Friday, May 29, 2026

135 - Daya Shatakam - 48 - திருமலையில் இறுதிக்கால அருள் – “ஸ்வாமி! காத்தருள்” என்ற சரணாகதி - The Grace of the Final Cry at Tirumala

 श्री:

जय गरुड सुपर्ण 
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

48 - திருமலையில் இறுதிக்கால அருள் – “ஸ்வாமி! காத்தருள்” என்ற சரணாகதி - The Grace of the Final Cry at Tirumala

दैवात् प्राप्ते वृषगिरि तटं देहिनि त्वन्निदानात् 
स्वामिन् पाहीत्यवश वचने विन्दति स्वापमन्त्यम् । 
देवः श्रीमान् दिशति करुणे दृष्टिमिच्छंस्त्वदीयाम् 
उद्धातेन श्रुति परिषदामुत्तरेणाभिमुख्यम् ॥ 48 ॥

पदच्छेदः
दैवात् प्राप्ते वृषगिरि तटं देहिनि त्वत् निदानात् 
स्वामिन् पाहि इति अवश वचने विन्दति स्वापम् अन्त्यम् । 
देवः श्रीमान् दिशति करुणे दृष्टिम् इच्छन्  त्वदीयाम् 
उद्धातेन श्रुति परिषदाम् उत्तरेण आभिमुख्यम् ॥ 48 ॥

करुणे — தயாதேவியே !
त्वत् निदानात्  — உன்னால் ஏற்பட்ட
दैवात् — பாக்யத்தால்
वृषगिरि तटं  — திருமலைப் பக்கத்தை
प्राप्ते — அடைந்த 
देहिनि — சேதநன்
स्वामिन् — 'ஸ்வாமி!
पाहि — காத்தருள்'
इति — என்று
अवश वचने  — தன் வசமின்றி வந்த சொல்லையுடையனாய்
अन्त्यम् स्वापम्  — இறுதி உறக்கத்தை (மரணத்தை)
विन्दति — அடையும்பொழுது
श्रीमान् देवः  — பிராட்டியுடன் கூடிய எம்பெருமான்
त्वदीयाम् — உன்னுடையதான
दृष्टिम् — கடாக்ஷத்தை
इच्छन्  — விரும்புவனாய்
श्रुति परिषदाम् — வேதக் கூட்டங்களுக்கு
उद्धातेन — தொடக்கமான
उत्तरेण — விடையால்
आभिमुख्यम् — எதிரில் நிற்கும் நிலையை
दिशति — தருகின்றான்.

திருமலையில் இறுதிக்கால அருள் – “ஸ்வாமி! காத்தருள்” என்ற சரணாகதி

தயாதேவியே! ஒருவன் திருவேங்கடமலைக்குச் செல்ல மிகுந்த பாக்கியம் பெற்றிருக்கவேண்டும். அது உண்டாவது உன்னால்தான் ஆகும். இப்படி பாக்கியம் படைத்த ஒருவன் திருமலைக்குச் செல்லுகின்றான். அவனுக்கு அப்பொழுது மரண காலம் வந்துவிடுகிறதென்று வைத்துக்கொள்வோம். அவன் வாயினின்று “ஸ்வாமி! காத்தருள்” என்ற இரண்டு சொற்கள் வந்துவிடுகின்றன. அந்தச் சொற்கள் வருவதற்கும் நீயே காரணமாகின்றாய். அவன் பகவானை நினைந்து நல்ல நினைவுடன் அச்சொற்களைக் கூறவில்லை. இந்த்ரியங்கள் ஒடுங்கித் தன் வயமிழந்து நிற்கும் நிலையில் அச்சொற்கள் அவன் வாயினின்று தாமாகவே வெளிவந்துவிடுகின்றன. உடனே அவனுக்கு ஸமாதானம் கிடைக்கின்றது. எத்தகைய ஸமாதானம்? இச்சொற்களைக் கேட்டவுடன் திருவேங்கடமுடையானே பிராட்டியும் தானுமாக அவனுக்கு எதிரே ப்ரணவத்தைச் சொல்லிக் கொண்டு வந்து நிற்கின்றான். ப்ரணவத்துக்கு “அவ்வாறே செய்கின்றேன்” என்று பொருள் உண்டன்றோ! எல்லா வேதங்களுக்கும் தொடக்கமான முதலெழுத்தாகிய ப்ரணவத்தைக் கொண்டன்றோ ஸ்ரீநிவாஸன் அவனுக்கு விடையளிக்கின்றான். எதிரே வந்து நின்று இவன் சொல்லும் ப்ரணவம் அவனுக்கு கர்ண மந்த்ரமாகவுமன்றோ ஆகிறது! இவ்வாறு ஸ்ரீநிவாஸன் செய்வது எதனால்? தயாதேவியாகிய உனது கடாக்ஷத்தைப் பெற ஆசைப்பட்டதாலேயே. அவன் விஷயத்தில் இவ்வாறு அருள்புரிந்தால்தான் நீ ஸ்ரீநிவாஸனை மனங்குளிர்ந்து கடாக்ஷிப்பாய். இப்படிச் சிறந்த முறையில் அந்தச் சேதனனுக்குத் திருமலையில் மரணம் நேருவது விரைவில் அவன் நற்கதிபெற உதவி புரியுமன்றோ! இது க்ஷேத்ரத்தின் பெருமை. உனது உதவி. (48) 

The Grace of the Final Cry at Tirumala

Daya Devi! A person must have great fortune even to reach the sacred Tiruvengadam Hills, and that fortune itself comes only through your compassion. Suppose such a blessed person reaches Tirumala, and at that very time the moment of death arrives. From his mouth come the simple words, “Swami! Protect me!” Even these words arise only because of you.

At that moment, he is not consciously remembering Bhagavan with full awareness. His senses have weakened, and he has lost control over himself. Yet, by your grace, those words naturally come out from his mouth. Immediately, he receives peace and assurance. What kind of assurance? The moment Srinivasan hears those words, He Himself comes before the devotee along with Piratti, uttering the Pranavam. The Pranavam carries the meaning, “So be it; I shall surely do so.” It is the first and most sacred sound of all the Vedas. Thus, Srinivasan personally answers the devotee with the Pranavam itself. Since He comes near and speaks it directly, it also becomes the sacred final mantra (Karna Mantra) heard by the dying Jeevathma.

Why does Srinivasan show such mercy? It is because He longs to receive the gracious glance of Daya Devi. Only by protecting the devotee in this loving way does He gain her joyful approval. Therefore, when a person dies at Tirumala in such a blessed manner, it quickly leads him toward liberation and eternal good. This is the greatness of the sacred kshetram and the boundless help of Daya Devi. (48)

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸