சாதகப் பறவையும் தயாமழையும்
உலகில் சாதகமென
ஒருவகைப் பறவை உண்டு. அது ஆறு-குளம் முதலிய நீர்நிலைகளில் உள்ள நீரைப் பருகாது.
மேகத்தினின்று வரும் மழை நீரையே எதிர்பார்த்து, அந்நீரைக் கொண்டே தன் விடாயைத் தீர்த்துக்கொள்ளும்.
எப்போதும் வானில் திரியும். தயாதேவியே! இப் பறவைபோன்ற சில புண்ணியசாலிகள் உலகில்
உளர். திருவேங்கட மலை மீது ஸ்ரீநிவாஸனென்னும் கருமுகில் உள்ளது. கருணையாகிய நீ
சேதநரை “இவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள்” என்று அபிமானிக்கின்றாய். இந்த உனது
அபிமானமே ஸ்ரீநிவாஸனென்னும் மேகத்தினின்று வரும் நல்ல மழையாகும். இந்த அன்பு
மாரியைப் பெற்றால் ஸம்ஸாரதாபமெல்லாம் ஒழியும். சில புண்ணியவான்கள் இதைப் பெற
விரும்புகின்றனர். அதற்காக ப்ரபத்தியைச் செய்து தகுதிபெற்று உனது அன்புமாரியைப்
பெறுகின்றனர். அதனால் இதுவரை தங்கள் பாபமிகுதியால் மனம் நொந்திருத்தலாகிய
பெருவிடாய் தணியப்பெறுகின்றனர். இப்படி உயர்ந்த அன்புநீரைப் பெற்றபின்பு மற்றைத்
தெய்வங்களாகிய நீர்நிலைகளை இவர்கள் கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை. தங்கள் சரீரம்
உள்ளவரை இப்புண்யவான்கள் நித்ய நைமித்திக கைங்கர்யங்களையும் பகவத் பாகவத
கைங்கர்யங்களையும் செவ்வனே செய்துகொண்டு வானில் திரியும் சாதகம்போல் சிந்தனையற்று
மகிழ்ந்து நிற்பர். இவ்வாறு இவர்கள் உயர்நிலைபெற நீயே காரணமாகின்றாய். (58)
The Chataka Bird and
the Rain of Divine Compassion
In this world, there is a bird called the Chataka (Sādhaka bird). It does not drink water from rivers,
ponds, or other water sources. It waits only for the rainwater that falls
directly from the clouds, and quenches its thirst only with that water. It
constantly moves about looking toward the sky.
O Daya Devi! There are some blessed Jeevans in this world who are like that
bird. Upon the Tirumala hill stands Srinivasa like a dark raincloud. You, who
are Compassion itself, lovingly claim certain Jeevathmas as “These belong to
me.” This loving affection of yours becomes the cool and auspicious rain that
pours from that cloud called Srinivasa.
When Jeevathma receive this shower of divine love, all the heat and suffering
of Samsara disappear. Some fortunate devotees long only for this grace.
Therefore, they perform Prapatti and become qualified to receive your rain of
compassion. Through that, the great thirst caused by the sorrow of their
accumulated sins becomes completely quenched.
After receiving this lofty rain of divine love, these blessed Jeevans no longer even glance toward other deities, just as the Chataka bird ignores all other waters. As long as they live in this body, they properly perform Nithya and Naimittika kainkaryams, along with Bhagavat and Bhagavata kainkaryams. Free from worldly anxiety, they remain joyful like the Chataka bird that ever looks upward to the sky. (58)