श्री:
श्रीमते निगमान्त महादेशिकाय नम:
65 - தயை வெள்ளமும் ஸௌசீல்யத்தின் அதிசயமும் - The Flood of Compassion and the Wonder of Saulabhyam
தயை வெள்ளமும் ஸௌசீல்யத்தின் அதிசயமும்
தயாதேவியே! மேலும் பள்ளமுமான இடத்தில் ஒரு பெரிய வெள்ளம் வந்தால் மேட்டிடத்தைத் தாழ்த்தியும் பள்ளத்தை உயர்த்தியும் சம பூமியாக்கிவிடும். அவ்வாறே நீ உனது வெள்ளத்தால் மலைமீது உள்ள திருவேங்கடமுடையானை வலியப் பிடித்திழுத்து மிகத் தாழ்ந்தவர்களோடு சமமாய்க் கலந்து பரிமாறும்படி செய்கின்றாய். பிறருக்குத் துன்பம் விளைவிப்பதையே இயல்பாகக்கொண்ட வேடுவர் மரபினர்க்குத் தலைவன் குஹன். ஸர்வேசுவரனான ஸ்ரீநிவாஸனை இராமாவதாரத்தில் அந்தக் குஹனிடம் தோழமை கொள்ளச் செய்தாய்! வானர ஜாதிக்குத் தலைவனை ஸுக்ரீவனைத் தனக்கு ஆருயிர்த் தோழ எனக் கொண்டாடச் செய்தாய்! வேடர் குலத்துப் பிறந்து காட்டில் திரிந்த சபரி கொடுத்த தீங்கனிகளை ஏற்று அவளுக்கு நற்கதி கொடுக்கச் செய்தாய்! உடுத்தற்கு உரிய உடையுமின்றிக் கந்தையை அணிந்து குசேலப் பெயர்கொண்ட அந்தணனுடன் கிருஷ்ணாவதாரத்தில் விசித்திர முறையில் கூடிக் கலக்கச் செய்தாய்! கண்டவர் வெறுப்புக்கு இலக்கான ஒரு கூனியை மிக அழகிய இளங்குமரியாகச் செய்தாய்! அறிவு வாஸனையேயில்லாத இடைக்குலத்து மங்கையர் மனமகிழ அவர்களுடன் அவனைக் கலந்து நிற்கச் செய்தாய்! மாலை கட்டி விற்று வாழ்க்கை நடத்திய மாலாகாரர் இல்லம் சென்று அவருக்குப் பரிபூர்ண அநுக்ரஹம் செய்யுமாறு செய்தாய்! தயாதேவியே! இப்படி ஸர்வேசுவரனாய்ப் புருஷோத்தமனான திருவேங்கட நாதனை நின் பெரிய வெள்ளங்களால் வலியப் பிடித்திழுத்துத் தாழ்ந்தவர்களுடன் சமமாய்க் கூடிக்கலந்து மகிழும்படி செய் தவள் நீ தானே! கருணையில்லாவிடில் எம்பெருமான் இப்படித் தாழ்ந்தவர்களுடன் சமமாய்க் கலப்பது ஒருபோதும் முடியாது. மிக மேம்பட்டவன் மிகத் தாழ்ந்தவனோடு இடையீடின்றிக் கலந்து பரிமாறுதலென்னும் ஸௌசீல்ய குணம் எம்பெருமானுக்குத் தயையாகிய உன்னாலேயே நிலைநிற்கின்றது. (65)
The Flood of Compassion and
the Wonder of Saulabhyam
O Daya
Devi!
When a
great flood flows across uneven land, it levels the terrain by lowering the
high places and raising the low places until everything becomes even. In the
same way, through the mighty flood of your compassion, you draw down
Tiruvengadamudaiyan, who stands exalted upon the lofty Tiruvengada Hill, and
make Him mingle freely and lovingly with the humblest of beings.
You made
Him, during His incarnation as Rama, form a deep friendship with Guha, the
chief of the hunter tribe, whose way of life was far removed from refined
society.
You made
Him embrace Sugriva, the king of the Vanaras, as His beloved friend and ally.
You made
Him accept the fruits lovingly offered by Shabari, a forest-dwelling devotee,
and grant her the highest spiritual destiny.
In His
incarnation as Krishna, you made Him lovingly associate with Kuchela, the poor
Brahmana clad in worn garments and living in poverty.
You made
Him bless Kubja, the hunchbacked woman who was despised by society,
transforming her into a beautiful young lady.
You made
Him mingle joyfully with the cowherd maidens (Gopis), who possessed no
formal learning or scholarly accomplishments, delighting their hearts with His
presence.
You made
Him visit the home of Maalakara, the garland-maker who earned his livelihood by
selling flower garlands, and shower him with complete grace.
Thus, O
Daya Devi, it is you who seize the Supreme, the Purushottama, in the flood
of your compassion and draw Him toward those who are lowly, humble, and
seemingly insignificant. You make Him mix with them freely, lovingly, and
without distinction.
Without
compassion, such conduct would be impossible. How could the Supreme Being,
infinitely exalted above all, mingle without reservation with those who stand
so far below Him?
It is only
because of you that the Lord's sublime quality of Souseelyam shines
forth.
Souseelyam is the divine virtue by which one who is infinitely great associates naturally, affectionately, and without any sense of superiority with those who are lowly and insignificant. This incomparable quality of the Lord stands firmly established only through the influence of your boundless compassion. (65)