Friday, May 15, 2026

121 - Daya Shatakam - 34 - ப்ரபத்தியால் மோக்ஷம் அளிக்கும் கருணை - Compassion that Wins Moksha through Prapatti

  श्री:

जय गरुड सुपर्ण 
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

34 - ப்ரபத்தியால் மோக்ஷம் அளிக்கும் கருணை - Compassion that Wins Moksha through Prapatti

अनुभवितुमघौघं नालमागामि कालः 
प्रशमयितुमशेषं निष्क्रियाभिर्न शक्यम् । 
स्वयमिति हि दये त्वं स्वीकृत श्रीनिवासा 
शिथिलित भव भीतिः श्रेयसे जायसे नः ॥ 34 ॥

पदच्छेदः
अनुभवितुम् अघ ओघं न अलम् आगामि कालः 
प्रशमयितुम् अशेषं निष्क्रियाभि: न शक्यम् । 
स्वयम् इति हि दये त्वं स्वीकृत श्रीनिवासा 
शिथिलित भव भीतिः श्रेयसे जायसे नः ॥ 34 ॥

दये - தயாதேவியே!
अघ ओघं - பாபக் கூட்டத்தை
अशेषं - மீதியில்லாமல்
अनुभवितुम्  - (பலன்) அநுபவிப்பதற்கு
आगामि कालः  - வருங்காலம்
न अलम्  - போதாது.
निष्क्रियाभि: - பிராயச்சித்தங்களால்
प्रशमयितुम् - (அப் பாபங்களை)ஒழிப்பதற்கும்
न शक्यम्  - இயலாது.
इति - என்று (கருதி)
स्वयम् - தானே
स्वीकृत श्रीनिवासा  — ஸ்ரீநிவாஸனை வசப்படுத்திக்கொண்டு
नः श्रेयसे — எங்கள் நன்மைக்காக
त्वं — நீ |
शिथिलित भव भीतिः — ஸம்ஸார பயத்தைப் போக்கியவளாய்
जायसे हि — அமைகின்றயல்லையோ?

ப்ரபத்தியால் மோக்ஷம் அளிக்கும் கருணை

தயாதேவியே! பாபங்களை ஒருவன் செய்துவிட்டால் அவற்றின் பலனை அவன் அநுபவித்தால்தான் அவை கழியும். அல்லது சாஸ்த்ரங்களில் சொல்லப்பட்ட பிராயச்சித்தங்களைச் செய்தும் பாபங்களைக் கழிக்கலாம். நாங்கள் செய்துள்ள எல்லையற்ற பாபங்களுக்குப் பலனை நாங்கள் அநுபவித்தே கழிக்க எவ்வாறு இயலும்? ஒரு பாபத்துக்குப் பலனையே நீண்ட காலம் அநுபவிக்கவேண்டுமே! அது முடிவதற்குள் மற்றொரு பாபம் பலன் தர முற்படுமே! அந்நிலையில் புதிய பாபங்கள் வேறு வந்து சேருமே! எல்லையற்ற பாபங்களின் பலனை வருங்காலம் முழுதும் அநுபவித்தாலும் பாபங்கள் தொலையாவே! பிராயச்சித்தங்களைச் செய்து பாபங்களைக் கழிக்க முற்பட்டாலோ, அவற்றிலும் பல அல்லல்கள். தேகச் சிரமம் - பொருட்செலவு முதலியன நேர்படும். ஒரு பிராயச்சித்தம் செய்துகொண்டிருக்கையிலேயே சில பாபங்களைச் செய்ய நேரிடப் பாபங்கள் வளர்ந்துகொண்டே போகும். ஆகவே எங்கள் பாபங்களெல்லாம் இந்த வழிகளாலெல்லாம் கழியமாட்டாவென்பதை, தயாதேவியே! நீ நன்கு உணருகின்றாய். இவற்றையெல்லாம் மிக அழகாக ஸ்ரீநிவாஸனிடம் எங்களுக்காகக் கூறுகின்றாய். எங்கள் பாபங்கள் அனைத்துக்கும் பலன் தருவதென்பது அவனுக்கும் இயலாத காரியம் என்பதைப் பல யுக்திகளால் அவனுக்கு அறிவுறுத்துகின்றாய். உன் இனிய சொற்களாலே அவனை மயக்கி வசப்படுத்திக் கொள்கின்றாய். இதனால் எங்களுக்கு ஸம்ஸார பயம் குறைந்துவிடுகின்றது. உன் சொல் தட்டாத ஸ்ரீநிவாஸன் நாங்கள் செய்யும் எளிய உபாயமாகிய ப்ரபத்தியாலேயே குற்றங்களைப் பொறுத்துவிடுவானென்ற நம்பிக்கை உண்டாகின்றது. நீ தானாகவே பாடுபட்டு எங்களை ப்ரபத்தியில் மூட்டி மோக்ஷத்தை நாங்கள் பெறவும் வழி செய்கின்றாய். இவ்வாறு எங்கள் நன்மைக்காகவே நீ தோன்றியுள்ளாய். என்ன சொல்வோம் உன் பெருமையை? (34) 

Compassion that Wins Moksha through Prapatti

O Goddess of Compassion! Once a person commits sins, they can normally be removed only by experiencing their results or by performing the prescribed prayaschittams taught in the Shaastrams. But how can we possibly exhaust the results of our endless sins merely by suffering through them? Even the result of a single sin may take a long time to experience. Before one is exhausted, another sin begins to bear fruit. Meanwhile, new sins continue to arise. Thus, even if we spend all future time experiencing their results, our sins will never truly end.

If we try to remove sins through prayaschittam, there are still many difficulties—physical strain, expense, and other hardships. Worse still, while performing one act of atonement, we may commit more sins, causing them to grow further. Therefore, O Goddess of Compassion, you clearly understand that our sins can never fully be destroyed through these methods.

You explain all this beautifully to Lord Srinivasa on our behalf. With many convincing arguments, you make Him understand that even giving the full result for all our endless sins is itself impossible. Through your sweet words, you captivate and soften Him. Because of this, our fear of Samsara begins to fade. We gain faith that Lord Srinivasa, who never refuses your words, will forgive our faults through the simple upayam of Prapatti. You yourself work tirelessly to guide us toward Prapatti and make us attain Moksha. In this way, you exist solely for our welfare. What words can truly describe your greatness? (34)

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸