श्री:
श्रीमते निगमान्त महादेशिकाय नम:
05. श्री श्रीदयाशतकम् Daya Shatakam ஸ்ரீ தயா சதகம்
07- பூமிதேவியை வழிபடுதல் - Salutations to the BhumiDevi
பூமிதேவியை வழிபடுதல்
பெரிய பிராட்டியை அடுத்துப் பூமிதேவியும் எம்பெருமானுக்கு மஹிஷியாயுள்ளாள். இவள்தான் உலக முழுவதையும் தாங்குகின்றாள். இவள் பொறுமையே வடிவுகொண்டவளாதலின் பொறுமையைக் கூறும் 'க்ஷமா' என்ற சொல்லாலே அழைக்கப்படுகின்றாள். சேதநர்கள் அநேக பாபங்களைச் செய்கின்றனர். ஆதலின் எம்பெருமானது கருணையின் பெருக்கு அவர்கள்பால் தடைபட்டுவிடுகின்றது. அப்பொழுது பூமிப்பிராட்டி அவர்கள் குற்றங்களைப் பொறுக்கச் செய்து ஸ்ரீநிவாஸனுடைய கருணை தடையின்றி அவர்கள்மீது பெருகும்படி செய்கின்றாள். இந்தப் பூமிப் பிராட்டியை வணங்குகின்றேன். (7)
Salutations to the
BhumiDevi - The Embodiment of Patience
After Periya Piratti, Bhoomi Devi stands as another
divine consort of the Lord. She bears the entire world and supports all beings.
Since she is the very embodiment of patience, she is known by the name
“Kshama.” People commit many sins, and because of this, the flow of the Lord’s
compassion towards them may get obstructed. At such times, Bhoomi Piratti
patiently forgives their faults and ensures that the compassion of Lord
Srinivasa flows towards them without any hindrance. I bow to this Bhoomi
Piratti. (7)
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸