Sunday, June 7, 2026

144 - Daya Shatakam - 57 - வழுவாது பலன் தரும் தயாதேவி - Daya Devi Fair in granting fruits

   श्री:

जय गरुड सुपर्ण 
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

57 - வழுவாது பலன் தரும் தயாதேவி - Daya Devi Fair in granting fruits

सकरुण लौकिक प्रभु परिग्रह निग्रहयोः 
नियतिमुपाधि चक्र परिवृत्ति परम्परया । 
वृषभ महीधरेश करुणे वितरङ्गयतां 
श्रुति मित संपदि त्वयि कथं भविता विशयः ॥ 57 ॥

पदच्छेदः
सकरुण लौकिक प्रभु परिग्रह निग्रहयोः 
नियतिम् उपाधि चक्र परिवृत्ति परम्परया । 
वृषभ महीधर ईश करुणे वितरङ्गयतां 
श्रुति मित संपदि त्वयि कथं भविता विशयः ॥ 57 ॥

वृषभ महीधर ईश  — திருவேங்ககடமலைநாதனுடைய
करुणे — தயையே!
सकरुण — இரக்கமுடையரான
लौकिक — உலகிலுள்ள
प्रभु — பிரபுக்களின்
परिग्रह — அனுக்ரஹம்
निग्रहयोः  — தண்டனை இவை
नियतिम् — கிடைத்தே தீரும் என்ற நியமத்தை
उपाधि — அந்த அந்தக் காரணங்களின்
चक्र परिवृत्ति— சக்கரம்போல் மாறி மாறி வருகின்ற
परम्परया — வரிசையால்
वितरङ्गयतां — தெளிந்தவர்கட்கு
श्रुति मित — வேதங்களால் நிச்சயிக்கப்பட்ட
संपदि  — பெருமையுடைய
त्वयि— உன்னிடத்தில்
विशयः  — ஸந்தேஹம்
कथं — எவ்வாறு
भविता — உண்டாகும்?

வழுவாது பலன் தரும் தயாதேவி

திருவேங்கடநாதனுடைய தயாதேவியே! உலகில் உள்ள பிரபுக்கள் தங்களுக்கு ஜனங்கள் பணிந்து நடந்தால் அவர்களுக்கு விசேஷ அனுக்ரஹம் செய்கின்றனர். தங்களுக்கு எதிராக நடந்தால் தக்கவாறு தண்டிக்கின்றனர். இதனால் அவர்களைக் கருணையற்றவரென்று கூறமுடியுமா? முடியாது. அவர்கள் கருணையுடையரே. தங்கள் மனிதர்கள் நடப்பதற்கேற்பத் தாமும் பயனளிக்கின்றனர். இவ்வுண்மையை அறிஞர்கள் நன்கறிவர். இப்படி நல்லன செய்தலும் தீயன செய்தலுமாகிய காரணங்கள் சக்கரம் போல் மாறிமாறி வர, அவற்றின் பயனும் அவசியம் வரும் உண்மையை ஆராய்ந்து பார்த்துத் தெளிந்தவர்க்கு நீ நியாயமாய்ப் பலனளித்தலில் சிறிதாவது ஐயம் உண்டாகுமா? ஒருபோதும் இல்லை. உன் பெருமையை வேதங்களெல்லாம் வாய் வெருவிப் புகழ்கின்றன. உலகிலுள்ள பிரபுக்க ளெல்லாம் வாய் வெருவிப் புகழ்கின்றன. உலகிலுள்ள பிரபுக்களே நேர்மையாய் நீதி வழங்கும் போது எல்லோரினும் மேம்பட்ட நீ சேதநர்கள் விஷயத்தில் அவரவர் நடந்து கொள்வதற்கேற்ப நீதி வழுவாது பலன் தருவதில் எவ்வாறு ஐயம் உண்டாகும்? ஆகவே உனக்கு அநுகூலமாய் நடப்பவர்க்கு விசேஷ அனுக்ரஹங்களைச் செய்கின்றாய்; விபரீதமாய் நடப்பவர்க்குக் குற்றத்துக்குச் சிறிதும் மிகுதிப்படாது உரிய தண்டனையையே அளிக்கின்றாய். நீ அவர்களை இவ்வாறு தண்டிப்பதும் அவர்களைத் தூயராக்குவதற்குத்தானே! (57) 

Daya Devi Fair in granting fruits

In this world, rulers and kings show special grace to those who submit to them and live obediently. Those who act against them are punished appropriately. Can such rulers therefore be called merciless? Certainly not. They are indeed compassionate. They simply give results according to the way their people conduct themselves. Wise people clearly understand this truth.

In the same way, good actions and evil actions keep revolving like a wheel, and their corresponding results also inevitably follow. Those who deeply reflect upon this reality and understand it properly will never doubt your fairness in granting the fruits of actions.

All the Vedas stand astonished and praise your greatness. When even worldly rulers administer justice properly, how can there be any doubt that you — who are far superior to all — grant results to Jeevathmas with perfect justice and without deviation?

Therefore, to those who act favorably toward you, you bestow special anugraham (grace). To those who act contrary, you give only the exact punishment appropriate to their faults, without the slightest excess. Even this punishment that you give is only for the purpose of purifying them and making them worthy. (57)

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸