Saturday, May 30, 2026

136 - Daya Shatakam - 49 - ஜாயமான கடாக்ஷமும் மோக்ஷ மார்க்கமும் - The Grace-filled Glance that Leads to Moksha

  श्री:
जय गरुड सुपर्ण 
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

49 - ஜாயமான கடாக்ஷமும் மோக்ஷ மார்க்கமும் - The Grace-filled Glance that Leads to Moksha

श्रेयः सूतिं सकृदपि दये संमतां यः सखीं ते
शीतोदारामलभत जनः श्रीनिवासस्य दृष्टिम् ।
देवादीनामयमनृणतां देहवत्त्वेऽपि विन्दन्
बन्धान्मुक्तो बलिभिरनघैः पूर्यते तत्प्रयुक्तैः ॥ 49 ॥
 
पदच्छेदः
श्रेयः सूतिं सकृत् अपि दये संमतां यः सखीं ते
शीत उदाराम् अलभत जनः श्रीनिवासस्य दृष्टिम् ।
देव आदीनाम् अयम् अनृणतां देहवत्त्वे अपि विन्दन्
बन्धात् मुक्त: बलिभि: अनघैः पूर्यते तत्प्रयुक्तैः ॥ 49
 
दये — தயாதேவியே!
श्रेयः सूतिं — மோக்ஷத்திற்குக் காரணமாய்
शीत उदाराम् — குளிர்ந்து வள்ளலாயிருப்பவளாய்
ते संमतां सखीं — உனக்குப் பிரியமான தோழியாயுள்ள
श्रीनिवासस्य दृष्टिम् — ஸ்ரீநிவாஸனுடைய கடாக்ஷத்தை
यः  जनः  எந்தச் சேதநன்
सकृत् अपि — ஒரு முறையாவது
अलभत — பெற்றானோ
अयम् — இந்தச் சேதநன்
देहवत्त्वे अपि — சரீரத்துடன் இருக்கும்போதே
देव आदीनाम् — தேவர் முதலியவர்களின்
अनृण तां  கடன் நீங்கிய தன்மையை
विन्दन् — அடைபவனாய்
बन्धात् — ஸம்ஸாரபந்தத்தினின்று
मुक्त: — விடுபட்டவனாய்
तत्प्रयुक्तैः  அவர்களால் கொடுக்கப்பட்ட
अनघैः  குற்றமற்ற
बलिभि: — காணிக்கைகளால்
पूर्यते — நிரப்பப்படுகின்றான்.

ஜாயமான கடாக்ஷமும் மோக்ஷ மார்க்கமும்

தயாதேவியே! மனிதன் பிறக்கும்போதே அவன் மீது எம் பெருமானுடைய கடாக்ஷம் விழவேண்டும். இதைத்தான் ‘ஜாய மாந கடாக்ஷம்’ என்பர். இதைப் பெறுவதற்கு முற்பிறவிகளில் நல்ல புண்ணியம் செய்திருக்கவேண்டும். இந்தக் கடாக்ஷம் வந்தால் ஸத்துவகுணம் தலையெடுத்து ஆசார்ய ஸம்பந்தம் பெற்று மோக்ஷத்தில் கருத்துண்டாகி அதைப் பெறும் வழி தேடச் செய்யும். பிறகு மோக்ஷத்திற்கு உபாயமான ப்ரபத்தியைச் சேதநன் செய்வான். மோக்ஷத்தினும் பெரியதொரு நன்மை கிடையாது. இதற்குக் காரணமான ஸ்ரீநிவாஸனுடைய கடாக்ஷம் ஒருவன்மீது விழவேண்டுமானால் நீ மனம் வைக்க வேண்டும். உனது அன்புக்கு உரிய தோழி போன்றதாகும் அந்தக் கடாக்ஷம். தயையாகிய நீ செல்லுமிடத்தில்தான் அந்தக் கடாக்ஷமும் செல்லும். அந்தக் கடாக்ஷம் எதாவது ஒரு பிறவியில் ஒருமுறை ஒருவன்மீது விழுந்தால் போதும். அது அவனுக்கு மோக்ஷம் வரையில் உள்ள நன்மைகளைப் படிப்படியாகச் செய்து விடும். அந்தக் கடாக்ஷம் சேதநனுடைய துன்பங்களைப் போக்குவதால் மிகக் குளிர்ந்ததாகும். எல்லாப் பலனையும் அளிப்பதால் மிக்க வண்மையுடையதாகும். அந்தக் கடாக்ஷத்தைப் பெற்று ப்ரபத்தியைச் செய்தவனுக்கு வரும் நன்மைகளுக்கு அளவில்லை. இந்தச் சரீரம் இருக்கும்போதே அவனுக்கு மூன்று கடன்களும் நீங்கிவிடுகின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும் மூன்று கடன்கள் உண்டு. அவை - தேவர் கடன் - முனிவர் கடன் - பித்ருக்கடன் என்பன. தேவர் கடன் வேள்வி புரிவதாலும், முனிவர் கடன் வேதத்தைக் கற்பதாலும், பித்ருக்கடன் மக்களைப் பெறுவதாலும் நீங்குகின்றன. ஸ்ரீநிவாஸனுடைய கடாக்ஷத்தைப் பெற்று மோக்ஷத்துக்கு உபாயமான ப்ரபத்தியைச் செய்தவனுக்கு இச் சரீரம் இருக்கும்போதே இக்கடன் ப்ரபத்தியின் பெருமையால் ஒழிந்துவிடுகின்றன. உரிய காலத்தில் அவன் இச்சரீரத்தை விடும்போது ஸம்ஸாரபந்தம் நீங்கி அர்ச்சிராதி கதியாலே மோக்ஷத்திற்குச் செல்கிறான். அப்பொழுது வழியில் முன்பு அவன் கடன்பட்டிருந்த தேவர்களே தங்கள் தலைவிதியென நினையாமல் மிக்க மகிழ்ச்சியுடன் அவனை உபசரித்துப் பெரிய பெரிய காணிக்கைகளையெல்லாம் அவனுக்கு கொண்டுவந்து ஸமர்ப்பித்து நிரப்புவார்கள். இப்படி இத்துணைச் சிறப்புகளுக்கும் காரணமான ஸ்ரீநிவாஸன் கடாக்ஷத்தைப் பெற உந்துணையன்றோ முக்கியமாயுள்ளது. 49 

The Grace-filled Glance that Leads to Moksha

Daya Devi! From the very moment a person is born, he must receive the compassionate glance of Emperuman. This is called “Jaayamaana Kadaaksham” — the divine glance received at birth. To receive such grace, one must have performed great punya in previous births. When this divine glance falls upon a person, the quality of Sattvam begins to grow within him. He gains the blessing of Acharya Sambandham, develops interest in Moksha, and starts seeking the path to attain it. Later, he performs Prapatti, the simple and supreme means for liberation.

There is no greater blessing than Moksha. But for Srinivasan’s divine glance to fall upon someone, your compassion must first decide it. That sacred glance is like your dear companion. Wherever Daya goes, that gracious glance also follows. Even if it falls just once upon a Jeevathma in any birth, it slowly leads him step by step toward Moksha and all the good that comes before it.

That divine glance is cooling because it removes suffering. It is generous because it grants every blessing. The benefits received by one who gains this grace and performs Prapatti cannot be measured. Even while living in this body, he becomes free from the three debts every human carries — the debt to the Devas, the debt to the Rishis, and the debt to the Pitrs. Usually, these debts are removed through sacrifices, study of the Vedas, and having children. But for one who has received Srinivasan’s grace and performed Prapatti, these debts are removed by the greatness of Prapatti itself.

When such a blessed Jeevan finally leaves the body, he becomes free from Samsara and travels through the sacred Archiraadi path toward Moksha. On that journey, the very Devas to whom he was once indebted welcome him joyfully. Without any pride, they honor him, offer him great gifts, and serve him with happiness. Thus, for all these exalted blessings, the most important cause is your help in gaining Srinivasan’s compassionate glance. (49)

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸