श्री:
जय गरुड सुपर्ण
श्रीमते निगमान्त महादेशिकाय नम:
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
66 - தயா கடாக்ஷத்தின் மகிமை - The Glory of Daya’s Graceful Glance on Brahma Shivan Indran
त्वया दृष्टस्तुष्टिं भजति परमेष्ठी निज पदे
वहन् मूर्तीरष्टौ विहरति मृडानी परिबृढः ।
बिभर्ति स्वाराज्यं वृषशिखरि शृङ्गारि करुणे
शुनासीरो देवासुर समर नासीर सुभटः ॥ 66 ॥
पदच्छेदः
त्वया दृष्ट: तुष्टिं भजति परमेष्ठी निज पदे
वहन् मूर्ती: अष्टौ विहरति मृडानी परिबृढः ।
बिभर्ति स्वाराज्यं वृष शिखरि शृङ्गारि करुणे
शुनासीर: देव असुर समर नासीर सुभटः ॥ 66 ॥
वृष शिखरि — திருவேங்கட மலையில்
शृङ्गारि — உல்லாஸ புருஷனாக விளங்கும் ஸ்ரீநிவாஸனுடைய
करुणे — தயாதேவியே!
त्वया — உன்னால்
दृष्ट: — கடாக்ஷிக்கப்பட்ட
परमेष्ठी — பிரமதேவன்
निज पदे — தனது ஸ்தாநத்தில்
तुष्टिं — மகிழ்ச்சியை
भजति — அடைகின்றான்.
मृडानी परिबृढः — பார்வதிக்கு நாயகனான சிவன்
अष्टौ — எட்டு
मूर्ती: — உருவங்களை
वहन् — தரித்துக்கொண்டு
विहरति — விளையாடுகின்றான்.
शुनासीर: — இந்திரன்
देव असुर — தேவாசுரர்களின்
समर नासीर — போர்முனையில்
सुभटः — சிறந்த வீரனாய்
स्वाराज्यं — சொர்க்கத்தின் ஆட்சியை
बिभर्ति — தாங்குகின்றான்.
தயா கடாக்ஷத்தின் மகிமை
திருவேங்கடமலையில் உல்லாஸ புருஷனாய் விளங்கும் ஸ்ரீநிவாஸனுடைய தயாதேவியே! எல்லாத் தேவரினும் உயர்ந்த பிரமதேவன் மிக மேம்பட்ட தன் ஸ்தாநத்தில் இருந்து கொண்டு மிக்க மகிழ்ச்சி கொண்டுள்ளான். இதற்குக் காரணம் யாது? தயாதேவியாகிய உன் கடாக்ஷம்தான். நீ கடாக்ஷிக்கா விடில் அவனுக்கு இந்த ஸ்தாநமே எப்படி கிடைக்கும்? மஹேச்வரன் என்று பெயர் பெற்ற சிவன், பூமி - ஜலம் - தேஜஸ் - வாயு - ஆகாயம் - சந்திரன் - சூரியன் - யஜமாநன் என்ற எட்டுக்கும் அபிமாநி தேவதையாய்த் தன் மனைவியான பார்வதியுடன் உல்லாஸமாய் பொழுது போக்குகின்றான். எதனால்? உன் கடாக்ஷம் அவன்மீது விழுவதாலேயே. தேவேந்திரன் தேவாசுர யுத்தத்தில் போர்முனையில் ஒப்பற்ற வீரனாய் நின்று வெற்றிகொண்டு ஸ்வர்க்க ஸாம்ராஜ்யத்தை ஏகபோகமாய் ஆள்கின்றான். எதனால்? உன் கடாக்ஷம் பெற்றதாலேயே. இப்படி மிகப் பெருமைபெற்ற தேவர்களெல்லாம் தந்தம் ஸ்தாநத்தைப் பெறுவதும் அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் தந்தம் அதிகாரத்தைச் செவ்வனே நடத்திப்போவதும் தயாதேவியாகிய உனது கடாக்ஷத்தாலேயே ஆவன. 66
The Glory of Daya’s Graceful Glance on Shivan Indran
O Daya Devi of Srinivasa, who shines in joyous majesty upon the sacred Tiruvengada Hill!
Brahma, the highest among the devas, rejoices in his exalted position and carries out the work of creation. What is the reason for this greatness? It is none other than your gracious glance. Without your favor, how could he have attained such a lofty status?
Likewise, Shiva, known as Maheshvara, presides over the eight manifestations associated with earth, water, fire, air, space, moon, sun, and yajamana, and joyfully carries out his divine functions along with Parvati Devi. How is this possible? Only because your compassionate glance rests upon him.
Similarly, Indra stands unrivaled on the battlefield of wars between devas and asuras, wins victory, and rules the kingdom of heaven in splendor. What gives him such power and authority? It is your grace alone.
Thus, all these highly exalted devas attain their respective positions, perform their duties successfully, and enjoy peace, prosperity, and fulfillment only because they have received the glance of your compassion.
Your grace is the unseen force behind every position of greatness. The authority of Brahma, the glory of Shiva, and the sovereignty of Indra all rest upon the foundation of your merciful glance. (66)
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸