श्री:
श्रीमते निगमान्त महादेशिकाय नम:
பாபங்களை விழுங்கும் கருணை
ஸ்ரீநிவாஸனுடைய தயாதேவியே! உனக்கு வயிறு பெரிது. அதற்குப் பூர்ண உணவு கொடுக்கவேண்டும். இல்லாவிடில் நீ பட்டினி கிடக்க நேரிடும். உன் வயிற்றுக்கு உணவு சேதனர்களின் பாபங்களேயாகும். உனக்கு நிறைந்த உணவு கொடுப்பவர் என்னைப்போல் ஒருவருமில்லை. பாபிகளுக்குள் முதன்மை ஸ்தாநம் பெற்றவன் நானே. என்னைப்போல் பாபமுள்ளவர் ஒருவரும் உனக்கு அகப்படமாட்டார். வயிறு நிறைய உணவு தரவல்ல என்னை விட்டுக்குறைந்த உணவையே தரவல்ல பிறரைத் தேடுகின்றாயே? அவர்களிடம் உள்ள எல்லாப் பாபங்களையும் நீ விழுங்கினாலும் உன் வயிறு நிரம்பாதே! உனக்குப் போதுமான உணவு கொடுக்க என்னிடமல்லவோ அத்தனை பாபங்கள் குவிந்துகிடக்கின்றன? என்னை விலக்கி நீ பிறரிடம் சென்றால் வயிற்றுக்குப் போதிய உணவு பெறாமல் பட்டினி கிடக்க நேரிடுமே! நீ எவ்வாறு ஜீவித்திருப்பாய்? என்று உன்னிடம் இரக்கங் கொள்கின்றேன். (29)
Compassion that Gulps Sins
O Goddess
of Compassion of Lord Srinivasa! Your stomach is very large, and it needs a
full meal. Otherwise, you would have to remain hungry. The food for your
stomach is nothing but the sins of beings. No one can provide you with as much
food as I can. Among sinners, I hold the highest place! You will not find
anyone else with as many sins as I have. Why then do you go searching for
others who can offer you only a little food, while leaving me aside? Even if
you swallow all the sins of others, your stomach will still not be full. Only
with me do you have enough sins to satisfy your hunger completely. If you leave
me and go elsewhere, will you not remain hungry without enough food? How then
will you continue to live? Thinking in this way, I even feel compassion for
you! (29)