श्री:
श्रीमते निगमान्त महादेशिकाय नम:
பெருமாளின் கோபத்தைத் தணிக்கும் கருணை
தயாதேவியே! வேதங்களும் ஸ்ம்ருதிகளும் ஸ்ரீநிவாஸனுடைய கட்டளையேயாகும். அவற்றில் கூறியபடியே சேதநர்கள் நடக்கவேண்டும். மாறாக நடந்தால் அவனது கட்டளையை மீறியதாகும். ஸம்ஸார மண்டலத்திலுள்ள சேதநர்கள் அவிவேகத்தால் அடிக்கடி சாஸ்த்ரங்களை முற்றிலும் மீறி நடக்கின்றனர். அவர்கள் விஷயத்தில் திருவேங்கடமுடையானுக்கு உண்டாகும் சினம் மேன்மேலும் வளர்ந்துகொண்டேபோய் அவனுக்கு மிகுந்த தாபத்தை (ஜ்வரத்தை) விளைவிக்கும். அதனால் பாபம் செய்த சேதநரை எம்பெருமான் தண்டிக்க முற்படுவான். அதை நீ பொறுப்பாயா? அந்தச் சேதநர்களை அவரவர் சக்திக்கு ஏற்ற பிராயச்சித்தங்களைச் செய்யுமாறு நீயே தூண்டுகின்றாய். அவர்கள் செய்யும் பிராயச்சித்தங்கள் எம்பெருமானுக்கு உண்டான தாபஜ்வரத்தைப்போக்கும் மருந்துகளாய் நின்று அவனது கோபத்தையும் தணித்துவிடுகின்றன. ஸ்ரீநிவாஸனும் மனம் குளிர்ந்து மறுபடியும் உனக்கு வசப்பட்டு விடுகின்றான். இப்படிப் பாபிகளான சேதநர்களையும் நல்வழிப் படுத்தி உஜ்ஜீவிக்கச் செய்கின்றாய். (27)
Compassion that Calms the
Perumal’s Anger
O Goddess
of Compassion! The Vedas and Smritis are the commands of Lord Srinivasa, and
people are expected to live according to them. But in this world, due to lack
of understanding, people often act against these teachings. When this happens,
the Lord’s anger toward them keeps increasing and causes Him great distress,
like a burning fever. Because of their sins, He may decide to punish them. Can
you bear that? No. You gently guide those people to perform acts of repentance
(prayaschittam) according to their ability. These acts of repentance become
like medicine that cools the Lord’s fever and calms His anger. Then the Lord’s
mind becomes peaceful again, and He comes back under your gentle influence. In
this way, you correct even sinful people, guide them to the right path, and
uplift them. (27)