Friday, June 5, 2026

142 - Daya Shatakam - 55 - தயாதேவி & கங்கை - DayaDevi & Ganga

 श्री:

जय गरुड सुपर्ण 
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

55 - தயாதேவி & கங்கை - DayaDevi & Ganga
निगम समाश्रिता निखिल लोक समृद्धि करी 
भजदघ कूल मुद्रुज गतिः परितप्त हिता । 
प्रकटित हंस मत्स्य कमठाद्यवतार शता 
विबुध सरिच्छ्रियं वृषगिरीश दये वहसि ॥ 55 ॥

पदच्छेदः
निगम समाश्रिता निखिल लोक समृद्धि करी 
भजत् अघ कूल मुद्रुज गतिः परितप्त हिता । 
प्रकटित हंस मत्स्य कमठ आदि अवतार शता 
विबुध सरित् श्रियं वृषगिरि ईश दये वहसि ॥ 55 ॥

वृषगिरि ईश दये  — திருவேங்கடநாதனுடைய கருணையே! (நீ)
निगम — வேதங்களால் (மரங்களால்)
समाश्रिता — போற்றப் பெற்றவளாய் (அணுகப் பெற்றதாய்)
निखिल लोक— எல்லாவுலகுக்கும்
समृद्धि करी  — செழுமையைச் செய்பவளாய்
भजत् अघ — சரணமடைந்தவர்களின் பாபங்களாகிய (ஆற்றின்)
कूल मुद्रुज गतिः  — கரைகளை உடைக்கின்ற பெருக்கையுடையளாய்
परितप्त — தவிப்பவர்களுக்கு
हिता — நன்மை புரிபவளாய்
प्रकटित — தோற்றுவிக்கப்பட்ட
हंस मत्स्य  — அன்னம் மீன்
कमठ आदि  — ஆமை முதலிய (வற்றையும்)
अवतार शता  — நூற்றுக்கணக்கான பிறப்புக்களையுடையாய் (நூற்றுக்கணக்கான இறங்கு துறைகளையும் உடை யதான)
विबुध सरित्  — தேவ கங்கையின்
श्रियं — பெருமையை
वहसि — கொண்டுள்ளாய்.

தேவகங்கைக்கு நிகரான தயையின் பெருமை

திருவேங்கடமுடையானுடைய தயாதேவியே! நீ தேவ கங்கை போன்றவளே என்பதற்குப் பின்னும் சில சான்றுகள் தெரிகின்றன. தேவகங்கையை வேதங்கள் போற்றுகின்றன. பல மரங்களைச் சார்ந்து வெள்ளம் பெருகும். அது தன் வெள்ளத்தாலே நாடு முழுதும் செழிக்கச் செய்கின்றது. அதன் வெள்ளம் இரு கரைகளையும் உடைத்துக்கொண்டு செல்லுகின்றது. அதில் நீராடுவார்க்குத் தாபத்தைப் போக்கி நன்மை புரிகின்றது; தனது நீரில் அன்னம் - மீன் - ஆமை முதலிய ஐந்துக்களைத் தோற்றுவிக்கின்றது. நூற்றுக்கணக்கான துறைகளையுடையது. தயாதேவியே! உன்னையும் வேதங்கள் மிகப் போற்றுகின்றன. இம்மைப் பயன்களை வேண்டுவார்க்கு அவற்றைக் கொடுத்து எல்லாவுலகமும் க்ஷேமமடையச் செய்கின்றாய். உன்னைச் சரணமடைந்தவர்களின் புண்ணியம் - பாபம் என்னும் இருவினைகளையும் ஒழித்துவிடுகின்றாய். ஸம்ஸார பந்தத்தில் தவிப்பவர்க்கு அந்தத் தாபத்தைப் போக்கி மோக்ஷம் பெறச் செய்கின்றாய். உன்னாலேயே எம்பெருமான் ஹம்ஸம்-மத்ஸ்யம்- கூர்மம் முதலிய பல்வேறு அவதாரங்களைச் செய்கின்றான். அவற்றால் உலகம் நல்வாழ்வு பெறுகின்றது. இத்துணைப் பெருமைபெற்ற நீ இவ்வாறு தேவகங்கையை நிகர்க்கின்றாய். (55) 

The Greatness of Daya Compared to the Sacred Ganga

Daya Devi of Tiruvengadamudaiyan! There are even more reasons why you are comparable to the sacred river Ganga.

The Vedas praise the holy Ganga. Its waters flow past many trees and nourish the entire land with abundance. Its floodwaters overflow and break through both riverbanks. Whoever bathes in it is relieved of suffering and purified. It also gives rise to creatures such as swans, fish, and turtles within its waters. It contains hundreds of sacred bathing places (ghats and tirthas).

In the same way, the Vedas highly praise you also. You grant worldly benefits to those who desire them and thereby bring welfare to all the worlds. For those who surrender to you, you destroy both kinds of karma — punya and papa. For Jeevans suffering in the bondage of Samsara, you remove their burning sorrow and lead them toward Moksha.

Because of you, Emperuman takes many divine incarnations such as Hamsa, Matsya, and Kurma. Through these avataras, the world receives protection and upliftment.

Thus, possessing such greatness, you truly equal the sacred Ganga. (55) 

Notes by Sri:

இந்த ச்லோகத்தில் கூறப்பட்டுள்ள உவமைகள் : 

உவமை (எடுத்துக்காட்டு)

ஆத்மார்த்தம் (உள்ளார்ந்த பொருள்)

தேவகங்கை

தயாதேவி

வேதங்கள் கங்கையைப் போற்றுதல்

வேதங்கள் தயையைப் போற்றுதல்

கங்கை வெள்ளம் நாடு முழுதும் செழிக்கச் செய்தல்

தயை உலகம் முழுவதும் க்ஷேமம் அளித்தல்

கங்கை இரு கரைகளையும் உடைத்துச் செல்லுதல்

தயை புண்ணியம்–பாபம் என்னும் இருவினைகளையும் ஒழித்தல்

கங்கையில் நீராடுவோரின் தாபம் நீங்குதல்

தயையைச் சரணமடைந்தோரின் ஸம்ஸார தாபம் நீங்குதல்

கங்கையில் அன்னம், மீன், ஆமை முதலியவை தோன்றுதல்

தயையால் எம்பெருமான் ஹம்ஸம், மத்ஸ்யம், கூர்மம் முதலிய அவதாரங்கள் எடுதல்

கங்கையின் நூற்றுக்கணக்கான துறைகள்

தயையின் பலவகை அருள் மார்க்கங்கள்

கங்கையின் தூய, குளிர்ந்த ஓட்டம்

தயையின் பரிசுத்த, கருணைமிகு அருள் ஓட்டம்

 Similes explained in this sloka:

Simile (Example)

Spiritual Meaning

The sacred river Ganga

Daya Devi

Ganga praised by the Vedas

Daya praised by the Vedas

Ganga nourishing the land with floods

Daya bringing welfare to all worlds

Ganga overflowing both riverbanks

Daya destroying both punya and papa karmas

Bathing in Ganga removes suffering

Surrendering to Daya removes Samsara sorrow

Ganga giving rise to swans, fish, turtles, etc.

Daya causing Bhagavan’s incarnations such as Hamsa, Matsya, Kurma

The many sacred bathing ghats of Ganga

The many forms of grace and upliftment through Daya

The cool and purifying flow of Ganga

The compassionate and liberating flow of Daya

 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸