Sunday, April 26, 2026

102 - Daya Shatakam - 15 – எல்லா குணங்களிலும் தலைசிறந்தது - Best of all Gunas

 श्री:

जय गरुड सुपर्ण 
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

05. श्री श्रीदयाशतकम्  Daya Shatakam ஸ்ரீ தயா சதகம்

15 – எல்லா குணங்களிலும் தலைசிறந்தது - Best of all Gunas 

वृषगिरि गृहमेधि गुणाः बोध बलैश्वर्य वीर्य शक्ति मुखाः । 
दोषा भवेयुरेते यदि नाम दये त्वया विनाभूताः ॥ 15 ॥

पदच्छेदः
वृषगिरि गृहमेधि गुणाः बोध बल ऐश्वर्य वीर्य शक्ति मुखाः । 
दोषा: भवेयु: एते यदि नाम दये त्वया विनाभूताः ॥ 15 ॥

दये — கருணாதேவியே! 
बोध बल — ஞானம் பலம் 
 ऐश्वर्य वीर्य — ஐச்வர்யம் வீர்யம் 
वृषगिरि गृहमेधि गुणाः: — திருமலையில் இல்லறம் நடத்தும் ஸ்ரீநிவாஸனுடைய குணங்கள்
शक्ति मुखाः — சக்தி முதலிய 
त्वया — உன்னைவிட்டு
विनाभूताः  यदि नाम — பிரிந்தவைகளாய் இருக்குமேயாகில்                                        
एते — இந்தக் குணங்கள் 
दोषा: — தோஷங்களாகவே
भवेयु: — ஆகிவிடும்.

எல்லா குணங்களிலும் தலைசிறந்தது

தயாதேவியே! உலகம் முழுதையும் தன் குடும்பமாகக் கொண்டுள்ள ஸ்ரீநிவாஸன் திருவேங்கடமலையில் பிராட்டிமாருடன் இல்லறம் நடத்துகின்றான். அவனுக்கு உள்ள எண்ணற்ற குணங்களுள் முக்கியமானவை ஆறு. அவை ஜ்ஞானம் - பலம் - ஐச்வர்யம் - வீர்யம் - சக்தி - தேஜஸ் என்பன. இந்த ஆறு குணங்களையுடைமையாலேயே அவன் பகவாந் எனப்படுகின்றான். அக்குணங்கள் அவனிடம் உன்னுடன் சேர்ந்திருப்பதாலேயே அவை நல்வழியில் பயன்பட்டுக் குணங்களெனப் பெருமை பெறுகின்றன. நீ கூடாவிடில் அக்குணங்கள் சேதநருக்கு எம்பெருமான் தண்டனையாகிய தீங்கு செய்யப் பயன்படுதலின் தோஷங்களாகவே ஆகி விடும். உதாரணமாக-ஜ்ஞானம் பலம் முதலிய குணங்கள் சேதநரிடம் உள்ள குற்றங்களைப் பார்த்தல்-அவர்களை நன்கு தண்டித்தல் முதலிய செயல்களுக்குப் பயன்படும். ஆதலால் அந்தக் குணங்கள் தோஷங்களாகிவிடும். தயாதேவியாகிய நீ கூடியிருந்தால் உன் வலிமை ஓங்கி நிற்குமாதலின் அக்குணங்கள் அனைத்தும் உன் பக்கம் சேர்ந்து சேதநர்களைக் காப்பதற்கே துணை நிற்கும். இத்தகைய பெருமையாலேயே குணங்களுள் நீ தலைசிறந்து நிற்கின்றாய். (15)

 Best of all Gunas

O Goddess of Compassion! Lord Srinivasa, who considers the whole world as His family, lives in Tiruvengadam with His divine consorts. Among His countless qualities, six are the most important—Jnana (knowledge), Bala (strength), Aishvarya (wealth), Veerya (valor), Shakti (power), and Tejas (radiance). Because He possesses these six qualities, He is called Bhagavan. However, these qualities become truly noble and beneficial only when they are joined with you, Compassion. Without you, these same qualities can turn into faults, as they may be used to see the mistakes of people and punish them strictly. For example, knowledge and strength could be used to identify faults and give punishment, which would only harm the soul. But when you, as Daya Devi, are present, your influence rises above all, and these qualities align with you and work only to protect and uplift beings. Because of this greatness, you stand as the highest among all divine qualities. (15)

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸