श्री:
जय गरुड सुपर्ण
श्रीमते निगमान्त महादेशिकाय नम:
श्रीमते निगमान्त महादेशिकाय नम:
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
28 - பெருமாளின் கவசமாக விளங்கும் கருணை- Compassion as the Lord’s Protective Armor
करुणे दुरितेषु मामकेषु
प्रतिकारान्तर दुर्जयेषु खिन्नः ।
कवचायितया त्वयैव शार्ङ्गी
विजयस्थानमुपाश्रितो वृषाद्रिम् ॥ 28 ॥
पदच्छेदः
करुणे दुरितेषु मामकेषु
प्रतिकारान्तर दुर्जयेषु खिन्नः ।
कवचायितया त्वया एव शार्ङ्गी
विजयस्थानम् उपाश्रित: वृषाद्रिम् ॥ 28 ॥
करुणे — தயாதேவியே!
मामकेषु — என்னுடையவான
दुरितेषु — பாபங்கள்
प्रतिकारान्तर — வேறு பரிஹாரங்களால்
दुर्जयेषु — வெல்ல முடியாதவாயுள்ள பொழுது
खिन्नः — வருந்தியவனான
शार्ङ्गी — சார்ங்கபாணியான எம்பெருமான்
कवचायितया — கவசமாக ஆகிய
त्वया एव — உன்னுடன் கூடவே
विजयस्थानम् — வெற்றிபெறும் இடமான
वृषाद्रिम् — திருவேங்கடமலையை
उपाश्रित: — அடைந்துள்ளான்.
பெருமாளின் கவசமாக விளங்கும் கருணை
தயாதேவியே! நான் செய்த பாபங்கள் பற்பல. ஸ்ரீநிவாஸன் என் பாபங்களை எதிரிகளாகக் கருதி அவற்றை எப்படியாவது ஒழித்துத் தான் வெற்றி பெறப் பார்க்கின்றான். வேறு எவ்வகையாலும் அவனால் வெல்லமுடியாதபடி அத்துணை வலிமை யுடையன என் பாபங்கள். அவை அவனுடைய நெஞ்சில் அம்புபோல் பாய்ந்து அவனை வதைக்கின்றன. அதனால் அவன் மிக்க வேதனையுறுகின்றான். அதற்குப் பாதுகாப்பாக கருணையாகிய உன்னையே கவசமாகப் பூண்டான்; திருக்கையில் சார்ங்கவில்லை எடுத்துக்கொண்டான். என் பாபங்களைத் தொலைத்து வெற்றி பெறப் பாங்கான ஓர் இடம் தேடினான். திருவேங்கடமலையே ஏற்றதெனக் கண்டான்; அந்த மலையைப் பார்த்ததுமே எதிரிகளாகிய என் பாபங்கள் ஒழிந்துபோமெனத் துணிந்தான். அம் மலையிலேயே தன் திருமேனியழகையும் தன் குணங்களையும் காட்டிக்கொண்டு உன்னுடன் நித்யவாஸம் செய்கின்றான். நீ கவசமாய் நின்று அவனது நெஞ்சில் என் பாபங்கள் இடம் பெறாமல் செய்கின்றாய். (28)
Compassion as the Lord’s Protective Armor
O Goddess of Compassion! The sins I have committed are many. Lord Srinivasa considers my sins to be His enemies and seeks to destroy them somehow and gain victory over them. My sins are so strong that they cannot easily be defeated by any other means. They pierce His heart like arrows and cause Him great pain. Because of this, He suffers deeply. To protect Himself, He wears you—Compassion—as His armor and takes the divine Sarnga bow in His hand. He searched for a suitable place from which to destroy my sins and gain victory. He found Tiruvengadam hill to be the perfect place. The very sight of that hill would make my sins, which are like enemies, disappear. Therefore, He lives eternally on that hill, displaying the beauty of His divine form and His noble qualities along with you. You stand as His armor and prevent my sins from entering His heart. (28)
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸