Sunday, April 19, 2026

Daya Shatakam - 08 - நீளா தேவியை வழிபடுதல் - Salutations to the Neelaa Devi

 श्री:

जय गरुड सुपर्ण 
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

05. श्री श्रीदयाशतकम्  Daya Shatakam ஸ்ரீ தயா சதகம்

08- நீளா தேவியை வழிபடுதல் - Salutations to the Neelaa Devi

निशामयतु मां नीळा यद्भोग पटलैर्ध्रुवम् । 
भावितं श्रीनिवासस्य भक्त दोषेष्वदर्शनम् ॥ 8 ॥

पदच्छेदः
निशामयतु  मांनीळा यत् भोग पटलै: ध्रुवम् । 
भावितं श्रीनिवासस्य भक्त दोषेशु अदर्शनम् ॥ 8 ॥

यत् भोग पटलै: — எவளுடைய  போக மயக்கங்களாகிய, கண்பார்வையை மறைக்கவல்ல  தோஷங்களால்   
भक्त दोषेशु — அடியார்களின் குற்றங்களில்
श्रीनिवासस्य — ஸ்ரீநிவாஸனுக்கு
अदर्शनम् — பார்வையில்லாமை
ध्रुवम् — உறுதியாக 
भावितं — உண்டாக்கப்படுகின்றதோ (அபிநயிக்கப்படுகின்றதோ) 
नीळा — அந்த நீளைப் பிராட்டி (நப்பின்னைப்பிராட்டி)
 मां निशामयतु  — அடியேனைக்  கடாக்ஷிக்கவேண்டும்.

நீளா தேவியை வழிபடுதல்

கீழ்க் கூறிய இரு பிராட்டிமாரிலும் நப்பின்னைப் பிராட்டிக்கு எம்பெருமானை மயக்கும் வல்லமை மிக்கிருக்கும். திருவேங்கடமுடையானிடம் நப்பின்னைப்பிராட்டி பலவகையான சிங்கார லீலைகளைப் புரிகின்றாள். இச் செயல்கள் எதற்காக? அடியார்களைக் காப்பதற்கே. இவளுடைய லீலைகளில் ஸ்ரீநிவாஸன் மயங்கிவிடுகின்றான். கண்ணில் குற்றமிருந்தால் வஸ்துக்களைப் பார்க்கவியலாது. நப்பின்னையின் லீலைகள் எம்பெருமான் கண்ணுக்கு வந்த குற்றங்கள் போன்றனவாம். இவற்றால் எம்பெருமான் பார்க்கும் சக்தியை இழந்தவன் போல் பாவனை செய்கின்றான். அதாவது நப்பின்னைப் பிராட்டியின் லீலைகளில் மயங்கிக் கிடக்கும் திருவேங்கடமுடையானுக்கு அடியார்களிடம் உள்ள குற்றங்கள் படுவதேயில்லையாம். ஆதலின் எத்தகைய பாபியாயினும் எம்பெருமான் அவனைக் காத்துவிடுகின்றான். இவ்வாறு அருள் புரிகின்ற நப்பின்னைப் பிராட்டி அடியேனைக் கடாக்ஷித்தருளவேண்டும். (8) 

Salutations to Neelaa Devi – One Who Enchants the Lord to Protect Devotees

Among the two Pirattis mentioned earlier, Neelai alias Nappinnai has a special power to enchant the Lord. She performs many charming and playful leelas with Lord Srinivasa of Tiruvengadam. Why does she do this? Only to protect the devotees. Through her divine plays, the Lord becomes completely absorbed in her. Just as a defect in the eye prevents one from seeing objects clearly, Nappinnai’s leelas act like a “loving distraction” to the Lord’s vision. Because of this, He behaves as though He cannot see the faults of the devotees. In other words, as the Lord remains enchanted by Nappinnai Piratti’s leelas, He does not notice the faults in His devotees. Therefore, no matter how sinful a person may be, the Lord protects him. May this compassionate Nappinnai Piratti bless me with her gracious glance. (8)

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸