श्री:
உலகின் காரணமும் மோக்ஷத்தின் வாயிலும் – தயையின்
மகிமை
தயாதேவியே! உன்னுடைய நாயகனான திருவேங்கடமுடையானுக்கு
உயர்ந்த இரண்டு அம்சங்கள் உள. ஒன்று - உலகுக்குக் காரணமாயிருப்பது. மற்றொன்று -
மோக்ஷம் அளித்தல். ஸ்ரீநிவாஸன் உலகத்தைப் படைத்துக் காத்து அழிக்கின்றான்.
இச்செயல்கள் அவனுக்கு லீலையாயுள்ளன. இவற்றை அவன் இன்பமாய்ச் செய்கின்றான்.
இச்செயல்கள் கருணையாகிய உன்னால் நடைபெறுவதாதலின் இவற்றுக்கு நீயே காரணமாகின்றாய்.
மேலும் எம்பெருமான் தன்னிடம் அன்பு கொண்டு ப்ரபத்தியைச் செய்தவனுக்கு மோக்ஷத்தின்
கதவைத் திறந்து வைத்துக்கொண்டு, தானே உள்ளே புகும் ஒரே வாயிலாக இருந்து சேதநனை வா என்று அழைக்கின்றான். அவன்
இப்படிச் செய்தலும் உன்னாலேயன்றோ! எவ்வகைக் குற்றமுமின்றி எப்பொழுதும் தூயனவாய்
விளங்கும் வேத வாக்குக்கள் திருவேங்கடநாதனைத் துதிக்கின்றனவே? “அவன் உலகுக்குக் காரணமாயுள்ளவன் -
மோக்ஷத்தைத் தருபவன்” என்ற இரு பெருமைகளை முக்கியமாகக் கொண்டுதாமே போற்றுகின்றன.
இவ்விரண்டு அம்சங்களும் அவனுக்கு உன்னால் தானே வருவன? (68)
Daya: The Source of
Creation and the Gateway to Moksha
O Daya Devi!
Your Lord, Sri
Venkatamudaiyan, possesses two supreme distinctions.
The first is that He is the
cause of the universe.
The second is that He grants
Moksha.
Sri Srinivasa creates,
sustains, and dissolves the universe. These cosmic activities are His divine
sport (Leela). He performs them joyfully and effortlessly. Since these acts
take place through You, who are His Compassion, You are the true cause behind them.
Furthermore, when a Jeevathma
develops devotion and performs Prapatti, the Lord opens the gateway to Moksha.
He Himself stands as the sole entrance to that supreme abode and lovingly calls
the Jeevan, “Come.” Even this gracious act is possible only because of You.
The flawless and eternally
pure declarations of the Vedas continuously praise Sri Venkatanatha. Among all
His glories, they especially celebrate two:
·
That He is the cause of the universe.
·
That He is the giver of Moksha.
These are the two foremost
excellences for which the Vedas glorify Him.
But do not both of these arise
through You?
It is through Your Compassion
that He engages in creation, preservation, and dissolution. It is through Your
Compassion that He opens the path of liberation and welcomes surrendered Jeevans into His eternal abode.
Thus, O Daya Devi, the Lord's greatness as the Creator of the universe and the Bestower of Moksha shines forth through You. These two supreme glories are manifestations of Your boundless mercy. (68)