக மேம்பட்டவன் மிகத் தாழ்ந்தவனோடு இடையீடின்றிக் கலந்து பரிமாறுதலென்னும் ஸௌசீல்ய குணம் எம்பெருமானுக்குத் தயையாகிய உன்னாலேயே நிலைநிற்கின்றது. (65) 

The Flood of Compassion and the Wonder of Saulabhyam

O Daya Devi!

When a great flood flows across uneven land, it levels the terrain by lowering the high places and raising the low places until everything becomes even. In the same way, through the mighty flood of your compassion, you draw down Tiruvengadamudaiyan, who stands exalted upon the lofty Tiruvengada Hill, and make Him mingle freely and lovingly with the humblest of beings.

You made Him, during His incarnation as Rama, form a deep friendship with Guha, the chief of the hunter tribe, whose way of life was far removed from refined society.

You made Him embrace Sugriva, the king of the Vanaras, as His beloved friend and ally.

You made Him accept the fruits lovingly offered by Shabari, a forest-dwelling devotee, and grant her the highest spiritual destiny.

In His incarnation as Krishna, you made Him lovingly associate with Kuchela, the poor Brahmana clad in worn garments and living in poverty.

You made Him bless Kubja, the hunchbacked woman who was despised by society, transforming her into a beautiful young lady.

You made Him mingle joyfully with the cowherd maidens (Gopis), who possessed no formal learning or scholarly accomplishments, delighting their hearts with His presence.

You made Him visit the home of Maalakara, the garland-maker who earned his livelihood by selling flower garlands, and shower him with complete grace.

Thus, O Daya Devi, it is you who seize the Supreme, the Purushottama, in the flood of your compassion and draw Him toward those who are lowly, humble, and seemingly insignificant. You make Him mix with them freely, lovingly, and without distinction.

Without compassion, such conduct would be impossible. How could the Supreme Being, infinitely exalted above all, mingle without reservation with those who stand so far below Him?

It is only because of you that the Lord's sublime quality of Souseelyam shines forth.

Souseelyam is the divine virtue by which one who is infinitely great associates naturally, affectionately, and without any sense of superiority with those who are lowly and insignificant. This incomparable quality of the Lord stands firmly established only through the influence of your boundless compassion. (65)

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Monday, May 25, 2026

131 - Daya Shatakam - 44 - எம்பெருமானின் அனந்த ஆனந்த அனுபவத்திற்குக் கொண்டு செல்லும் கருணை - Compassion that Leads to the Infinite Experience of the Lord

 श्री:

जय गरुड सुपर्ण 
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

44 - எம்பெருமானின் அனந்த ஆனந்த அனுபவத்திற்குக் கொண்டு செல்லும் கருணைCompassion that Leads to the Infinite Experience of the Lord

यस्मिन् दृष्टे तदितर सुखै: गम्यते गोष्पदत्वं 
सत्यं ज्ञानं त्रिभिरवधिभि: मुक्त मानन्द सिन्धुम् । 
त्वत्स्वीकारात् तमिह कृतिनः सूरि बृन्दानुभाव्यम् 
नित्यापूर्वं निधिमिव दये निर्विशन्त्यञ्जनाद्रौ ॥ 44 ॥

पदच्छेदः
यस्मिन् दृष्टे तत् इतर सुखै: गम्यते गोष्पदत्वं 
सत्यं ज्ञानं त्रिभि: अवधिभि:  मुक्तम् आनन्द सिन्धुम् । 
त्वत्स्वीकारात् तम् इह कृतिनः सूरि बृन्द अनुभाव्यम् 
नित्य अपूर्वं निधिमिव दये निर्विशन्ति अञ्जन अद्रौ ॥ 44 ॥

दये - தயாதேவியே!
यस्मिन् - எந்தப் பரம புருஷன்
दृष्टे - காணப்பட்டால்
तत् इतर सुखै: - அவனையன்றி மற்ற இன்பங்களால்
गोष्पदत्वं – பசுவின் குளப்படியின் தன்மை
गम्यते - அடையப்படுகின்றதோ
सत्यं - மாறுபாடு அற்றவனாய்
ज्ञानं — ஜ்ஞானவடிவாய்
त्रिभि: — மூன்று
अवधिभि: — எல்லைகளால்
मुक्तम् — விடுபட்டவாய்
आनन्द सिन्धुम् — ஆநந்தக்கடலாய்
सूरि बृन्द— நித்யஸூரிகளின் கூட்டத்தால்
अनुभाव्यम् — அநுபவிக்கப்படுவாய்
नित्य अपूर्वं  — எப்பொழுதும் புதியனாய்த் தோற்றுவனாயுள்ள
तम् — அந்த ஸ்ரீநிவாஸனை
त्वत्स्वीकारात्  — நீ ஏற்றுக்கொண்டதால்
कृतिनः  — பாக்கியம் பெற்றவர்கள்
इह — இந்த ஸம்ஸாரமண்டலத்தில்
अञ्जन अद्रौ  — திருவேங்கடமலையில்
निधिमिव — நிதியையப்போல்
निर्विशन्ति — அநுபவிக்கின்றனர்.

எம்பெருமானின் அனந்த ஆனந்த அனுபவத்திற்குக் கொண்டு செல்லும் கருணை

தயாதேவியே! ஸ்ரீநிவாஸனுடைய ஸ்வரூபம் எந்நாளும் மாறுபாட்டை அடையாது; அசேதநப் பொருள்களைப்போல் உருவத்தில் மாறுபாடு கிடையாது; ஜீவாத்மாவைப் போல் ஸ்வபாவத்தில் மாறுபாடு கிடையாது. அவன் ஸ்வரூபம் எப்பொழுதும் ஜ்ஞானவடிவாகவே பிரகாசிக்கும். அவனை "இன்ன இடத்தில் இருக்கிறான். இன்ன இடத்தில் இல்லை" என்று இடத்தைக்கொண்டு அளவிடமுடியாது. "இந்த ஸமயத்தில்  இருக்கிறான். இந்த ஸமயத்தில் இல்லை" என்று காலத்தாலும் அளவிடமுடியாது; "இன்ன வஸ்துவின் வடிவமாக உள்ளான், இன்ன வஸ்துவின் வடிவமாக இல்லை" என்று வஸ்துவாலும் அளவிடமுடியாது. எல்லா இடத்திலும் எல்லா காலத்திலும் எல்லா வஸ்துவாகவும் விளங்குகின்றான்; எல்லையற்ற ஆநந்தக் கடலாயுள்ளான்; நித்ய ஸூரிகளும் முக்தர்களும் இடைவிடாது அவனை அநுபவித்துக் கொண்டேயிருக்கின்றனர். எத்தனை காலம் அநுபவித்தாலும் அவ்வப்பொழுது புதியனாய்த் தோன்றி உள்ளத்தைக் கவர்கின்றான். இத்தகைய எம்பெருமானை அநுபவிக்கப்பெற்றால் மற்ற ஸகல ஸுகங்களும் (பிரமனது போகம் உள்பட) மிக ற்பமாய்த் தோன்றும். கடலைக் காண்பவனுக்குப்  பசுவின் குளம்பினடியில் தேங்கியுள்ள நீரைக் காண்பதுபோல் மற்ற ஸுகங்கள் அவ்வளவு அற்பமாய்த் தோன்றும். இவ்வாறு  எம்பெருமானை அநுபிப்பதற்குக் கருணையாகிய நீ மனம் வைக்கவேண்டும். சேதநர்களை நீ ஏற்றுக்கொண்டுவிட்டால் அவர் மிகவும் பாக்கியசாலிகளாவர். இத்தகைய புண்யசாலிகள் திருவேங்கடமலையில் உன் உதவியால் ஸ்ரீநிவாஸனை ஒரு நிதியாகக்கொண்டு அநுபவிக்கப்பெறுகின்றனர். (44) 

Compassion that Leads to the Infinite Experience of the Lord

O Goddess of Compassion! The Swaroopam of Lord Srinivasa never undergoes any change. Unlike insentient objects, His form does not transform. Unlike the Jeevathma, His nature never changes. His true nature always shines as pure Jñānam. He cannot be limited by place and described as “present here and absent elsewhere.” He cannot be limited by time and said to exist only at one moment and not at another. Nor can He be limited by any object and described as belonging only to one form and not another. He exists everywhere, at all times, and in all things. He is an infinite ocean of bliss. Nitya Suris and Mukthas continuously experience Him without interruption.

No matter how long they experience Him, He appears ever fresh and new, constantly attracting their hearts. Once a person gains the experience of such a Lord, all other pleasures—including even the enjoyments of Brahma—appear insignificant. Just as the vast ocean makes the little water collected in a cow’s hoof-print seem worthless, all worldly pleasures become trivial before the bliss of experiencing Him.

O Compassion! You must decide to grant beings this divine experience of the Lord. Once you accept a person, that person becomes truly fortunate. Such blessed Jeevathmas, through your grace, experience Lord Srinivasa in Tiruvengadam as the greatest treasure. (45) 

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Tuesday, May 19, 2026

125 - Daya Shatakam - 38 - ஸம்ஸார சமுத்திரத்தை கடத்தும் கருணைப் படகு - Compassion, the Boat Across the Ocean of Samsara

    श्री:

जय गरुड सुपर्ण 
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

38 - ஸம்ஸார சமுத்திரத்தை கடத்தும் கருணைப் படகு - Compassion, the Boat Across the Ocean of Samsara

दिशि दिशि गति विद्भिर्देशिकैर्नीयमाना 
स्थिरतरमनुकम्पे स्त्यान लग्ना गुणैस्त्वम् । 
परिगत वृषशैलं पारमारोपयन्ती 
भव जलधि गतानां पोत पात्री भवित्री ॥ 38 ॥

पदच्छेदः
दिशि दिशि गति विद्भि: देशिकै: नीयमाना 
स्थिर तरम् अनुकम्पे स्त्यान लग्ना गुणै: त्वम् । 
परिगत वृषशैलं पारम् आरोपयन्ती 
भव जलधि गतानां पोत पात्री भवित्री ॥ 38 ॥

अनुकम्पे - தயையே!
गति विद्भि: - நல்வழியை அறிகின்ற
देशिकै: - ஆசார்யர்களால்
दिशि दिशि - அந்த அந்தத் திசையில்
नीयमाना - செலுத்தப்படுமவளாய்
गुणै:- நற்கணங்களாகிய கயிறுகளால்
स्थिर तरम्  - மிக உறுதியாக
स्त्यान लग्ना  - பிரியாமல் கட்டப்பட்டவளாய்
परिगत वृषशैलं - திருவேங்கடமலையைச் சேர்ந்த
पारम् - எம்பெருமானாகிற கரையில்
आरोपयन्ती - ஏற்றிவிடுமவளான
त्वम् - நீ
भव जलधि गतानां - ஸம்ஸார ஸமுத்திரத்திலிருப்பவருக்கு
पोत पात्री  - ஓடமாகக் கருதத்தக்கவளாய்
भवित्री - ஆகின்றாய்.

ஸம்ஸார சமுத்திரத்தை கடத்தும் கருணைப் படகு

உலகில் கடலில் மூழ்கியவர்களைப் பெரிய படகுகளில் ஏற்றிக் கரை சேர்ப்பது முறை. படகோட்டிகள் கரைக்குச் செல்லும் வழிகளை நன்கு அறிவர். படகுகள் சங்கிலி கயிறு இவற்றால் மிக உறுதியாகக் கட்டப்பட்டிருக்கும். படகோட்டிகள் இத்தகைய படகுகளில் மக்களை ஏற்றி அவரவர் செல்லவேண்டிய திசைகளில் செலுத்திக் கரை சேர்ப்பர். தயாதேவியே! உன்னை ஒரு படகெனக் கூறலாம். ஸ்ரீநிவாஸனுடைய ஜ்ஞானம்-சக்தி முதலிய குணங்கள் சங்கிலி - கயிறுகளாக உன்னைச் சூழ்ந்து நிற்கின்றன. ஆசார்யர்களே படகோட்டிகளாவர். அவர்கள் சேதர்களுக்குக் காட்டவேண்டிய நல்வழிகளை அறிந்தவர்கள். அவ்வாசார்யர்கள் சேதர்களை உன் துணைகொண்டு திருவேங்கடமுடையானிடம் கொண்டு சேர்க்கின்றனர். அவன்தான் அடையவேண்டிய கரையாயுள்ளான். ஆகவே நீ ஸம்ஸார ஸமுத்திரத்தில் ஆழ்ந்தவர்களைக் கரைசேர்க்கும் படகாய் விளங்குகின்றாய். 

சேதநர்கள் ஸம்ஸாரத்தில் அல்லல்படுகின்றனர். ஆசார்யர்கள் சேதநர்கள் மோக்ஷம் பெறுவதற்கு ஏற்ற ப்ரபத்தியை நன்கு அறிந்தவர்கள். அவர்கள் சேதநர்களை நல்லுபதேசத்தால் திருத்தி, ப்ரபத்தியைச் செய்வித்து அவர்கள்பால் எம்பெருமானுக்குக் கருணை பெருகுமாறு செய்கின்றனர். எம்பெருமானுடைய ஞானம் சக்தி முதலிய குணங்களும் கருணைக்கு வசமாகித் துணைபுரிந்து வலிமையூட்டுகின்றன. இந்தக் கருணையால் சேதநர்கள் திருவேங்கடமுடையானைச் சரணடைந்து அவனது கடாக்ஷத்தால் மோக்ஷானந்தத்தைப் பெறுகின்றனர். (38) 

Compassion, the Boat Across the Ocean of Samsara

In this world, people who are drowning in the sea are rescued and brought safely to the shore in large boats. Boatmen know the proper paths that lead to the shore. The boats are held together firmly with chains and ropes. The boatmen place people in such strong boats and guide them safely to their destination.

O Goddess of Compassion! You may be compared to such a boat. The divine qualities of Lord Srinivasa—such as Jnanam and Shakthi —surround and support you like strong chains and ropes. The Acharyas are like the boatmen. They know the right path that must be shown to Jeevans. With your help, these Acharyas lead people to Tiruvengadamudaiyan, who is the safe shore to be reached. Thus, you stand as the boat that carries those drowning in the ocean of Samsara safely to the shore.

Jeevans suffer deeply in Samsara. The Aacharyas know well the means of Prapatti that leads to Moksha. Through their noble teachings, they correct Jeevans and guide them into performing Prapatti. Because of this, the Lord’s compassion begins to flow greatly toward them. His qualities such as knowledge and power also come under the influence of compassion and support it with strength. Through this compassion, Jeevans surrender to Tiruvengadamudaiyan and, by His gracious glance, attain the bliss of Moksha. (38)

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Monday, May 11, 2026

117 - Daya Shatakam - 30 - பாப சக்கரவர்த்தி சரணடைந்த கருணைச் சக்கரவர்த்தினி - The Emperor of Sins Seeking the Queen of Compassion

  श्री:

जय गरुड सुपर्ण 
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

30 -  பாப சக்கரவர்த்தி சரணடைந்த கருணைச் சக்கரவர்த்தினி - The Emperor of Sins Seeking the Queen of Compassion

अहमस्म्यपराध चक्रवर्ती 
करुणे त्वं च गुणेषु सार्वभौमी । 
विदुषी स्थितिमीदृशीं स्वयं मां 
वृषशैलेश्वर पादसात्कुरु त्वम् ॥ 30 ॥

पदच्छेदः

अहम् अस्मि अपराध चक्रवर्ती 
करुणे त्वं च गुणेषु सार्वभौमी । 
विदुषी स्थितिम् ईदृशीं स्वयं मां 
वृषश शैल ईश्वर पादसात्  कुरु त्वम् ॥ 30 ॥

करुणे — தயாதேவியே!
अहम् — நான்
अपराध  — பாபங்களுக்கு
चक्रवर्ती — சக்கரவர்த்தியாக
अस्मि — உள்ளேன்.
त्वं च — நீயும்
गुणेषु — குணங்களுக்கு
सार्वभौमी — சக்ரவர்த்தினியாக உள்ளாய்.
स्थितिम् — நிலைமையை
विदुषी त्वम् — அறிகின்ற நீ
मां— என்னை
स्वयं — தானாகவே
वृषश शैल ईश्वर — திருவேங்கட நாதனுடைய
पादसात्  — திருவடியின் கீழ் அமரும்படி
कुरु — செய்.

பாப சக்கரவர்த்தி சரணடைந்த கருணைச் சக்கரவர்த்தினி

தயாதேவியே! குற்றங்களுக்கெல்லாம் யான் சக்கரவர்த்தியாயுள்ளேன். குற்றங்களே என் ஆளுகைக்கு உள்பட்ட வஸ்துக்களாகும். நீயோ எம்பெருமானுடைய குணங்களுக்குள் சக்கரவர்த்தினியாய் உள்ளாய். மற்ற குணங்கள் அனைத்தும் உன் ஆளுகைக்கு அடங்கியனவே. இப்படி நம் இருவருக்கும் சமமாக உள்ள பெருமையை நீ நன்கு அறியவேண்டும். பெண்ணரசியான நீ என்மீது தானாகவே படையெடுத்துக் குற்றங்களென்னும் எனது இராச்சியத்தை நீ கவர்ந்துகொண்டு, என்னையும் பிடித்துத் திருவேங்கடமுடையானது திருவடியின் கீழ் சிறைப்படுத்தி வைக்கவேண்டும். குணங்கள் தலைமை பெற்ற நீ பாபகளுக்குத் தலைமைபெற்ற என் பாபங்களைத் தொலைத்து என்னைத் திருவேங்கடநாதன் தாளிணைக்கீழ் சேர்த்தருளவேண்டுமென்று பிரார்த்தித்தபடி. பாபச் சுழலில் அகப்பட்டு நிற்கும் நான் அபராத சக்கர வர்த்தி. நீ குணங்களுக்குச் சக்கரவர்த்தினி. சமமான பதவியிலுள்ளவர்கள் ஒருவருக்கொருவர் உதவிசெய்வது நியாயம் தானே! ஆதலால் கருணையாகிய நீ உனக்கும் உறைவிடமான ஸ்ரீநிவாஸன் திருவடிகளில் என்னைச் சேர்த்துவிடலாகிய இந்த உதவியை எனக்குச் செய்தருள வேண்டும்- என்றும் கருத்துக் கூறுவர். (30)

 

The Emperor of Sins Seeking the Queen of Compassion

O Goddess of Compassion! I am the emperor of all faults and sins. Sins are the subjects under my rule. You, on the other hand, are the empress among all the divine qualities of the Paramathma. All His other qualities stand under your authority. You must recognize that both of us hold positions of equal greatness in our own realms.

Therefore, you, the queen of divine qualities, should march against me, conquer my kingdom of sins, capture me, and place me as a prisoner beneath the divine feet of Paramathma Srinivasa. Since you are the leader among virtues, you must destroy the sins ruled by me, the leader among sinners, and unite me with the feet of Tiruvengadanatha.

Another inner meaning is this: I am the emperor trapped in the whirlpool of sins, while you are the empress of virtues. Is it not natural for rulers of equal rank to help one another? Therefore, you, who dwell at the feet of Srinivasa, should grant me this help also—by placing me at those very divine feet. (30)


Sunday, April 26, 2026

102 - Daya Shatakam - 15 – எல்லா குணங்களிலும் தலைசிறந்தது - Best of all Gunas

 श्री:

जय गरुड सुपर्ण 
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

05. श्री श्रीदयाशतकम्  Daya Shatakam ஸ்ரீ தயா சதகம்

15 – எல்லா குணங்களிலும் தலைசிறந்தது - Best of all Gunas 

वृषगिरि गृहमेधि गुणाः बोध बलैश्वर्य वीर्य शक्ति मुखाः । 
दोषा भवेयुरेते यदि नाम दये त्वया विनाभूताः ॥ 15 ॥

पदच्छेदः
वृषगिरि गृहमेधि गुणाः बोध बल ऐश्वर्य वीर्य शक्ति मुखाः । 
दोषा: भवेयु: एते यदि नाम दये त्वया विनाभूताः ॥ 15 ॥

दये — கருணாதேவியே! 
बोध बल — ஞானம் பலம் 
 ऐश्वर्य वीर्य — ஐச்வர்யம் வீர்யம் 
वृषगिरि गृहमेधि गुणाः: — திருமலையில் இல்லறம் நடத்தும் ஸ்ரீநிவாஸனுடைய குணங்கள்
शक्ति मुखाः — சக்தி முதலிய 
त्वया — உன்னைவிட்டு
विनाभूताः  यदि नाम — பிரிந்தவைகளாய் இருக்குமேயாகில்                                        
एते — இந்தக் குணங்கள் 
दोषा: — தோஷங்களாகவே
भवेयु: — ஆகிவிடும்.

எல்லா குணங்களிலும் தலைசிறந்தது

தயாதேவியே! உலகம் முழுதையும் தன் குடும்பமாகக் கொண்டுள்ள ஸ்ரீநிவாஸன் திருவேங்கடமலையில் பிராட்டிமாருடன் இல்லறம் நடத்துகின்றான். அவனுக்கு உள்ள எண்ணற்ற குணங்களுள் முக்கியமானவை ஆறு. அவை ஜ்ஞானம் - பலம் - ஐச்வர்யம் - வீர்யம் - சக்தி - தேஜஸ் என்பன. இந்த ஆறு குணங்களையுடைமையாலேயே அவன் பகவாந் எனப்படுகின்றான். அக்குணங்கள் அவனிடம் உன்னுடன் சேர்ந்திருப்பதாலேயே அவை நல்வழியில் பயன்பட்டுக் குணங்களெனப் பெருமை பெறுகின்றன. நீ கூடாவிடில் அக்குணங்கள் சேதநருக்கு எம்பெருமான் தண்டனையாகிய தீங்கு செய்யப் பயன்படுதலின் தோஷங்களாகவே ஆகி விடும். உதாரணமாக-ஜ்ஞானம் பலம் முதலிய குணங்கள் சேதநரிடம் உள்ள குற்றங்களைப் பார்த்தல்-அவர்களை நன்கு தண்டித்தல் முதலிய செயல்களுக்குப் பயன்படும். ஆதலால் அந்தக் குணங்கள் தோஷங்களாகிவிடும். தயாதேவியாகிய நீ கூடியிருந்தால் உன் வலிமை ஓங்கி நிற்குமாதலின் அக்குணங்கள் அனைத்தும் உன் பக்கம் சேர்ந்து சேதநர்களைக் காப்பதற்கே துணை நிற்கும். இத்தகைய பெருமையாலேயே குணங்களுள் நீ தலைசிறந்து நிற்கின்றாய். (15)

 Best of all Gunas

O Goddess of Compassion! Lord Srinivasa, who considers the whole world as His family, lives in Tiruvengadam with His divine consorts. Among His countless qualities, six are the most important—Jnana (knowledge), Bala (strength), Aishvarya (wealth), Veerya (valor), Shakti (power), and Tejas (radiance). Because He possesses these six qualities, He is called Bhagavan. However, these qualities become truly noble and beneficial only when they are joined with you, Compassion. Without you, these same qualities can turn into faults, as they may be used to see the mistakes of people and punish them strictly. For example, knowledge and strength could be used to identify faults and give punishment, which would only harm the Jeevan. But when you, as Daya Devi, are present, your influence rises above all, and these qualities align with you and work only to protect and uplift beings. Because of this greatness, you stand as the highest among all divine qualities. (15)

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Sunday, April 12, 2026

088 - Daya Shatakam - 01 - கருணையே வடிவெடுத்த திருமலையிடம் சரணாகதி - Saranagathi to Tirumalai, the Embodiment of Compassion

 श्री:

जय गरुड सुपर्ण 
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


01 - கருணையே வடிவெடுத்த திருமலையிடம் சரணாகதி - Saranagathi to Tirumalai, the Embodiment of Compassion
प्रपद्ये तं गिरिं प्रायः श्रीनिवासानुकम्पया । 
इक्षु सार स्रवन्त्येव यन्मूर्त्या शर्करायितम् ॥ 1 ॥

पदच्छेदः
प्रपद्ये तं गिरिं प्रायः श्रीनिवास अनुकम्पया । 
इक्षु सार स्रवन्त्या इव यत् मूर्त्या शर्करायितम् ॥ 1 ॥

इक्षु सार — கருப்பஞ்சாற்றுலாகிய 
स्रवन्त्या इव  — ஆறுபோன்ற
श्रीनिवास अनुकम्पया  — ஸ்ரீநிவாஸனது கருணை
प्रायः — பெரும்பாலும்
यत् मूर्त्या  — எந்த மலை வடிவமெடுத்து
शर्करायितम् — சர்க்கரை (பருக்காங்கல்) ஆயிற்றே
तं गिरिं — அந்தத் திருவேங்கட மலையை
प्रपद्ये — சரணமடைகின்றேன்.

கருணையே வடிவெடுத்த திருமலையிடம் சரணாகதி

திருவேங்கடமலையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீநிவாஸனது எல்லையற்ற கருணை அடியார்களிடம் வெள்ளமிட்டு ஓடுகின்றது. அக்கருணை அநுபவிக்க இனியதாயுள்ளது: கரும்பின் சாறு தானே ஓர் ஆறாய்ப் பெருகினாற் போலுள்ளது; கரும்பின் சாறு கடைசியில் சருக்கரையாகிக் கனமாய் உறைந்து கற்கண்டாக ஆவதுதானே இயல்பு. ஸ்ரீநிவாஸனது கருணை வெள்ளமென்னும் கருப்பஞ்சாற்றின் ஆறு இந்தத் திருவேங்கடமலையென்னும் வடிவுகொண்ட சருக்கரையாகிப் பின்னும் கனமாய் உறைந்து அனைவரும் அநுபவிக்க ஏற்றதாயுள்ளது. இந்தக் கருணைதான் இந்தத் திருமலை வடிவமாய்த் தோன்றியது. கருணை குணங்களுக்குள் தலைசிறந்தது; அடியார்களின் குற்றங்களைப் பொறுக்கச் செய்வது; வேண்டிய பலன்களையெல்லாம் அளிக்கச் செய்வது; ஆற்று வெள்ளம்போல் தடையற்று அடியார்கள் மீது பெருகுவது; மலைபோல் அசைக்க முடியாதது. இத்தகைய கருணையே வடிவெடுத்த திருமலையைச் சரணமடைகின்றேன். (1) 

Surrender to Tirumalai, the Embodiment of Compassion

The boundless compassion of Srinivasa, who resides in Tiruvengadam, flows like a great flood towards His devotees. This compassion is sweet to experience—like sugarcane juice flowing as a river. Just as sugarcane juice finally thickens and becomes sugar candy, His flowing compassion has taken a solid form as the Tiruvengadam hill, making it easy for all to experience. This sacred hill itself is the very form of His compassion. Among all divine qualities, compassion is the greatest—it makes Him forgive the faults of devotees, grant all that they seek, flow towards them without obstruction like a flood, and remain firm and unshakable like a mountain. I surrender to this Tirumalai, which is the very embodiment of such compassion. (1)

Notes by Sri:

இந்த ச்லோகத்தில் கூறப்பட்டுள்ள உவமைகள் :

எம்பெருமானின் கருணை — இனிமைமிக்கது, பெருக்கெடுத்து ஓடுவது, எளிதில் அனுபவிக்கக் கூடியது, மற்றும் அசைக்க முடியாததாக இருந்து திருமலை வடிவில் வெளிப்பட்டுள்ளது.

உவமை (எடுத்துக்காட்டு)

உள்ளார்ந்த பொருள்

பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்

எம்பெருமானின் எல்லையற்ற கருணை அடியார்களிடத்தில் தடையின்றி பெருகுவது

ஆறாய் ஓடும் கரும்புச் சாறு

கருணையின் இனிமை மற்றும் அனுபவிக்கத் தகுதியான தன்மை

கரும்புச் சாறு சருக்கரையாகிக் கற்கண்டாகுதல்

கருணை திருவேங்கடமலையாக உறுதியான வடிவம் எடுத்து அனைவரும் அனுபவிக்க ஏற்றதாக மாறுதல்

மலை

அசைக்க முடியாத, நிலையான, உறுதியான கருணை

 Similes explained in this sloka:

The Paramathma's karuai (compassion) is sweet, overflowing, accessible, and firm—finally taking form as Tirumalai, so that all devotees can easily experience it.

Simile (Example)

Spiritual Meaning

A great flood flowing

The Paramathma's compassion flowing abundantly toward devotees

Sugarcane juice flowing like a river

The sweetness and enjoyability of His compassion

Sugarcane juice becoming sugar candy

Compassion taking a firm, tangible form as Tiruvengadam

A mountain (hill)

The Paramathma's compassion being steady, strong, and unshakable

 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


Monday, April 6, 2026

Abheethi Stavam - 24 - பெருமாளின் கருணையை தூண்டும் பெரிய பிராட்டி & பூமிப் பிராட்டி - Periya Piratti and Bhoomi Piratti Who Invoke the Lord’s Compassion

 श्री:

जय गरुड सुपर्ण 
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

 4.श्री अभीतिस्तवः Abheethi Stavam ஸ்ரீ அபீதிஸ்தவம்

24- பெருமாளின் கருணையை தூண்டும் பெரிய பிராட்டி & பூமிப் பிராட்டி - Periya Piratti and Bhoomi Piratti Who Invoke the Lord’s Compassion 

मनु प्रभृति मानिते महति रङ्गधामादिके 
दनु प्रभव दारुणै: दरमुदीर्यमाणं परैः । 
प्रकृष्ट गुणक श्रिया वसुधया च सन्धुक्षितः 
प्रयुक्त करुणोदधिः प्रशमय स्वशक्त्या स्वयम् ॥ 24 ॥

पदच्छेदः
मनु प्रभृति मानिते महति रङ्गधामादिके 
दनु प्रभव दारुणै: दरम् उदीर्यमाणं परैः । 
प्रकृष्ट गुणक श्रिया वसुधया च सन्धुक्षितः 
प्रयुक्त करुणा उदधिः प्रशमय स्वशक्त्या स्वयम् ॥ 24 ॥

प्रकृष्ट गुणक - உயர்ந்த குணங்களையுடையவனே! 
मनु प्रभृति - மநு முதலியவர்களால் 
मानिते - பூஜிக்கப்பட்ட 
महति - பெருமை பெற்ற 
रङ्गधामादिके - திருவரங்கம் முதலியவற்றில் 
दनु प्रभव - அசுரர்களைக்  காட்டிலும் 
दारुणै: - கொடியவர்களான 
परैः - பகைவர்களால் 
उदीर्यमाणं - விளைவிக்கப்படுகின்ற 
दरम् - பயத்தை 
श्रिया - பெரிய பிராட்டியாலும் 
वसुधया च - பூமிப்பிராட்டியாலும் 
सन्धुक्षितः - தூண்டப்பெற்றவனாய் 
प्रयुक्त करुणा उदधिः - கருணையெனும் கடலைப் பயன்படுத்தியவனாய் 
स्वशक्त्या - உனது சக்தியால் 
स्वयम् - தானே 
प्रशमय - ஒழித்தருள்.

பெருமாளின் கருணையை தூண்டும் பெரிய பிராட்டி & பூமிப் பிராட்டி

உன்னிடம் எல்லையற்ற உயர்ந்த திருக்கல்யாண குணங்கள் நிரம்பியிருக்கின்றன. ஆனால் அவற்றுள் கருணையென்னும் குணத்தையே சேதநர்பால் மிகுதியாகப் பயன்படுத்திக் கருணைக்கடலென்று வழங்கப் பெறு கின்றாய். இங்கு உள்ள ஸ்ரீரங்க விமாநம் முதலியன மநு மாந்தாதா முதலிய மஹான்களால் மிகப் போற்றிப் பூஜிக்கப் பட்டுள்ளன. இங்கு உள்ள எதிரிகளோ அசுரர்களைக் காட்டிலும் மிக்க கொடுமை விளைவிப்பவர்களாயுள்ளார்கள். அவர்களால் இந்த விமாநம் முதலியவற்றுக்குப் பெருந்தீங்கு விளையுமோ என்ற அச்சம் உண்டாகின்றது. அவ்வாறு தீங்கு வராது பாதுகாத்து இவ்வச்சத்தை ஒழித்தருள வேண்டுமென்று பெரிய பிராட்டியும் பூமிப் பிராட்டியும் உன்னை வேண்டிக்கொள்வார்கள். நீ உன் கருணையைப் பயன்படுத்தி உனது ஒப்பற்ற சக்தியால் தானே முன்னின்று எங்களது அச்சத்தைப் போக்கியருள வேண்டும். 

Periya Piratti and Bhoomi Piratti Who Invoke the Lord’s Compassion

O Lord Ranganatha! You are filled with countless divine and auspicious qualities, but among them, Your compassion shines the most, and so You are known as an ocean of mercy. The sacred Sriranga Vimanam and other holy elements here have been worshipped with great reverence by great Jeevans like Manu and Mandhata. But now, there are enemies here who are even more harmful than asuras, and there is fear that they may cause great damage to this sacred place. To prevent such harm and remove this fear, Periya Piratti and Bhoomi Piratti themselves will pray to You. Therefore, You must use Your compassion and unmatched power, take the lead, and protect us by removing our fear.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Tuesday, March 31, 2026

Abheeti Stavam - 18 - சரணாகதன் மேல் பெருமாளின் அக்கறை - Care for the Surrendered Jeevan

     श्री:

जय गरुड सुपर्ण 
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

 4.श्री अभीतिस्तवः Abheethi Stavam ஸ்ரீ அபீதிஸ்தவம்

18 - சரணாகதன் மேல் பெருமாளின் அக்கறை - Care for the Surrendered Jeevan

निसर्ग निरनिष्टता तव निरंहसः श्रूयते 
ततस्त्रियुग सृष्टिवत् भवति संहृतिः क्रीडितम् । 
तथाऽपि शरणागत प्रणय भङ्ग भीतो भवान् 
मदिष्टमिह यद्भवेत् किमपि मास्म तज्जीहपत् ॥ 18 ॥

पदच्छेदः
निसर्ग निरनिष्ट ता तव निरंहसः श्रूयते 
तत: त्रि युग सृष्टिवत् भवति संहृतिः क्रीडितम् । 
तथा अपि शरणागत प्रणय भङ्ग भीत: भवान् 
मत् इष्टम् इह यत् भवेत् किमपि मास्म तत् जीहपत् ॥ 18 ॥

त्रि युग - ஆறு குணங்களையுடையனே! 
निरंहसः  - பாபமற்ற 
तव  -உனக்கு 
निसर्ग  - இயற்கையாகவே 
निरनिष्ट ता  - துக்கமற்ற தன்மை 
श्रूयते  - வேதத்தில் கூறப்படுகின்றது 
तत: - ஆதலின் 
सृष्टिवत्  - படைத்தலைப் போல் 
संहृतिः  - அழித்தலும் 
क्रीडितम्  - விளையாட்டாக 
भवति  - ஆகின்றது.
तथा अपि  - அப்படியிருந்தும் 
शरणागत  - சரணமடைந்தவனுடைய 
प्रणय  - விருப்பத்தை 
भङ्ग  - மறுப்பதற்கு 
भीत:  - அஞ்சிய 
भवान्  - நீ 
इह  - இவ்வுலகில் 
यत् - எது 
मत् इष्टम् - எனக்கு விரும்புவதற்கு ஏற்றதாக 
भवेत्  - இருக்குமோ 
तत्  - அதை 
किमपि  - ஒன்றையும் 
मास्म जीहपत्  - விடாமல் செய்தருள வேண்டும்.

சரணாகதன் மேல் பெருமாளின் அக்கறை
திருவரங்க நகரப்பனே! நீ ஜ்ஞாநம்-சக்தி-பலம்-ஐச்வர்யம்- வீர்யம் - தேஜஸ் என்னும் ஆறு குணங்கள் நிறைந்த பரம புருஷன். உனக்குப் பாபம் என்பது கிடையாது. ஆதலின் "நீ இயற்கையாகவே துக்கமற்றவன்" என்று உபநிஷத்துக் கூறு கின்றது. ஆகவே நீ என்னை அழித்தாலும் அதுவும் உலகத்தைப் படைத்தல் போலவே உன் ஸங்கல்பத்தால் நடக்கும் விளையாட்டுச் செயலாகவே ஆகுமன்றி அதனால் உனக்கு ஒரு தீங்கும் இல்லை. ஆனால் உனக்கும் ஓர் அச்சமுண்டு. அது உன்னைச் சரணமடைந்தவனுடைய விருப்பத்தை நிறைவேற்றாமல் மறுத்துவிட்டால் அவனுடைய நட்புக்கு முறிவு வந்துவிடுமே என்ற அச்சம்தான். ஆதலின் சரணமடைந்தவனுக்கு நன்மை புரிவதிலேயே கருத்துக் கொண்டிருப்பாய். அடியேன் உன்னைச் சரணமடைந்தவன். அடியேனுக்கு எது நன்மை என்பதை நீயே கண்டு அதைச் செய்யப் பின்வாங்காது செய்தருள வேண்டும்.

Care for the Surrendered Jeevan
O Lord of Srirangam! You are the Supreme Being, filled with the six divine qualities—Jnana (knowledge), Shakti (power), Bala (strength), Aishvarya (wealth), Veerya (valor), and Tejas (radiance). You have no sin, and so the Upanishads say that You are naturally free from sorrow. Even if You destroy me, it would only be like Your act of creation—done by Your divine will as a form of play, without causing You any harm. Yet, You have one kind of concern: if You fail to fulfill the wish of one who has surrendered to You, it would break that devotee’s trust and relationship with You. Therefore, You always focus on doing good to those who surrender to You. I am one such surrendered Jeevan. Please decide what is truly good for me and grant it without holding back.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Sunday, March 22, 2026

Abheethi Stavam - 09 - பெருமாளின் திருக்குணங்களின் காப்பாற்றும் சக்தி - The Protecting Power of the Perumal’s gunas

    श्री:

जय गरुड सुपर्ण 
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

 4.श्री अभीतिस्तवः Abheethi Stavam ஸ்ரீ அபீதிஸ்தவம்

9- பெருமாளின் திருக்குணங்களின் காப்பாற்றும் சக்தி - The Protecting Power of the Perumal’s gunas

त्रिवर्ग पथ वर्तिनां त्रिगुण लङ्घनोद्योगिनां 
द्विषत्प्रमथनार्थिनाम् अपि च रङ्ग दृश्योदयाः । 
स्खलत्समय कातरी हरण जागरूकाः प्रभो 
कर ग्रहण दीक्षिताः क इव ते न दिव्या गुणाः ॥ 9 ॥

पदच्छेदः
त्रिवर्ग पथ वर्तिनां त्रिगुण लङ्घन उद्योगिनां 
द्विषत् प्रमथन अर्थिनाम् अपि च रङ्ग दृश्य उदयाः । 
स्खलत्समय कातरी हरण जागरूकाः प्रभो
कर ग्रहण दीक्षिताः के इव ते न दिव्या गुणाः ॥ 9 ॥

प्रभो - பிரபுவான அரங்கனே ! 
रङ्ग दृश्य - திருவரங்கத்தில் புலப்படுகின்ற 
उदयाः - தோற்றமுடையனவான
ते - உன்னுடைய 
के इव दिव्या गुणाः - எந்தச் சிறந்த குணங்கள் தாம் 
त्रिवर्ग पथ - அறம் பொருள் இன்பம் என்னும் மூன்றின் வழியில் 
वर्तिनां - முயல்பவருக்கும்
त्रिगुण लङ्घन - ஸம்ஸாரத்தைக் கடந்து மோக்ஷம் பெறுவதில்
उद्योगिनां - முயற்சியுடையாருக்கும்
द्विषत् प्रमथन - பகைவர்கள் ஒழிவதை 
अर्थिनाम् अपि च - விரும்புமவர்க்கும் 
स्खलत्समय - தவறும் ஸமயங்களில் வருகின்ற 
कातरी हरण - அச்சத்தை ஒழிப்பதில் 
जागरूकाः - கவனமுடையனவாய் 
कर ग्रहण - கைகொடுத்துக் காப்பதில்
दीक्षिताः - விரதங்கொண்டனவாய்
न - இல்லை?

பெருமாளின் திருக்குணங்களின் காப்பாற்றும் சக்தி

திருவரங்கனென்னும் பிரபுவே! இவ்வுலகில் அறம் - பொருள் - இன்பம் ஆகிய இம்மைப் பயன்களையே விரும்பி அவற்றுக்காக முயற்சி கொள்கின்றனர் பலர். சிலர் ஸத்துவம் - ரஜஸ் - தமஸ் ஆகிய முக்குணங்களையுடைய இந்த ஸம்ஸார மண்டலத்தைக் கடந்து மோக்ஷம் பெற விரும்பி அதற்கான செயலைச் செய்கின்றனர். இன்னும் சிலர் அர்ச்சை வடிவு கொண்டு இங்கு எழுந்தருளியுள்ள உன்னை அநுபவித்து மகிழத் தடையாய் நிற்கும் பகைவர்கள் ஒழியவேண்டுமென்று விரும்பு கின்றனர். அவர்கள் தாம் விரும்பும் பலன்களுக்காக ஏற்ற சாதனங்களைச் செய்யும்போதும் மற்ற காலங்களிலும் தவறுகள் நேருவதும் அதனால் அவர்களுக்குப் பலன் வராமற்போகுமோ, என்ன தீங்கு வருமோ?” என்ற அச்சம் விளைவதும் இயற்கையே. அவ்வாறு அச்சம் வரும்போது அவர்கள் இத்தலத்தில் அமர்ந்துள்ள உன் திருக்கல்யாண குணங்களை அநுஸந்திக்கின்றனர். உன் குணங்கள் அவர்களின் முயற்சியில் தவறு நேரும்போது விழித்திருந்து அவர்களின் அச்சத்தைப் போக்கிக் கைதூக்கி விட்டுக் காப்பதை விரதமாகக் கொண்டுள்ளன. ஆதலின் அவர்கள் விரும்பிய பலனைப் பெறுகின்றனர். உன்னுடைய எந்தக் குணம்தான் இத்தகைய சிறப்புடையதன்று? எல்லாக் குணங்களும் ஒப்பற்று உயர்ந்து விளங்குகின்றன. 

The Protecting Power of the Perumal’s gunas

O Lord Ranganatha! In this world, many people try to gain the worldly goals of dharma (virtue), artha (wealth), and kama (pleasure). Some others wish to cross this samsara, which is ruled by the three qualities—sattva, rajas, and tamas—and try to attain moksha. There are also some who want their enemies and obstacles removed so that they can happily experience You, who are present here in the archa form.

While trying to achieve these goals, people may make mistakes in their efforts. Because of this, they may feel afraid and wonder, “Will we fail? Will something bad happen?” When such fear arises, they think about Your divine and auspicious qualities as You reside in this holy place. Your qualities stay alert and remove their fears when mistakes happen. They protect them and help them succeed. Because of this, they receive the results they desire. Indeed, which of Your qualities does not have such greatness? All of them shine with unmatched glory.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Friday, March 20, 2026

Abheethi Stavam - 07 - நாமஸங்கீர்தன மகிமை - The glory of NamaSankeerthanam

  श्री:

जय गरुड सुपर्ण 
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

 4.श्री अभीतिस्तवः Abheethi Stavam ஸ்ரீ அபீதிஸ்தவம்

7 - நாமஸங்கீர்தன மகிமை - The glory of NamaSankeerthanam

रमा दयित रङ्गभू रमण कृष्ण विष्णो हरे 
त्रिविक्रम जनार्दन त्रियुग नाथ नारायण । 
इतीव शुभदानि यः पठति नामधेयानि ते 
न तस्य यम वश्यता नरक पात भीतिः कुतः ॥ 7 ॥

पदच्छेदः
रमा दयित रङ्गभू रमण कृष्ण विष्णो हरे 
त्रिविक्रम जनार्दन त्रियुग नाथ नारायण । 
इति इव शुभदानि यः पठति नामधेयानि ते 
न तस्य यम वश्यता नरक पात भीतिः कुतः ॥ 7 ॥

रमा दयित - பெரிய பிராட்டிக்கு நாயகனே ! 
रङ्गभू रमण - திருவரங்கத்தை விரும்பி வாழுமவனே ! 
कृष्ण - கண்ணபிரானே!
विष्णो - எங்கும் வியாபித்து நிற்பவனே! 
हरे - பாபங்களைப் போக்குமவனே! 
त्रिविक्रम - மூவடிகள் வைத்து அளந்தவனே! 
जनार्दन பிறவியை ஒழிக்குமவனே! 
त्रियुग - ஆறு குணங்களையுடையவனே! 
नाथ - தலைவனே! 
नारायण - நாராயணனே! 
इति इव - இவை போன்ற 
शुभदानि - நன்மையைத் தரவல்ல 
ते नामधेयानि - உன் திருநாமங்களை 
यः - எவன் 
पठति - படிக்கின்றானோ
तस्य - அவனுக்கு 
यम वश्यता - யமனுக்கு வசப்படும் தன்மை 
न - இல்லை 
नरक पात भीतिः - நரகத்தில் விழும் அச்சம்  
कुतः - ஏது?

நாமஸங்கீர்தன மகிமை

திருவரங்கனே! "பெரிய பிராட்டிக்கு நாயகனே! திருவரங்கத்தில் மகிழ்ச்சியோடு உறைபவனே! கண்ணபிரானே ! எல்லாப் பொருள்களிலும் வியாபித்திருப்பவனே! எல்லாருடைய பாபங்களையும் போக்குமவனே! த்ரிவிக்ரமாவதாரத்தில் மூவடிகளால் உலகை அளந்தவனே! பிறவியை ஒழிக்குமவனே ! ஜ்ஞாநம் - சக்தி - பலம் - ஐச்வர்யம் - வீர்யம்-தேஜஸ் என்னும் ஆறு குணங்களையுடையவனே! எல்லோர்க்கும் தலைவனே! நாராயணனே !" என்பன போன்ற பொருள் தருவனவாய், சேதநர்க்கு நன்மை பயப்பனவான உன் திருநாமங்களை உச்சரிப்பவன் யமன் கையில் அகப்படமாட்டான். இப்படியிருக்க நரகத்தில் விழவேண்டுமே என்ற அச்சத்திற்கு இடம் ஏது? 

The glory of NamaSankeerthanam

O Lord Ranganatha! O Consort of Periya Piratti! O One who joyfully resides in Srirangam! O Krishna! O One who pervades all things! O Remover of the sins of all beings! O One who measured the worlds with three strides in the Trivikrama incarnation! O One who ends the cycle of birth! O One who possesses the six divine qualities—knowledge, power, strength, wealth, valor, and radiance! O Supreme Lord of all! O Narayana! Whoever utters these sacred names of Yours—which carry such meanings and bring great benefit to all beings—will never fall into the hands of Yama. If this is so, where is the place for the fear of falling into hell?

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸