Sunday, May 17, 2026

123 - Daya Shatakam - 36 - கருணையின் பிரதிபிம்பங்களான ஸ்ரீ பூமி நீளா தேவிகள் - Sri Bhumi Neela Devis as Reflections of Compassion

    श्री:

जय गरुड सुपर्ण 
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

36 - கருணையின் பிரதிபிம்பங்களான ஸ்ரீ பூமி நீளா தேவிகள் - Sri Bhumi Neela Devis as Reflections of Compassion

परहितमनुकम्पे भावयन्त्यां भवत्यां 
स्थिरमनुपधि हार्दं श्रीनिवासो दधानः । 
ललित रुचिषु लक्ष्मी भूमिनीळासु नूनं 
प्रथयति बहुमानं त्वत्प्रतिच्छन्द बुद्ध्या ॥ 36 ॥

पदच्छेदः
पर हितम् अनुकम्पे भावयन्त्यां भवत्यां 
स्थिरम् अनुपधि हार्दं श्रीनिवास: दधानः । 
ललित रुचिषु लक्ष्मी भूमि नीळासु नूनं 
प्रथयति बहुमानं त्वत् प्रतिच्छन्द बुद्ध्या ॥ 36 ॥

अनुकम्पे - தயாதேவியே!
पर हितम् - பிறருக்கு நன்மையையே
भावयन्त्यां - சிந்தித்துக் கொண்டுள்ள
भवत्यां - உன்னிடத்தில்
स्थिरम् - நிலையானதாய்
अनुपधि - எக்காரணத்தையும் முன்னிடாததான
हार्दं - அன்பை
दधानः  - கொண்டுள்ள
श्रीनिवास: - ஸ்ரீநிவாஸன்
ललित रुचिषु - அழகிய ஒளியுடையரான
लक्ष्मी भूमि नीळासु - பெரிய பிராட்டி - பூமிதேவி - நீளா தேவி இவர்களிடம்
त्वत् प्रतिच्छन्द बुद्ध्या  - உன் பிரதிபிம்பங்கள் என்ற எண்ணத்தால்
बहुमानं - பெருமதிப்பை
प्रथयति - காட்டுகின்றான்.
नूनं - நிச்சயம்.

கருணையின் பிரதிபிம்பங்களான ஸ்ரீ பூமி நீளா தேவிகள்

தயாதேவியே! நீ ஒருத்தியே பிறருக்கு நன்மை புரிவதையே சிந்தித்துக்கொண்டிருப்பவள். இத்தன்மை வேறு ஒருவருக்கும் இல்லை. ஸ்ரீநிவாஸன் காரணமின்றி இயற்கையாகவே உன்னிடம் நிலையான மனப்பூர்வமான அன்பு பூண்டுள்ளான். பெரிய பிராட்டி - பூமிதேவி - நீளாதேவி ஆகிய தேவிகள் கண்ணைக் குளிர்விக்கும் அழகு படைத்தவர்கள். அவர்களிடத்தும் ஸ்ரீநிவாஸன் மிகுந்த கௌரவ புத்தி கொண்டுள்ளான். இதற்குக் காரணம் தெரியுமா? அவர்களும் உன் நிழல்களே என்று சொல்லும்படி உன் தன்மையை ஓர் அளவுக்குக் கொண்டுள்ளனர். உன்னுடைய சாயல்கள் (பிரதிபிம்பங்கள்) அவர்கள் என்ற எண்ணத்தாலேயே அவர்கள்பால் எம்பெருமான் மதிப்புக் கொண்டுள்ளான். அப்பொழுது உன்னிடம் அவனுக்கு எத்தகைய மதிப்பு இருக்குமென்பதைக் கூறவும் வேண்டுமோ? (36) 

Sri Bhumi Neela Devis as Reflections of Compassion 

O Goddess of Compassion! You alone constantly think only about doing good to others. No one else possesses this quality to such an extent. Lord Srinivasa naturally and unconditionally holds a deep and steady love for you. Periya Piratti, Bhoomi Devi, and Neela Devi are all filled with beauty that delights the eyes, and the Lord greatly honors them as well. Do you know the reason for this? It is because they possess, to some extent, your very nature. They appear like reflections or shadows of you. Since they carry the qualities of compassion that belong to you, the Lord holds them in great esteem. If He shows such respect to those who are but reflections of you, then how great must be the honor and love He has for you yourself! ( 36)

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸