श्री:
श्रीमते निगमान्त महादेशिकाय नम:
மாநிதி
அளிக்கும் தயாதேவி
தயாதேவியே! உலகில் உன்னைத் தவிர வேறு எத்தனையோ பேர்களுடைய தயைகள் உள்ளன. பிரமன் - இந்திரன் முதலிய தேவர்களுக்கும் கருணை உண்டு. அரசர் பெருஞ்செல்வர் முதலிய பலருக்கும் தயை உண்டு. ஆனால் அவர்களின் தயைகளெல்லாம் அற்ப பலன்களையே அளிப்பன. நிலையாயிருப்பனவுமல்ல. ஒருகால் உதிக்கும்; மற்றொருகால் விலகிப் போகும். மக்கள் அந்தக் கருணையை நம்பியிருக்க முடியாது. அந்த அற்பப் பலனையும் கொடுத்தாலும் கொடுக்கும். கொடாமலும் இருக்கும். மக்கள் சிறு குற்றம் புரிந்தாலும் அக்கருணையே கோபமாக மாறிப் பல கஷ்டங்களை அவர்களுக்கு விளைவிக்கும். ஸ்ரீநிவாஸனுடைய கருணையாகிய உனது பெருமையோ அத்யற்புதமானது. உனது சக்தி - ஸங்கல்பம் முதலியவற்றை ஒருவரும் தடைசெய்யமுடியாது. நீ சலியாது மிக உறுதியாய் நிற்பவள். நீ அடியார்களுக்குப் பலன் கொடுத்தே நிற்பாய். நீ பலன் தருவதைப்பற்றி சேதர்களுக்குச் சந்தேகம் வருவதற்கே இடமில்லை. நீ எத்தகைய பலனைத் தருகின்றாய்? திருமலையில் விளங்கும் ஸ்ரீநிவாஸன் என்னும் எல்லையற்ற பெரிய நிதியையன்றோ அடியார்களுக்குக் கொடுத்துவிடுகின்றாய். உன்னால் அந்தப் பெருநிதியன்றோ அடியார்களுக்கு வசமாகின்றது. இப்படி எண்ணற்ற பெருமையுடைய உன் முன்னால் நிற்பதற்கும் மற்றவர்களின் தயை தகுதியுடையதாமோ? (56)
Supreme Daya which grants Supreme Treasure
Daya Devi! In this world,
there are many kinds of compassion besides yours. Brahma, Indra, and other
Devas possess compassion. Kings, wealthy people, and many others also show
kindness. But all those forms of compassion grant only small and temporary benefits.
They are not steady or permanent. At one time they may appear, and at another
they may disappear. People cannot fully depend upon such mercy.
Even the little help they give
may or may not come. If people commit even a small mistake, that same
compassion may quickly turn into anger and bring suffering upon them.
But your compassion, the
compassion of Srinivasan, is wondrous beyond measure. No one can obstruct your
power or your divine resolve. You stand firm without wavering. You never fail
to bless your devotees. There is not even the slightest room for doubt about
whether you will grant your grace.
And what is the fruit you
grant? You do not merely give small worldly benefits. You grant devotees the
infinite treasure called Srinivasan Himself, who shines upon Tirumala. Through
you, that supreme treasure becomes easily attainable to devotees.
When your compassion possesses such immeasurable
greatness, can the compassion of anyone else even stand before it? (56)