Sunday, June 21, 2026

158 - Daya Shatakam - 71 - பாபிகளையும் அரவணைக்கும் தயையின் ஒப்பற்ற துணிவு - The Unmatched Courage of Daya That Embraces Even Sinners

   श्री:

जय गरुड सुपर्ण 
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

71 - பாபிகளையும் அரவணைக்கும் தயையின் ஒப்பற்ற துணிவு - The Unmatched Courage of Daya That Embraces Even Sinners

त्रिविध चिदचित् सत्तास्थेम प्रवृत्ति नियामिका 
वृषगिरि विभोरिच्छा सा त्वं परैरपराहता । 
कृपण भरभृत् किंकुर्वाण प्रभूत गुणान्तरा 
वहसि करुणे वैचक्षण्यं मदीक्षण साहसे ॥ 71 ॥

पदच्छेदः
त्रिविध चित् अचित् सत्ता स्थेम प्रवृत्ति नियामिका 
वृषगिरि विभो: इच्छा सा त्वं परै: अपराहता । 
कृपण भर भृत् किंकुर्वाण प्रभूत गुणान्तरा 
वहसि करुणे वैचक्षण्यं मत् ईक्षण साहसे ॥ 71 ॥

करुणे — தயாதேவியே !
त्रिविध — மூவகைப்பட்ட
चित् अचित् — சேதநம் அசேதநம் இவற்றின்
सत्ता — ஸ்வரூபத்தையும்
स्थेम — இருப்பையும்
प्रवृत्ति — செயலையும்
नियामिका  — நியமிப்பவளாய்
 परै:  — பிறரால்
अपराहता — தடுக்கப்படாதவளாய்
कृपण — பேதைகளின்
भर भृत्  — பொறுப்பைத் தாங்குமவளாய்
किंकुर्वाण  — குற்றேவல் புரிகின்ற
प्रभूत — பெருமையுள்ள
गुणान्तरा — மற்றைக் குணங்களையுடையளாய்
वृषगिरि विभो: — திருமலையிலுள்ள பிரபுவின்
इच्छा — விருப்பத்தின்  வடிவாயுள்ள
सा — அத்தகைய
त्वं — நீ
मत् ईक्षण — என்னைக் கடாக்ஷிப்பது என்ற
साहसे — துணிவுச் செயலில்
वैचक्षण्यं — ஸாமர்த்யத்தை
वहसि — தாங்கி நிற்கின்றாய்.

பாபிகளையும் அரவணைக்கும் தயையின் ஒப்பற்ற துணிவு

தயாதேவியே! சேதநர் மூவகைப்படுவர். (1) பத்தர் (ஸம்ஸாரத்தில் உழல்பவர்) (2) முக்தர்-(மோக்ஷம் பெற்றவர்) (3) நித்யர் (நித்யஸூரிகள்). அசேதநமும் மூவகைப்படும். (1) ப்ரக்ருதி (2) காலம் (3) சுத்தஸத்துவம். இந்த மூவகைச் சேதந-அசேதநங்களுடைய ஸ்வரூபம்-அவை நீடித்து நிற்றல்-அவற்றின் செயல் ஆகிய அனைத்தையும் நீ தான் நடத்துகின்றாய். உன் போக்கை எவரும் தடுக்கமுடியாது. பக்தி யோகமென்னும் கடின உபாயத்தைச் செய்யமுடியாது வருந்துமவர்கள் ப்ரபத்தியைச் செய்கின்றனர். அவர்களைக் காக்கும் பொறுப்பு முழுதையும் நீயே ஏற்றுக்கொண்டுவிடுகின்றாய். எம்பெருமானுடைய மற்ற உயர்ந்த குணங்கள் அனைத்தும் உன்னைப் பேரரசியாய் வைத்து உனக்குத் தொண்டுபுரிகின்றன. திருவேங்கடநாதனுடைய ஆசையே தான் நீ. தயை என்பது தன் பயனைக் கருதாது பிறர் துன்பம் துடைக்க விரும்புவது தானே? இத்துணைப் பெருமைகளுடன் எல்லோரினும் எல்லாவற்றினும் மேம்பட்டு நிற்கும் நீ மிகத் துணிவான ஒரு செயலைச் செய்கின்றாய். என்னுடைய ஸம்பந்தம் உனக்கு வந்தால் உனக்கும் பெருமை குறையுமோ என்று அஞ்சும்படி அவ்வளவு கொடிய பாபங்களைச் செய்தவன் யான். இத்தகைய என்னையும் நான் செய்யும் ப்ரபத்தியென்னும் எளிய உபாயத்தைக் கொண்டு என்னைக் குளிரக் கடாக்ஷிக்கின்றாய். இச்செயலைச் செய்ய உன்னையன்றி வேறு எவருக்கும் துணிவும் ஆற்றலும் வருமோ? இது உனக்கே உரிய ஒரு தனிப் பண்பைக் காட்டுகின்றது. (71) 

The Unmatched Courage of Daya That Embraces Even Sinners

O Daya Devi!

Sentient beings (Chethanas) are of three kinds:

1.      Baddhas – those who wander in Samsara.

2.      Muktas – those who have attained Moksha.

3.      Nityas – the Nitya Suris who are eternally free.

Insentient entities (Achethanas) are also of three kinds:

1.      Prakriti – primordial matter.

2.      Kala – time.

3.      Suddha Sattvam – the pure spiritual substance of the divine realm.

The Swaroopam (essential nature), Sthithi (continued existence), and Pravritthi (functions and activities) of all these categories are sustained and governed by You. No one can obstruct Your course.

There are many who suffer because they are unable to perform the difficult path of Bhakti Yoga. Such people resort to Prapatti, the simple and accessible means. The moment they surrender, You take upon Yourself the entire responsibility of protecting them.

All the other exalted Kalyana Gunas of Emperuman stand around You like attendants serving their Empress.

Indeed, You are nothing but the very compassionate will of Tiruvengadanathan.

What is Daya? It is the desire to remove the suffering of others without seeking any benefit for oneself.

Though You possess such immeasurable greatness and stand above all beings and all things, You perform an act of astonishing boldness.

I am one who has committed such terrible sins that one may wonder whether even You would lose some of Your glory by associating with me.

Yet, when I perform the simple act of Prapatti, You cast Your cooling and comforting glance upon me.

Who other than You would possess the courage and power to do such a thing?

Who else would willingly accept and protect one burdened with such grave sins?

This reveals a unique quality that belongs to You alone.

Your greatness is not merely in protecting the virtuous; it lies in embracing even the most fallen Jeevathmas and making them worthy of salvation through Your boundless compassion. (71)

Central Message

The verse highlights the extraordinary courage of Daya. While others may hesitate to associate with sinners, Daya Devi does not. She accepts even those burdened with immense sins when they approach through Prapatti, taking full responsibility for their protection and upliftment. This fearless compassion is presented as a unique and incomparable attribute of Daya.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸