Sunday, May 31, 2026

137 - Daya Shatakam - 50 - ஆசார்ய ரூபமாக அருளும் தயாதேவி - Daya Devi as the Acharya who Leads Jeevans to Moksha

   श्री:

जय गरुड सुपर्ण 
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

50 - ஆசார்ய ரூபமாக அருளும் தயாதேவி - Daya Devi as the Acharya who Leads Jeevans to Moksha

दिव्यापाङ्गं दिशसि करुणे येषु सद्देशिकात्मा 
क्षिप्रं प्राप्ता वृषगिरि पतिं क्षत्रबन्ध्वादयस्ते । 
विश्वाचार्या विधि शिव मुखाः स्वाधिकारोपरुद्धाः 
मन्ये माता जड इव सुते वत्सला मादृशे त्वम् ॥ 50 ॥

पदच्छेदः
दिव्य अपाङ्गं दिशसि करुणे येषु सत् देशिक आत्मा 
क्षिप्रं प्राप्ता: वृषगिरि पतिं क्षत्रबन्धु आदय: ते  । 
विश्व आचार्या: विधि शिव मुखाः स्व अधिकार उपरुद्धाः 
मन्ये माता जडे इव सुते वत्सला मादृशे त्वम् ॥ 50 ॥

करुणे - தயாதேவியே! 
सत् देशिक आत्मा  - நல்ல ஆசார்யர்களின் வடிவு கொண்டவளாய்  
दिव्य अपाङ्गं - உயர்ந்த கடாக்ஷத்தை
येषु - எவர்கள்பால்
दिशसि - செய்கின்றாயோ
ते — அந்த
क्षत्रबन्धु आदय: — க்ஷத்ரபந்து முதலியவர்கள்
क्षिप्रं — விரைவில்
वृषगिरि पतिं  — திருவேங்கடமுடையானை
प्राप्ता: — அடைந்துவிட்டனர்.
विश्व आचार्या: — உலகுக்கு ஆசார்யர்களாயுள்ள
 विधि शिव मुखाः — பிரமன் சிவன் முதலியவர்கள்
स्व अधिकार  — தங்கள் அதிகாரத்தால்
उपरुद्धाः  — கட்டுண்டுள்ளனர். (ஆகையால்)
माता — தாய்
जडे — அசடான
सुते इव — புத்திரனிடத்திற் போல்
त्वम् — நீ
मादृशे  — என்னைப் போன்றவனிடத்தில்
वत्सला — அன்புகொண்டவள் (என்று)
मन्ये  — கருதுகின்றேன்.

ஆசார்ய ரூபமாக அருளும் தயாதேவி

தயாதேவியே! நீ சிறந்த ஆசார்யர்களாக வடிவு கொள்கின்றாய். சேதநர்க்கு நீயே ஆசார்யவடிவில் இருந்து உபதேசித்து நற்கதி பெறுவிக்கின்றாய். எந்தச் சேதநர்க்கு நீயே ஆசார்ய ரூபத்தில் இருந்து உனது உயர்ந்த கடாக்ஷத்தை வீசி ப்ரபத்தியைச் செய்யுமாறு செய்கின்றாயோ, அவர்களெல்லாரும் விரைவில் திருவேங்கடமுடையானாகிய பரமபதநாதனை அடைந்து மோக்ஷ ஸாம்ராஜ்யத்தைப் பெறுகின்றனர். உதாரணமாய் - க்ஷத்ரபந்து என்னும் அரசன் கொடிய பாபங்களைச் செய்துகொண்டிருந்தான். இருந்தும் ஓர் ஆசார்யனை அடைந்து உபாயத்தைச் செய்து மோக்ஷம் பெற்றான். இவ்வாறு பலரும் ஆசார்யனை அடைந்து ப்ரபத்தியைச் செய்து முக்திபெறுகின்றனர். நீ தானே ஆசார்ய வடிவு கொள்கின்றாய். பாவிகளாயினும் உன் கடாக்ஷம் பெற்றுவிட்டால் அந்தப் பிறவியிலேயே உபாயத்தைச் செய்து மோக்ஷம் பெற்றுவிடுகின்றனர். உன் கடாக்ஷம் பெறாவிடில் எத்துணைச் சிறப்புடையராயினும் மோக்ஷம் பெறமுடியாது. உதாரணமாய் - சாஸ்த்ரங்களை வெளியிட்டு உலக முழுவதுக்கும் உபதேசம் செய்யவல்லவர்கள் பிரமன் சிவன் முதலியவர்கள். அவர்கள் இன்னும் மோக்ஷம் பெறவில்லை. காரணம் என்ன? உன் கடாக்ஷம் பெறாததுதான். அவர்கள் தத்தம் ஸ்தாநங்களில் இருந்துகொண்டு அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டுள்ளனர். இந்த அதிகாரம் உள்ளவரை அவர்கள் மோக்ஷம் பெற முடியாது. முடிந்தபின் உபாயத்தைச் செய்து உன் கடாக்ஷம் பெற்றால் பிறகு மோக்ஷம் பெறலாம். இப்படி க்ஷத்ரபந்து முதலிய பாபிகளும் உன் கடாக்ஷத்தால் விரைவில் மோக்ஷம் பெறமுடிகின்றது. பிரமன் முதலிய பெரியோர்களும் மோக்ஷம் பெறக் காரணமான உன் கடாக்ஷம் இல்லாமல் கருமத்துக்கு வசப்பட்டுக்கடக்கின்றனர். இவ்விரு நிலைகளையும் சிந்திக்கும்போது உண்மை விளங்குகின்றது. உலகில் ஒரு தாய்க்குப் பல புத்திரர்கள் இருப்பினும் ஞானம் சக்தி முதலியன இல்லாது அசடாயுள்ள புத்திரனிடத்துத் தான் அன்பு மிகுந்து நிற்பதைக் காண்கிறோம். அவ்வாறே க்ஷத்திரபந்து முதலியவர்கள்போல் நாங்களும் மோக்ஷம் பெறுவதற்கு அவசியம் வேண்டிய ஜ்ஞாநம் சக்தி முதலிய தகுதியற்றவர்களாய் அபராதங்களைச் செய்துகொண்டுள்ளோம். கையற்று நிற்கும் எங்கள் நிலைக்கு நீ வருந்துகின்றாய்; சிறந்த ஆசார்ய வடிவு கொள்கின்றாய்; எங்களைத் திருத்தி ஸ்ரீநிவாஸன் திருவடிகளில் ப்ரபத்தியைச் செய்விக்கின்றாய். விரைவில் திருவேங்கடமுடையானென்னும் பரமபதநாதனை அடைவிக்கின்றாய். இத்தனையையும் உன் கடாக்ஷத்தின் பெருமைகளல்லவோ? (50) 

Daya Devi as the Acharya who Leads Jeevans to Moksha

Daya Devi! You yourself take the form of great Acharyas. In the form of an Acharya, you guide Jeevathmas, teach them the right path, and lead them toward liberation. Whoever receives your divine glance through such Acharyas is guided toward Prapatti, and they quickly attain Tiruvengadamudaiyan, the Lord of Paramapadam, and gain the kingdom of Moksha.

For example, the king Kshatrabandhu lived a sinful life and committed many terrible deeds. Yet, by reaching an Acharya, learning the proper means, and performing surrender, he attained Moksha. In the same way, many others have attained liberation through Acharya Sambandham and Prapatti. This happens because you yourself stand as the Acharya. Even sinners, if they receive your compassionate glance, can perform the right upaya in that very birth and attain Moksha quickly.

Without your grace, however great a person may be, Moksha cannot be attained. Brahma, Shiva, and other exalted beings are capable of teaching the Shaastras to the whole world, yet they have not attained Moksha. Why? Because they have not yet received your special glance. They remain bound to their divine posts and duties. As long as those responsibilities continue, they cannot attain liberation. Only after those duties end, and after they receive your grace through the proper means, can they attain Moksha.

When we compare these two situations, the truth becomes clear. Great sinners like Kshatrabandhu attained liberation quickly because of your compassion, while even mighty beings remain bound without it. In the world too, when a mother has many children, her affection often flows most strongly toward the weak and helpless child who lacks strength or wisdom. In the same way, we too are helpless. We lack true knowledge, spiritual strength, and worthiness, and we continue committing faults. Seeing our condition, you feel compassion. You take the form of noble Acharyas, correct us gently, and make us perform Prapatti at the feet of Srinivasan. Then you quickly lead us to Tiruvengadamudaiyan, the Lord of Paramapadam. Are not all these wonders the greatness of your compassionate glance?(50)

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸