Saturday, May 16, 2026

122 - Daya Shatakam - 35 - திவ்ய அவதாரங்களுக்குப் பின்னுள்ள கருணை - Compassion Behind the Divine Avataras

   श्री:

जय गरुड सुपर्ण 
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

35 - திவ்ய அவதாரங்களுக்குப் பின்னுள்ள கருணை - Compassion Behind the Divine Avataras

अवतरण विशेषैरात्म लीलापदेशैः 
अवमतिमनुकम्पे मन्द चित्तेषु विन्दन् । 
वृषभ शिखरि नाथस्त्वन्निदेशेन नूनं 
भजति शरण भाजां भाविनो जन्म भेदान् ॥ 35 ॥

पदच्छेदः
अवतरण विशेषै: आत्म लीला अपदेशैः 
अवमतिम् अनुकम्पे मन्द चित्तेषु विन्दन् । 
वृषभ शिखरि नाथ: त्वत्  निदेशेन नूनं 
भजति शरण भाजां भाविन: जन्म भेदान् ॥ 35 ॥

अनुकम्पे — தயாதேவியே!
वृषभ शिखरि नाथ: : — திருவேங்கடநாதன்
त्वत्  निदेशेन— உனது கட்டளையால்
आत्म लीला  — தன் லீலைகள்என்று
अपदेशैः  — பெயர் மட்டும் கொண்ட
अवतरण विशेषै:  — விசித்திர அவதாரங்களால்
मन्द चित्तेषु — மதிகேடர்களிடத்தில்
अवमतिम् — அவமதிப்பை
विन्दन् — பெற்றுக்கொள்பவனாய்
शरण भाजां — சரணமடைந்தவர்க்காக
भाविन: — வரப்போகின்ற
जन्म भेदान् — பற்பல பிறவிகளை
भजति    — அடைகின்றான்.
नूनं — நிச்சயம்.

திவ்ய அவதாரங்களுக்குப் பின்னுள்ள கருணை

தயாதேவியே! திருவேங்கடமுடையான் மீனாயும் ஆமையாயும் பன்றியாயும் மனிதனயும் இப்படிப்பல்வேறு அவதாரங்களைச் செய்கின்றான். இந்த அவதாரங்களில் இவனுடைய பெருமையை அறியாது மதிகேடரான இரணியன் இராவணன் சிசுபாலன் முதலிய பலர் இவனைப்பற்றி இழிவாக நினைத்துப் பல்வகையிலும் அவமதித்தனர். அறிவிலிகளால் வரும் துன்பங்களுக்கும் அவமதிப்புக்கும் ஆளாகியாவது ஏன் இவன் இவ்வாறெல்லாம் அவதரிக்க வேண்டும்? இவற்றையெல்லாம் எம்பெருமான் லீலையாகக் கொண்டுள்ளனனென்று புராண வரலாறு கேட்டவர்கள் கூறுகின்றனர். இதன் உண்மைநிலை எனக்குத் தோன்றுவது யாதெனில், லீலையென்பது பெயருக்குத்தான். நீதான் திருவேங்கடநாதனை இவ்வாறு பல்வேறு பிறவிகளைக் கொள்ளுமாறு கட்டளையிட்டாய். எதற்காக? சேதனர்கள் வந்து இவனைச் சரணமடைந்து தங்கள் பாபங்கள் கழியப்பெற்று மோக்ஷம் பெற உரியராக வேண்டும். அவர்கள் பல்வேறு பிறவிகளில் பிறந்து

பல அல்லல்களில் அகப்பட்டுத் தவித்தல்லவோ பாபங்கள்  ஒழியப்பெறவேண்டும். அவர்களுக்கு அத்தகைய துன்பங்களைக் கொடுக்க நீ விரும்பவில்லை. அவர்கள் சிரமமின்றிப் பாபம் கழியப் பெறுவதற்கு நீ ஒரு யுக்தி செய்தாய். அவர்கள் எடுக்க வேண்டிய பிறவிகளை எல்லாம் ஸ்ரீநிவாஸனே எடுக்கும்படி இவனைக் கட்டளையிட்டாய். உன் கட்டளையை மீற முடியுமா இவனால்? ஆகவே அவர்களுக்குப் பல்வேறு பிறவிகளெடுக்க வேண்டிய அல்லலில்லாமற் போயிற்று. எம்பெருமானுடைய பல்வேறு திவ்ய அவதாரங்களை அவர்கள் நன்கு அநுபவித்து இவன் பெருமையை அறிந்து இவன் திருவடிகளைச் சரணடைந்து உஜ்ஜீவித்துப் போகின்றனர். இதுவே உண்மை நிலை. (35)

 Compassion Behind the Divine Avataras

O Goddess of Compassion! Lord Tiruvengadamudaiyan takes many Avataras—as a fish, tortoise, boar, man, and in many other forms. During these Avataras, ignorant people such as Hiranya, Ravana, Sisupala, and many others failed to understand His greatness. They insulted Him and treated Him with disrespect in many ways. Why should the Lord undergo such humiliation and suffering caused by ignorant people? Those who hear the stories of the Puranas say that He accepts all this merely as His divine play (Leela).

But the deeper truth, as it appears to me, is this: “Leela” is only the outward name. In reality, it was you who commanded Tiruvengadanatha to take all these different births. Why? So that beings may come, surrender to Him, have their sins removed, and become worthy of Moksha. Normally, beings themselves would have to take many births and suffer countless hardships for their sins to be exhausted. But you could not bear to see them suffer in that way.

Therefore, you devised a wonderful means. Instead of making beings undergo all those births, you made Lord Srinivasa Himself take those many births through His Avataras. Could He ever disobey your command? Because of this, beings were spared the misery of countless births. By experiencing and enjoying His many divine Avataras, they come to understand His greatness, surrender at His feet, and attain upliftment. This alone is the true inner meaning.(35)

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸