Friday, April 24, 2026

Daya Shatakam - 13 - கருணை வெள்ளத்தில் பாபங்கள் நிலைக்க முடியாது – In the flood of Compassion, Sins Cannot Survive

   श्री:

जय गरुड सुपर्ण 
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

05. श्री श्रीदयाशतकम्  Daya Shatakam ஸ்ரீ தயா சதகம்

13 - கருணை வெள்ளத்தில் பாபங்கள் நிலைக்க முடியாது – In the flood of Compassion, Sins Cannot Survive

भगवति दये भवत्या वृषगिरि नाथे समाप्लुते तुङ्गे । 
अप्रतिघ मज्जनानां हस्तालम्बो मदागसां मृग्यः ॥ 13 ॥

पदच्छेदः
भगवति दये भवत्या वृषगिरि नाथे समाप्लुते तुङ्गे । 
अप्रतिघ मज्जनानां हस्तालम्ब: मत् आगसां मृग्यः ॥ 13 ॥

भगवति दये  — பெருமை பொருந்திய தயாதேவியே!
तुङ्गे — உயர்ந்தவனான
वृषगिरि नाथे  — திருவேங்கடமுடையான்
भवत्या — உன்னால்
समाप्लुते — மூழ்கிக்கப்பட்டபொழுது
अप्रतिघ मज्जनानां — மூழ்குவதற்குத் தடையற்றனவான.
मत् आगसां — என் பாபங்களுக்கு
हस्तालम्ब: — கைப்பிடி
मृग्यः  — தேடுவதற்கு உரியதாகின்றது.

கருணை வெள்ளத்தில் பாபங்கள் நிலைக்க முடியாது

பெருமை மிக்க தயாதேவியே! திருவேங்கடமுடையான் மலைமீது உயரமான இடத்தில் உறைகின்றான். அவனையே உனது வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கச் செய்துவிட்டாய். அப்படியிருக்க, என் பாபங்களும் உன் வெள்ளத்தில் மூழ்கி விடுவதில் தடை உண்டோ? அவனே மூழ்கித் தடுமாறும் போது அவன் நெஞ்சில் நினைத்திருக்கும் என் பாபங்களும் அவனே சேர்ந்து உன் வெள்ளத்தில் மூழ்கிவிடாவோ? ஆகவே என் பாபங்களுக்குக் கைகொடுத்துக் கரையேற்றுபவர் ஒருவரும் இல்லை. (திருவேங்கடமுடையானுடைய குணங்களை நீயே முதன்மை ஸ்தாநம் பெற்றிருப்பதால் நீ நிறைந்திருக்கப் பெற்ற அவன் என்னைக் குளிரக் கடாக்ஷித்து என் பாபங்களை ஒழித்து என்னைக் காத்தருள்வான் — என்று உட்கருத்து) (13) 

In the Flood of Compassion, Sins Cannot Survive

O glorious Goddess of Compassion! Lord Srinivasa lives on the high Tiruvengadam hill, yet you have made even Him remain immersed in your flood of compassion. If that is so, can my sins escape being drowned in your flood? When even the Lord is immersed and overwhelmed by you, will not my sins—held in His heart—also sink along with Him into your compassion? Therefore, there is no one who can support or save my sins. Since you hold the highest place among His qualities and fully fill Him, He will surely cast a cooling, gracious glance on me, remove my sins, and protect me. (Inner Meaning – Daya Devi, Since you hold the highest place among all the qualities of Lord Srinivasa and completely fill Him, He will surely look at me with a cool and kind glance, remove my sins, and protect me.)  (13)

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸