श्री:
श्रीमते निगमान्त महादेशिकाय नम:
05. श्री श्रीदयाशतकम् Daya Shatakam ஸ்ரீ தயா சதகம்
கற்பக்கொடி, பிராயச்சித்தமாயுள்ளவள் ஸம்சாரத்திலிருந்து கரையேற்றுபவள்
திருவேங்கடநாதனது கருணாதேவியே! பக்தியோகம் முதலிய கடினமான உபாயங்களைச் செய்ய முடியாமையால் வேறு கைம்முதலற்று உன்னைச் சரணமடைகின்றனர் சேதநர். அவர்களுக்கு நீ கற்பக் கொடியாய் நின்று அவர்கள் வேண்டும் எல்லாப் பலன்களையும் அருள்கின்றாய். கொடிய பாபங்களைச் செய்யும் சேதனுக்கு கடினமான பிராயச்சித்தங்கள் சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்டுள்ளன. அவன் அவற்றை நேர்மையாய்ச் செய்து முடிக்க உன் துணை அவசியமாய் உள்ளது. அவ்வாறு கடினமான பிராயச்சித்தங்களைச் செய்ய முடியாதவனுக்கு அந்தச் சுமையை நீயே ஏற்றுக்கொள்கின்றாய். நீயே முதன்மையான பிராயச்சித்தமாய் நின்று அவனைத் தூயனாக்கியருள்கின்றாய். உனக்கு உள்ள இப்பெருமைகளையெல்லாம் நினைந்து ஞானிகளான ஆசார்யர்கள் 'ஸம்ஸார ஸமுத்ரத்தில் மூழ்கியவனை நீயே கரையேற்றவல்லவள்' என்று துணிகின்றனர். (14)
Karpaga Kodi, Means of Prayaschittam, assistance to cross
samsaram
O Goddess of Compassion of Lord Srinivasa! Since people are unable to follow difficult paths like Bhakti Yoga, they take refuge in you as their only support. You stand like a wish-fulfilling creeper i.e karpagakodi and grant them all that they seek. For those who commit serious sins, the scriptures prescribe strict forms of atonment/repentance/Prayaschittam. But to complete them properly, your help is necessary. For those who cannot perform such difficult Prayaschitta practices, you yourself take on that burden. You become the main means of purification and make them pure. Thinking of all these great qualities, wise Acharyas declare that you alone can bring a person who is drowning in the ocean of samsara safely to the shore. (14)
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸