Saturday, April 11, 2026

Desika Stotram - 05 - Daya Shatakam

                                                                                     श्री:

Jaya Garuda Suparna
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

4.  श्री श्रीदयाशतकम् [88-195] 
Daya Shatakam ஸ்ரீ தயா சதகம்

·        Composed by Swami Vedanta Desikan

·        Language - Sanskrit

·        On Thirumala Srinivasan

·        Composed at TBD

·        Slokas count - 108

·        Benefits:  Those who recite this daily will surely receive the divine grace of Lord Venkatesa and attain all auspicious blessings.

 [முன்னுரை]

திருவேங்கடமுடையானது கருணையென்னும் குணத்தைப் பற்றிப் பாடிய நூறு சுலோகங்கள் (மேலும் எட்டு) கொண்டதாதலின் இந்த ஸ்தோத்ரத்துக்கு இத் திருநாமத்தை ஸ்ரீ தேசிகன் தாமே இட்டருளினார். எம்பெருமான் எண்ணற்ற திருக்கல்யாண குணங்களை உடையனாயிருப்பினும் அவனுடைய மற்றைக் குணங்களும் தரம் பெறுவது இந்தக் கருணையாலேயே யாதலின் இதன் உயர்வைப் பலகாலும் இந்த ஸ்தோத்ரத்தில் ஸ்ரீ தேசிகன் வெளியிட்டருளுகின்றார். மற்றைக் குணங்கள் போலன்றி இந்தக் கருணை சேதநர்களைக் காப்பதற்கே உடலாயிருப்பது பற்றி இதையே விஷயமாக்கி இதனை அருளிச்செய்தார்.

இதிலுள்ள பத்துப் பதிகங்களும் பத்து வகையான விருத்தங்களில் அமைக்கப் பெற்று அநுஸந்திப்பவர்க்கு மிக்க இன்பத்தை விளைவிப்பன. ஸ்வாமி, கருணையை ஒரு பிராட்டியாகவே உள்ளத்துக் கொண்டு அத்தேவியோடு பேசும் முறையிலேயே இதை அமைத்திருப்பதும் சுவைதற்கு உரித்து. ஸ்ரீ தேசிகன் அருளிய ஒவ்வொரு நூலும் மிக்க சிறப்புடைத்தையாயினும் இந்த ஸ்தோத்ரத்தின் அமைப்பு அதியற்புதமான ஒப்பற்ற ஒரு தெய்வீகச் செயலாய்த் திகழ்கின்றது. இந்நூலில் ப்ரபத்தியைப் பற்றி அடிக்கடி வலியுறுத்திப் பேசியிருப்பது அதன் உயர்வை மக்கள் அறிந்து அதைத் தாங்களும் கைக்கொள்ள உடலாயிருக்கின்றது. இதன் முடிவில் திருவேங்கடமுடையான் தானே வந்து தம்மை வேதாந்த தேசிகனாக முடிசூட்டி இந்த ஸ்தோத்ரத்தைப் பாடுவித்ததாக ஸ்வாமியே அருளிச் செய்கின்றார். இதைத் தினந்தோறும் பாராயணம் செய்பவர்கள் திருவேங்கடமுடையானுடைய திவ்யகடாக்ஷத்துக்கு இலக்காகி ஸகல மங்களங்களையும் பெறுவது உறுதி.

[Preface]

TheStotra Daya Shatakam, composed of one hundred and eight slokas praising the quality of compassion of Lord Venkatesa, was given this sacred name by Sri Desikan himself. Though the Lord possesses countless divine qualities, all His other qualities shine because of His compassion. That is why Sri Desikan repeatedly highlights the greatness of this compassion throughout the stotra. Unlike other qualities, this compassion exists mainly to protect all beings, and so he chose this as the central theme of the work.

The ten sections in this stotra are set in ten different poetic meters and give great joy to those who recite and reflect on them. Swami Desikan beautifully presents compassion as a divine consort and structures the work as a dialogue with Her, which adds to its sweetness. Though every work of Sri Desikan is great, the structure of this stotra is uniquely divine and unmatched. The repeated emphasis on prapatti in this work helps people understand its importance and follow it in their lives. At the end, Swami himself says that Lord Venkatesa appeared, crowned him as Vedanta Desika, and made him compose this stotra. Those who recite this daily will surely receive the divine grace of Lord Venkatesa and attain all auspicious blessings.

Slokas

முதல் பதிகம் - அனுஷ்டுப் விருத்தம்
प्रपद्ये तं गिरिं प्रायः श्रीनिवासानुकम्पया । 
इक्षु सार स्रवन्त्येव यन्मूर्त्या शर्करायितम् ॥ 1 ॥

विगाहे तीर्थ बहुळां शीतळां गुरु सन्ततिम् । 
श्रीनिवास दयाम्भोधि परीवाह परम्पराम् ॥ 2 ॥

कृतिनः कमलावास कारुण्यैकान्तिनो भजे । 
धत्ते यत्सूक्ति रूपेण त्रिवेदी सर्वयोग्यताम् ॥ 3 ॥

पराशर मुखान् वन्दे भगीरथ नये स्थितान् । 
कमला कान्त कारुण्य गङ्गा प्लावित मद्विधान् ॥ 4 ॥

अशेष विघ्न शमनं अनीकेश्वरमाश्रये । 
श्रीमतः करुणाम्भोधौ शिक्षा स्रोत इवोत्थितम् ॥ 5 ॥

समस्त जननीं वन्दे चैतन्य स्तन्य दायिनीम् । 
श्रेयसीं श्रीनिवासस्य करुणामिव रूपिणीम् ॥ 6 ॥

वन्दे वृषगिरीशस्य महिषीं विश्व धारिणीम् । 
तत्कृपा प्रतिघातानां क्षमया वारणं यया ॥ 7 ॥

निशामयतु मां नीळा यद्भोग पटलैर्ध्रुवम् । 
भावितं श्रीनिवासस्य भक्त दोषेष्वदर्शनम् ॥ 8 ॥

कमप्यनवधिं वन्दे करुणा वरुणालयम् । 
वृषशैल तटस्थानां स्वयं व्यक्तिमुपागतम् ॥ 9 ॥

अकिञ्चन निधिं सूतिं अपवर्ग त्रिवर्गयोः । 
अञ्जनाद्रीश्वर दयां अभिष्टौमि निरञ्जनाम् ॥ 10 ॥

இரண்டாம் பதிகம் - ஆர்யா விருத்தம்
11 தயாதேவி – பட்டமஹிஷி - DayaDevi the Supreme Queen
अनुचर शक्त्यादि गुणाम् अग्रेसर बोध विरचितालोकाम् । 
स्वाधीन वृषगिरीशां स्वयं प्रभूतां प्रमाणयामि दयाम् ॥ 11 ॥


Continue to watch this space...
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸