Friday, June 19, 2026

156 - Daya Shatakam - 69- திருமலை அருவிகளை விட உயர்ந்த தயா வெள்ளம் - The Flood of Daya Surpasses the Waterfalls of Tirumala

  श्री:

जय गरुड सुपर्ण 
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

69- திருமலை அருவிகளை விட உயர்ந்த தயா வெள்ளம் - The Flood of Daya Surpasses the Waterfalls of Tirumala

कलि क्षोभोन्मीलत् क्षिति कलुष कूलङ्कष जवैः 
अनुच्छेदैरेतैरवट तट वैषम्य रहितैः । 
प्रवाहैस्ते पद्मा सहचरपरिष्कारिणि कृपे 
विकल्प्यन्तेऽनल्पा वृष शिखरिणो निर्झरगणाः ॥ 69 ॥

पदच्छेदः
कलि क्षोभ उन्मीलत् क्षिति कलुष कूलङ्कष जवैः 
अनुच्छेदै: ऐतै: अवट  तट वैषम्य रहितैः । 
प्रवाहै: ते पद्मा सहचर परिष्कारिणि कृपे 
विकल्प्यन्ते अनल्पा: वृष शिखरिण: निर्झर गणाः ॥ 69 ॥

पद्मा सहचर — ஸ்ரீநிவாஸனை
परिष्कारिणि — அழகுபடுத்துகின்ற
कृपे — தயாதேவியே!
कलि क्षोभ — கலியின் குழப்பத்தால்
उन्मीलत् — வளர்கின்ற
क्षिति कलुष — பூமியின் பாபங்களின்
कूलङ्कष — கரையை உடைக்கின்ற
जवैः — வேகத்தையுடையனவாய்
अनुच्छेदै: — இடையறாதனவாய்
अवट  तट  — பள்ளம் மேடு என்ற
वैषम्य रहितैः — வேற்றுமை பாராதனவாய் உள்ள
ते — உன்னுடைய
ऐतै:  — இந்த
प्रवाहै: — வெள்ளங்களோடு
वृष शिखरिण: — திருவேங்கடமலையின்
अनल्पा: — பெரிய
निर्झर गणाः — அருவிக்கூடங்கள்
विकल्प्यन्ते  — சமமாகக் கருதப்படுகின்றன.

திருமலை அருவிகளை விட உயர்ந்த தயா வெள்ளம்

தயாதேவியே! பெரியபிராட்டியைக் கணமும் பிரியாது தன் திருமார்பில் தரிக்கின்றான் ஸ்ரீநிவாஸன். ஆயினும் அவனுக்குச் சிறப்பு உன்னாலேயே வருகின்றது. உன் வெள்ளங்களோடு திருமலையில் பெருகும் நீரருவிக் கூட்டங்களை ஒப்பிட்டுப் பேசுகின்றனர் பெரியோர். திருமலையில் உள்ள அருவிகள் அங்குள்ள கழிவுப் பொருள்களையெல்லாம் தள்ளிக் கொண்டு இருகரைகளையும் உடைத்துக் கொண்டு மிக்க வேகத்துடன் பெருகுகின்றன; நீராடுவாரின் பாபங்களை ஒழிக்கவல்லன; கோடையிலும் இடையறாது பெருகுமியல்பின; பள்ளம்-மேடு என்ற வேறுபாடின்றி எங்கும் பாய்வன; மிகப் பெரிய வெள்ளமாய் ஓடுவன. தயாதேவியாகிய உன் வெள்ளங்களும் அவ்வாறே கலியின் குழப்பத்தால் சேதநர்களிடம் மேன்மேலும் வளர்கின்ற புண்ணியம் பாபம் என்னும் இரு வகைக் கர்மங்களையும் விரைவில் அழிக்கவல்லன; எல்லோரிடத்தும் எப்பொழுதும் தடையின்றிப் பெருகுவன; உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற வேற்றுமை பாராமல் எல்லாச் சேதநர்களிடமும் சமமாய்ப் பெருகும் தன்மையன; மிகப் பெரியன. இத்துணைத் தன்மைகளால் உன் வெள்ளங்களை உவமையாய் வைத்து அவற்றை போன்றவை திருமலையருவிகள் என்று அறிஞர் பேசுகின்றனர். ‘உன் வெள்ளங்கள் மலையருவிகள் போன்றவை’ என்று உலகமுறையில் உவமை கூறாமல் ‘மலையருவிகள் உன் வெள்ளங்கள் போன்றவை’ என அறிஞர் கூறுவதால் உண்மையில் திருமலையருவி வெள்ளத்தினும் உன் வெள்ளத்திற்குச் சிறப்பு நன்கு புலனாகின்றது. (69) 

The Flood of Daya Surpasses the Waterfalls of Tirumala

O Daya Devi!

Sri Srinivasa bears Periya Piratti upon His divine chest without being separated from Her even for a moment. Yet, His special greatness shines forth through You.

Great Acharyas compare Your floods of compassion to the mighty waterfalls that flow through Tirumala.

The waterfalls of Tirumala possess many remarkable qualities. They sweep away all impurities in their path, break through their banks, and rush forward with great force. They are believed to remove the sins of those who bathe in them. They continue to flow even during the summer season without interruption. They do not discriminate between high and low ground but spread everywhere alike. They flow as vast and powerful torrents.

In the same way, Your floods of compassion possess these qualities in an even greater measure.

·        They swiftly destroy both Punya and Papa karmas that continue to accumulate in Jeevathmas due to the confusions of Kali Yuga.

·        They flow continuously toward all beings without obstruction.

·        They make no distinction between the high and the low, the learned and the ignorant, but reach all Jeevathmas equally.

·        They are immense, boundless, and powerful.

Because of these shared qualities, wise men speak of the waterfalls of Tirumala by comparing them to Your floods of compassion.

Yet, they do not say, “Your floods are like the waterfalls of Tirumala.”

Instead, they say, “The waterfalls of Tirumala are like Your floods.”

This manner of comparison reveals an important truth. The standard of excellence is not the waterfalls; it is Your compassion. The waterfalls gain their glory by being compared to You. Thus, Your flood of mercy is recognized as far greater and more glorious than even the majestic torrents of Tirumala. (69)

Key Insight

The verse reverses the usual comparison. Rather than saying “Daya is like the waterfalls of Tirumala,” it says “the waterfalls of Tirumala are like Daya.” This highlights that Daya is the original greatness, while the waterfalls are only reflections of that greatness. (69)

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸