Monday, April 27, 2026

103 - Daya Shatakam - 16 - ப்ரளயம் - கருணையின் திருவிளையாடல் - Pralaya as an Act of Compassion

श्री:

जय गरुड सुपर्ण 
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

05. श्री श्रीदयाशतकम्  Daya Shatakam ஸ்ரீ தயா சதகம்

16 - ப்ரளயம் - கருணையின் திருவிளையாடல் - Pralaya as an Act of Compassion

आसृष्टि सन्ततानाम् अपराधानां निरोधिनीं जगतः ।
पद्मा सहाय करुणे प्रतिसञ्चर केळिमाचरसि ॥ 16 ॥
पदच्छेदः
आसृष्टि सन्ततानाम् अपराधानां निरोधिनीं जगतः ।
पद्मा सहाय करुणे प्रतिसञ्चर केळिम् आचरसि ॥ 16 ॥

पद्मा सहाय करुणे —     ஸ்ரீநிவாஸனுடைய தயாதேவியே!               
आसृष्टि — படைப்புக்காலம்   முதல்       
सन्ततानाम् — தொடர்ந்து    செய்யப்பட்டு வருகின்ற                       
जगतः  — உலகத்தின் 
अपराधानां — பாபங்களுக்கு 
निरोधिनीं — தடைசெய்வதாயுள்ள 
प्रतिसञ्चर केळिम् — பிரளயமென்னும் விளையாடலை          
आचरसि — செய்கின்றாய். 

ப்ரளயம் - கருணையின் திருவிளையாடல்

திருவேங்கடநாதனாகிய ஸ்ரீநிவாஸனுடைய தயாதேவியே! படைப்புக்காலம் முதல் உலகிலுள்ள மக்கள் செய்து வந்த பாபங்களுக்கு எல்லையில்லை. அவர்கள் பாபச் செயல்களினின்று சற்றும் ஓய்வதில்லை. இவ்வாறே நடந்தால் அவர்கள் நற்கதி பெறுவதற்கு வழி ஏது? அவர்கள் பாபச் செயல் புரிந்து கொண்டே போவதை நிறுத்த நீ திருவுள்ளங்கொண்டு பிரளயமென்னும் ஒரு திருவிளையாடலை ஏற்படுத்துகின்றாய். சேதநர்களுக்குச் சரீரம், இந்த்ரியம் முதலியன இல்லாமல் உறக்க நிலையில் இருக்குமாறு செய்து ஜடப் பொருளைப் போலாக்குகிறாய். அப்பொழுது பாபம் செய்ய அவர்களுக்கு வாய்ப்பு இல்லையன்றோ! ஓயாத ஸுக துக்கங்களை அனுபவித்து வந்த களைப்பும் தீரும். பாபங்களையே செய்து வந்த பழக்கமும் அறுபடும். இத் திருவிளையாடலும் அவர்களிடம் நல்ல எண்ணங்கொண்டு செய்த செயலேயாகும். உலகில் தாய்மார்கள் தங்கள் குழந்தைகள் நீண்ட காலம் துஷ்டச் செயல்களைச் செய்து வந்தால் அதனால் வந்த களைப்பு நீங்கவும் அச்செயல்களைச் சற்று மறந்திருக்கவும் நிர்ப்பந்தமாய்ப் படுக்க வைத்து உறங்கச் செய்வார்கள். அக்குழவிகளும் தம் சேஷ்டைகளை மறந்து உறங்கும். விழித்த பின் அச்செயல்கள் குறையும். அவ்வாறே ப்ரளய லீலையைச் செய்து மக்களைப் பாபச் செயல்களினின்று ஓய்வு பெறச் செய்கின்றாய். (16) 

Pralaya as an Act of Compassion

O Goddess of Compassion of Lord Srinivasa! From the time of creation, people in this world have committed countless sins without any pause. If this continues, how can they ever attain a good path? To stop this endless flow of sinful actions, you, out of your grace, bring about the divine play called Pralaya (dissolution). During this time, beings are put into a state like deep sleep, without body or senses, almost like inert matter. In that state, they have no chance to commit sins. They also get relief from the constant cycle of pleasure and pain, and their habit of doing wrong slowly fades away. This too is an act done out of your compassion for their welfare. Just as mothers in this world make their children sleep when they become tired from continuous mischief—so that they may rest and forget those actions for a while, and after waking behave better—you bring about Pralaya so that people may pause from sinful acts and return refreshed.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸