श्री:
श्रीमते निगमान्त महादेशिकाय नम:
पद्माकान्तः प्रणयति दये दर्पणं ते स्वशास्त्रम् ।
लीला दक्षां त्वदनवसरे लाळयन् विप्रलिप्सां
माया शास्त्राण्यपि दमयितुं त्वत्प्रपन्न प्रतीपान् ॥ 47 ॥
पदच्छेदः
विद्वत्सेवा कतक निकषै: वीत पङ्क आशयानां
पद्मा कान्तः प्रणयति दये दर्पणं ते स्वशास्त्रम् ।
लीला दक्षां त्वत् अनवसरे लाळयन् विप्रलिप्सां
माया शास्त्रानि अपि दमयितुं त्वत्प्रपन्न प्रतीपान् ॥ 47 ॥
दये —தயாதேவியே!
पद्मा कान्तः — ஸ்ரீநிவாஸன்
विद्वत्सेवा — ஞானிகளுக்குச் செய்யும் பணிவிடையாகிய
कतक निकषै: — தேத்தாங்கொட்டையின் உரைத்தல்களால்
वीत पङ्क आशयानां — மனக்களங்கம் நீங்கியவர்களுக்கு
ते दर्पणं — உன்னைக்காட்டும் கண்ணாடி போன்ற
स्वशास्त्रम् - தன் சாஸ்த்ரத்தை
प्रणयति — அருளிச்செய்கின்றான்.
त्वत् अनवसरे— உனக்கு உரியதல்லாத ஸமயத்தில்
लीला दक्षां — லீலைகளைச் செய்யவல்ல
विप्रलिप्सां — வஞ்சனையில் விருப்பத்தை (இதுவாகிய தேவியை)
लाळयन् — கொஞ்சிக்கொண்டு
त्वत्प्रपन्न — உன் அடியவர்களுக்கு
प्रतीपान् — எதிரிகளை
दमयितुं — அடக்குவதற்காக
माया शास्त्रानि अपि — மோஹந சாஸ்த்ரங்களையும்
(प्रणयति — இயற்றுகின்றான்.)
தயாதேவி
அருளிய பகவத் சாஸ்த்ரங்களும் லீலா தேவி அருளிய மாயா சாஸ்த்ரங்களும்
ஒரு பெரிய பாத்திரத்தில் மிகக் கலங்கிய நீர் நிறைந்திருந்தால், தேத்தாங்கொட்டையை அந்நீரில் தேய்த்தால் அழுக்கு முழுதும் ஒரு பக்கத்தில் விலகித் தெளிந்த நீரைப் பெறமுடியும். சேதநர்களின் உள்ளமே ஒரு பாத்திரம். அஜ்ஞானம், பாபம் செய்வதில் நாட்டம் முதலிய அதன் அழுக்குக்கள். ஞானிகளை வழிபட்டுப் பணிவிடை புரிதலே தேத்தாங்கொட்டையால் உரைத்தலாகும். நம் மனத்தில் உள்ள அஞ்ஞானம் முதலியன நல்ல ஞானிகளான பாகவதர்களை அண்டிப் பணிவிடை புரிவதால் நீங்கிவிடும்; உள்ளம் திருந்தும்; தத்துவங்களை உள்ளவாறு அறிய முடியும். பாபங்களைச் செய்ய எண்ணமும் உதிக்க மாட்டாது. இப்படி மனத் தூய்மைபெற்ற அடியார்களுக்கு எம்பெருமானைப் பற்றி இன்னும் விசேஷ அறிவு உண்டாக வேண்டுமே! இவ்வறிவை வேதத்திலிருந்து மட்டும் பெற்று விடமுடியாது. வேதங்களின் உண்மையர்த்தங்களை அறிவது எளிதன்று. ஆதலின் அவற்றின் பொருள்களை அறிந்து விசேஷ ஜ்ஞானம் பெறுவதற்கு மற்றும் சில நூல்கள் அவசியமாயின. அதற்காக ஸ்ரீநிவாஸன் தானே ஒரு சாஸ்த்ரம் இயற்றினான். இதுவே "ஸ்ரீபாஞ்சராத்ரம்" என்றும் "பகவச் சாஸ்த்ரம்" என்றும் வழங்குகின்றது. இந்தச் சாஸ்த்ரம் உன்னுடைய ஏவலால் அவதரித்து உன் பெருமைகளையெல்லாம் விளக்குவதால் உன்னைக் காட்டவல்ல ஒரு கண்ணாடியாகும். இந்தச் சாஸ்த்ரத்தின் உதவியால் பாகவதோத்தமர்களும் பகவானைப் பற்றி விளக்கமான அறிவு பெற்று விளங்குகின்றனர். இவை அனைத்தும் தயாதேவியாகிய உன்னாலேயே நடைபெறுவனவல்லவோ?
ஆனால் இவ்வாறே எம்பெருமான் சில மாயா சாஸ்த்ரங்களையும் வெளியிடுகின்றான். அதில் தயாதேவியாகிய உனக்கு நேராகப் பங்கில்லை. நீ சற்று வெளியில் போயிருக்கும் சமயத்தில் எம்பெருமானுக்கு ஓர் ஆசையுண்டாகின்றது. அசுரத் தன்மைகளை வஞ்சித்து லீலை புரிய வேண்டுமென்பதே அந்த ஆசை. இவ்வாசையை நல்லதெனக் கொண்டு இதனிடம் கொஞ்சி விளையாடுகின்றான் எம்பெருமான். உலகில் அரசன் தன் பட்டமஹிஷி அருகில் இல்லாத காலம் பார்த்து விலை மாதரைக் கொண்டுவந்து கொஞ்சி இன்புறுவது போன்றது பகவானது இச்செயல். இதுவும் அவசியமானதே. உன்னைச் சரணமடைந்த அடியார்களுக்குப் பகைவர்களும் சிலர் உளர். அவர்கள் எம்பெருமானுக்கும் எதிரிகளாமே; அவர்களைத் தண்டிக்க வேண்டியது கடமையாயிற்று. அதற்காக எம்பெருமான் சில மோஹந சாஸ்த்ரங்களையும் வெளியிட்டான். அச்சாஸ்த்ரங்கள் வேதம் கூறும் உண்மைப் பொருள்களை மறைத்து அதற்கு மாறான பொருளைக் காட்டவல்லன. அவ்வெதிரிகள் அவற்றைப் படித்து மயங்கித் தர்மத்தை விட்டு அதர்மத்தைக் கைக்கொண்டு இறுதியில் நரகத்தில் நெடுங்காலம் விழுந்து கிடப்பர். இவையனைத்தும் எம்பெருமானுக்கு லீலைகளேயாகும். இப்படி அவனுக்கு வஞ்சனையில் ஏற்பட்ட விருப்பம் இத்தகைய லீலைகளைப் புரியச் செய்கின்றது. பின்பு இவ்வனைத்தையும் அறிகின்ற நீ உன் அடியார்களின எதிரிகளைத் தண்டிக்கும் செயலாயிருப்பனபற்றி அவன் செயல்களைக் காணக்கண்ணிட்டு வைக்கவேண்டியதாயிற்று. (47)
DayaDevi’s Bhagavath Shaastram (Divine Teachings), and LeelaDevi’s Mohana
Shaastram ( Deluded Teachings)
Just as
muddy water in a large vessel becomes clear when a cleansing seed is rubbed
into it, the human mind too can be purified. The vessel is the heart of the
Jeevathma, and the dirt is ignorance, sinful desires, and wrong tendencies.
Serving and learning from wise Bhagavathas is like using the cleansing seed. By
staying close to noble devotees and serving them with humility, ignorance and
sinful thoughts slowly leave the mind. The heart becomes pure, and one gains
the ability to understand the truths of life properly. The desire to commit
sins also fades away.
But for
such purified devotees, deeper knowledge about Bhagavan is still needed. This
higher understanding cannot be gained easily from the Vedas alone, because
their inner meanings are difficult to grasp. Therefore, more detailed Shaastras
became necessary. Out of compassion, Srinivasan Himself revealed the sacred
Shaastram called Sri Pancharatram, also known as Bhagavath Shaastram.
Since this Shaastram appeared through the command of Daya Devi and explains her
greatness, it acts like a mirror that reveals her true nature. With the help of
this Shaastram, great devotees gain clear and special knowledge about Bhagavan.
All these blessings happen only because of Daya Devi.
At the same time, Bhagavan also revealed certain misleading Shaastras called Maya Shaastras. Daya Devi does not directly take part in these. When she is slightly away, Bhagavan chooses to playfully deceive those with Asuric qualities. This is compared to a king amusing himself in the absence of his chief queen. These deluding teachings also serve a purpose. The enemies of Bhagavan’s devotees must be corrected and punished. So Bhagavan revealed teachings that hide the true meanings of the Vedas and show opposite ideas instead. Those who follow such false teachings become confused, leave Dharma, fall into Adharma, and suffer greatly in the end. These too are part of Bhagavan’s divine play. Later, Daya Devi carefully watches over all these actions, especially when they are meant to protect devotees and punish their enemies. (47)
Notes by Sri:
- https://apnswami.wordpress.com/2026/05/05/srts-ch15-uttarakruthyam/
- மாளவிகாக்நிமித்ரம் – 2.7 - मन्दोप्यमन्दतामेति संसर्गेण विपश्चितः। पङ्कच्छिदः फलस्येव निघर्षेणाविलं पयः ॥ - இதன் அர்த்தம், மந்தனாக இருந்தாலும், அவன் (விபஶ்சித:) ஜ்ஞானவானான ஆசார்யன் ஸம்பந்தத்தாலே தெளிவு பெறுகிறான். எப்படி கலங்கிய தண்ணீரில் தேத்தாங்கொட்டையை போட்டவுடன் தெளிந்த நீர் கிடைப்பது போலே மஹான்களுடைய ஸம்பந்தத்தாலே மனசு தெளிவடையும் என இந்த ஶ்லோகம் மூலம் தெரிகிறது.
- யதிராஜஸப்ததி 19 - परुषा तिवादपरिवाद पैशुनप्र भृतिप्रभूतपतनीयपङ्किला । स्वदते ममाद्य सुभगा सरस्वती यतिराजकीर्तिकतकैर्विशोधिता ।।
- மனுஸ்ம்ருதியில் ஜலம் கலங்கியிருந்தால் தேத்தாங்கொட்டையின் மூலம் தூய்மை அடையும், ஆனால் அதற்குப் பதில் தேத்தாங்கொட்டை என்று ஒரு காகிதத்தில் எழுதி வைத்தால் எப்படி தூய்மை ஆகும்?. அதுபோல் ஆசார்ய ப்ரதிபத்தி என்பது அவர் உபதேசம் கேட்டு அதன் வழியில் நடப்பதாகும்.
- பாதுகா ஸஹஸ்ரம் परुषैरजस्रमसतामनर्थकैः परिवादपैशुनविकत्थनादिभिः । मधुकैटभारिमणिपादुके ! मम श्रुतिदुष्कृतानि विनिवारय स्वनैः ॥ 393 - பாதுகையே ! மஹாபாபிகள் பொறுக்க முடியாதபடி ஸாதுக்களை நிந்தித்தும், கோள் சொல்லியும் தங்களைத் தாங்களே துதித்தும் (தற்புகழ்ச்சி) வருகிறார்கள். இவைகளைக் கேட்டு துன்புற்ற என் காதுகளின் பாபங்களை உன் பாதுகா நாத ஸப்தம் கழிக்க வேண்டும்.
- பாதுகா ஸஹஸ்ரம் तव सञ्चरणाद्रजो विधूतं यदिदं रङ्गनरेन्द्रपादरक्षे ! । अलमेतदनाविलानि कर्तुं कतकक्षोद इवाशु मानसानि ।। 352 - பாதுகையே! தேத்தாங்கொட்டை கலங்கின ஜலத்தைத் தெளிவிப்பது போல், பாதுகையின் சஞ்சாரத்தில் கிளம்பும் தூள் /ரஜஸ் பக்தர்கள் மேலே பட்டவுடன் அவர்களுடைய கலங்கின மனசு தெளிவடைகிறது.