श्री:
श्रीमते निगमान्त महादेशिकाय नम:
05. श्री श्रीदयाशतकम् Daya Shatakam ஸ்ரீ தயா சதகம்
12 - தாயின் பராமரிப்பு மற்றும் ஸம்சார நோய்க்கான தீர்வு - A Mother’s Care and the Cure for Samsara
தாயின்
பராமரிப்பு மற்றும் ஸம்சார நோய்க்கான தீர்வு
உலகில் ஜ்வரம் முதலியவற்றின் வேகத்தால்
மூர்ச்சையுற்றுக் கிடக்கும் தன் புதல்வனுக்கு அவன் தாய் சிறந்த வைத்தியனைக் கொண்டு
மலையில் விளையும் பச்சிலைகளால் அவனது மூர்ச்சையைப் போக்கி நோயைத் தீர்த்து
உடல்நலம் பெறச் செய்வது காண்கின்றோம். தயாதேவியே! நீயே அடியேனுக்குத் தாய். உன்
குழந்தை நான். என்னைக் காப்பது உன் பொறுப்பு. நான் செய்த பாபங்களுக்கு அளவேயில்லை.
உலகிலுள்ள எல்லா மக்களுடைய புண்ணியங்களையும் என்னுடைய பாபங்களையும் சீர்தூக்கிப்
பார்த்தால் என் பாபங்களின் மிகுதி நன்கு புலப்படும். அவர்களின் புண்யங்கள்
அனைத்தையும் ஒரு பிடியில் எடுத்து உறிஞ்சிவிட வல்லன என் பாபங்கள். இந்தக் கொடும்
பாபங்களால் மதியிழந்து மயங்கிக் கிடக்கின்றேன். உன் நாயகனான ஸ்ரீநிவாசன்
திருவேங்கடமலையில் வாழ்கின்றான். பச்சிலைகளுக்குப் பெயர் பெற்ற இடம் மலை.
ஸ்ரீநிவாசன் ஸம்ஸார நோய்களைத் தீர்க்கும் சிறந்த மருத்துவனாயுள்ளான். உன்
தன்மைகளாலும் செயல்களாலும் அவனை நீ மகிழ்விக்கின்றாய். அவன் உன் சொல்
தட்டமாட்டான். அவனைக் கொண்டு நீ என் பாபங்களைப் போக்கி மதிமயக்கத்தைத் தீர்த்து
என்னை உயிர்ப்பித்து நல்வாழ்வு பெறச் செய்தருள வேண்டும். (12)
A
Mother’s Care and the Cure for Samsara
In this world, when a child faints due to a high fever or illness, the mother brings a skilled doctor and uses fresh herbs from the mountains to cure the sickness and restore the child’s health. O Goddess of Compassion! You are my mother, and I am your child. It is your duty to protect me. The sins I have committed are countless. If we compare all the good deeds of people in the world with my sins, my sins will clearly be far greater. My sins are so powerful that they can swallow up all their merits at once. Because of these terrible sins, I have lost clarity and lie in a state of confusion. Your Lord, Srinivasa, lives in Tiruvengadam, a mountain known for its healing herbs. He is the great doctor who cures the disease of samsara. By your nature and actions, you please Him, and He will not refuse your word. So, through Him, please remove my sins, cure my confusion, and bring me back to life, granting me a good and noble life. (12)
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸