श्री:
பரந்யாஸம்
மூடிய பாபங்களை விலக்கும் தயா
தயாதேவியே! வேதமென்பது ஒரு பெரிய நகரம். நகரத்தில் எல்லாப் பொருள்களும் கிடைப்பது போல் வேதத்தில் ஐசுவர்யம் - கைவல்யம் - மோக்ஷம் ஆகிய எல்லாப் பலன்களையும் பெறும் வழிகள் காட்டப்பட்டுள்ளன. அந்த அந்தப் பலனை விரும்புவர் அதற்கு உரிய உபாயத்தைச் செய்து தாம் விரும்பும் பலனைப் பெறுவர். நகரத்தில் பல்வேறு சாலைகள் இருக்கும். ஆயினும் நான்கு பக்கத்து வழிகளும் கூடிமிடமாகிய நாற்சந்தியே மிக முக்கியமான இடமாகும். அவ்வாறே வேதமாகிய நகரத்துக்கு உபநிஷத்துப் பகுதியே நாற்சந்தியாய் நின்று முக்கியமாகின்றது. அந்த உபநிஷத்தால் போற்றப்பட்டு நீ மிக விளங்குகின்றாய். உன்னிடம் பாபிகள் தங்களைக் காத்துக்கொள்ள வருகின்றனர். எப்படி வருகின்றனர்? அவர்கள் அநாதிகாலமாகக் கணக்கற்ற பாபங்களைச் செய்துவிட்டனர். அவற்றைப் போக்குவதற்காக உன்னிடம் சரணகதி செய்ய அவர்கள் முற்படுகின்றனர்; தங்கள் கொடிய பாபங்களைப் போக்கித் தங்களைக் காக்கும் பொறுப்பை உன்னிடமே ஸமர்ப்பிக்கின்றனர். தங்களிடம் அதற்கேற்ற கைமுதல் யாதுமில்லாமையை உணர்கின்றனர். பரந்யாஸம் என்ற தள்வத்தால் தங்கள் பாபங்களை நன்கு மூடி அவற்றையே உனக்கு நைவேத்யப் பொருளைப் போல் எடுத்துக்கொண்டு உன்னிடம் வருகின்றனர். அவர்கள் இப்படி உன்னைச் சரணடைய உன்னை நோக்கிப் பயணத்துக்கு அடிவைக்கும்போதே நீ அவர்களை ஆவலோடு வரவேற்க முன்வருகின்றாய். கொடிய பாபிகளிடத்தும் அவர்கள் செய்யத் துணியும் மிகச் சிறிய உபாயமாகிய பரந்யாஸத்தால் நீ மயங்கி விடுகின்றாய்; உன் மேன்மையை அறவே மறந்து அவர்களை ஆதரிக்க எதிர்கொண்டு ஓடிவருகின்றாய். பண்டிதர்களும் பாமரரும் அடங்க உலக முழுவதும் உன் செயலைக் கண்டு "உன் மனப்போக்கில் எதாவது பழுது இருக்குமோ? என்ன இது?" என்று பெரு வியப்படைகின்றது. இது மட்டுமோ? திருமலையில் நின்று அனைத்தையும் கண்கூடாக காணவல்ல உன் நாயகன் ஸ்ரீநிவாஸனும் உன் இச்செயலைக் கண்டு ஆச்சர்ய ரஸத்தில் மூழ்கிக் கிடக்கின்றான். உலகில் அரசர் முதலியோருக்காகப் பிறர் கண்படாமல் மூடிக் கொண்டுவரும் பழம் முதலியவற்றையே அவர்கள் ஏற்றுக்கொண்டு உண்கின்றனர். அர்ச்சனைவடிவு கொண்ட எம்பெருமானுக்கும் சித்திரான்னம் முதலியவற்றை வஸ்த்ரத்தால் மூடிக்கொண்டுபோய் ஸமர்ப்பித்தால்தான் அவன் திருவுள்ளம் பற்றுகின்றான். அவ்வாறே சேதநர்கள் தங்கள் பாபங்களை (நைவேத்யப் பொருளை)ப் பரந்யாஸமென்னும் வஸ்த்ரத்தால் மூடிக் காட்டினால்தான் நீ அந்தப் பாபங்களை விழுங்குவாய். அதாவது - ப்ரபத்தியைச் செய்யாவிடில் அந்தப் பாபங்கள் அழியமாட்டா. (70)
Daya That destroys Sins Veiled by Prapatti
O Daya Devi!
The Vedas may be compared to a
great city. Just as every kind of commodity can be found in a city, the Vedas
reveal the means for attaining all kinds of goals—Aiswaryam (worldly
prosperity), Kaivalyam (self-experience), and Moksha (liberation). Those who
desire a particular result follow the prescribed means and obtain the fruit
they seek.
In a city, there may be many
roads, but the most important place is the central crossroads where all major
roads meet. Similarly, within the city of the Vedas, the Upanishads stand as
the central crossroads and occupy the most exalted position. It is in these
Upanishads that You are especially praised and glorified.
Sinners come to seek refuge in
You.
How do they come?
From beginningless time, they
have accumulated countless sins. Desiring freedom from those sins, they
approach You through Saranagathi. They place upon You the responsibility of
removing their sins and protecting them. Realizing that they possess no spiritual
wealth, strength, or qualification of their own, they resort to Bharanyasam
(Prapatti).
Using Bharanyasam as a covering
cloth, they conceal their terrible sins and bring them before You as though
they were an offering (Naivedyam). They come and surrender themselves at Your
feet.
The moment they take even the
first step toward You, You eagerly move forward to receive them.
Even when they are great
sinners, You become overwhelmed by the small act of surrender that they
perform. Forgetting Your own lofty status, You rush forward to support and
accept them.
The whole world—both scholars
and ordinary people—watches this and wonders in amazement:
"What is this
extraordinary nature of Daya? Can there be any limit to such compassion?"
Nor is this all.
Your Lord, Sri Srinivasa, who
stands upon Tirumala and sees everything directly, also beholds this conduct of
Yours and becomes immersed in wonder.
In the world, kings usually
accept fruits and other offerings only when they are respectfully covered and
presented. Likewise, when offerings such as Chitraannam and other foods are
presented to the Lord in His Archaa form, they are traditionally covered with a
cloth before being offered.
In the same way, when
Jeevathmas cover their sins with the garment of Bharanyasam (Prapatti)
and present themselves before You, You accept those sins and swallow them
completely.
In other words, without
Prapatti those sins remain. But when they are brought before You through
sincere surrender, Your compassion destroys them.
Thus, O Daya Devi, Prapatti is the sacred covering through which even the greatest sinner becomes worthy of Your acceptance, and Your boundless mercy consumes the sins that no other means can remove. (70)