Friday, April 17, 2026

Daya Shatakam - 06- ஸ்ரீதேவியை வழிபடுதல் - Salutations to the SriDevi

श्री:

जय गरुड सुपर्ण 
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

05. श्री श्रीदयाशतकम्  Daya Shatakam ஸ்ரீ தயா சதகம்

06- ஸ்ரீதேவியை வழிபடுதல் - Salutations to the SriDevi 

समस्त जननीं वन्दे चैतन्य स्तन्य दायिनीम् । 
श्रेयसीं श्रीनिवासस्य करुणामिव रूपिणीम् ॥ 6 ॥

पदच्छेदः
समस्त जननीं वन्दे चैतन्य स्तन्य दायिनीम् । 
श्रेयसीं श्रीनिवासस्य करुणाम् इव रूपिणीम् ॥ 6 ॥

चैतन्य — ஞானமாகிய
स्तन्य — முலைப்பாலை
स्तन्य  — கொடுப்பவளாய்
श्रेयसीं  — சிறந்தவளாய்
श्रीनिवासस्य — ஸ்ரீநிவாஸனுடைய
रूपिणीम् — உருவுகொண்ட
रूपिणीम्  — கருணை போன்றவளாய்
समस्त जननीं — அனைவருக்கும் தாயாயுள்ள பெரிய பிராட்டியை (மஹாலக்ஷ்மி/ஸ்ரீதேவி)
वन्दे — வணங்குகின்றேன்.

ஸ்ரீதேவியை (பெரிய பிராட்டி/ மஹாலக்ஷ்ம)  வழிபடுதல்

உலகில் தாய் தன் குழந்தைக்குத் தன் முலைப்பால் கொடுத்து வளர்ப்பாள். பெரிய பிராட்டியோ தத்துவங்களைப் பற்றிய ஞானமாகிய திருமுலைப்பாலைக் கொடுத்துத் தன் குழந்தைகளான சேதநர்களை நல்வழி பெறச் செய்கின்றாள். அதனால் உலகுக்கே தாயாய்த் திகழ்கின்றாள். இவளது தன்மையைச் சிந்திக்கும் போது திருவேங்கடமுடையானது கருணையென்னும் குணமே இப்பிராட்டியின் சிறந்த வடிவு கொண்டதோ என்று கருத இடமாகின்றது. இத்தகைய பிராட்டியை வணங்குகின்றேன். (6) 

Salutations to the SriDevi (Periya Piratti / Mahalakshmi) - the Universal Mother of Wisdom

In this world, a mother nourishes her child by feeding it with her milk. In the same way, Periya Piratti gives the milk of true knowledge—the understanding of tattvas—and guides all souls, who are like her children, toward the right path. Because of this, she shines as the mother of the entire world. When we reflect on her nature, it appears as though the Lord’s quality of compassion itself has taken this beautiful form as Piratti. I bow to this divine mother. (6)

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸