श्री:
श्रीमते निगमान्त महादेशिकाय नम:
திருமலையருகில்
வாழ்பவர்களை காக்கும் கருணை
தயாதேவியே! திருவேங்கடமலையிலேயே வசிக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. மலைக்கு அருகிலுள்ள இடங்களில் வசித்தாலும் போதும். " இது புண்ணிய க்ஷேத்திரம். இங்கு வசித்தால் நற்கதி பெறலாம்" என்ற எண்ணத்துடன் வசிக்க வேண்டுமென்பதுமில்லை. வயிற்றுப் பிழைப்பு முதலியவற்றில் ஏதாவது ஒன்றை நாடி வசித்தாலும் போதும். இப்படி மலையருகில் வசிப்பவர்கள் எத்தனைப் பாபங்கள் புரிந்தாலும் அவர்கள் வருந்தாதிருக்க, அவர்களுக்காக நீ வருந்துகின்றாய். அவர்களுக்குப் பாபங்களின் தீய விளைவு வருமே என்று நீ வருந்தி அவர்களுக்கு உதவி புரிகின்றாய். எத்தகையது அவ்வுதவி? அந்தப் பாபிகளையும் ப்ரபத்தியில் மூட்டி அவர்களின் மரண காலத்தில் இந்திரியங்கள் அனைத்தும் ஒடுங்கி நினைவுகளையெல்லாம் அவர்கள் இழந்திருக்கும்போது இந்த மலையில் பல திருவிளையாடல்களைப் புரிந்துகொண்டு பிராட்டியுடன் எழுந்தருளியுள்ள திருவேங்கடமுடையான் அவர்களை நினைக்குமாறு மிக்க கருத்துடன் செய்கின்றாய். பின் அந்தப் பாபிகளும் இறுதிக்காலத்தில் எம்பெருமானை நினைத்து நற்கதி பெறுமாறு செய்கின்றாய். இதற்குக்காரணம் திருமலையருகில் வசித்தலேயாகும். (37)
Compassion that Grants
Grace to Those Near Tirumala
O Goddess
of Compassion! It is not absolutely necessary for a person to live directly on
Tiruvengadam hill itself. Even living in places near the hill is enough. Nor is
it necessary that one must stay there with the noble thought, “This is a sacred
kshetram, and by living here I will attain liberation.” Even if a person lives
there merely for livelihood or some worldly reason, it is still enough.
Even if
such people commit many sins, you do not allow them to fall into sorrow.
Instead, you yourself feel concern for them, worrying that they may suffer the
consequences of their sins. Out of compassion, you come to their help. What is
this help? You gently guide even such sinners toward Prapatti. Then, at the
time of death, when all their senses weaken and their memories fade away, you
make them remember Lord Tiruvengadamudaiyan—the Lord who performs many divine
leelas on this sacred hill and resides there with Piratti. Thus, even those
sinners remember Him at the final moment and attain a good destiny. The reason
for such grace is simply their living near Tirumala. (37)