Monday, April 20, 2026

Daya Shatakam - 09 - திருவேங்கடமுடையான் என்னும் கருணைக் கடல் - Srinivasa – The Ocean of Compassion

  श्री:

जय गरुड सुपर्ण 
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

05. श्री श्रीदयाशतकम्  Daya Shatakam ஸ்ரீ தயா சதகம்

09 - திருவேங்கடமுடையான்  என்னும்  கருணைக் கடல் - Srinivasa – The Ocean of Compassion

कमप्यनवधिं वन्दे करुणा वरुणालयम् । 
वृषशैल तटस्थानां स्वयं व्यक्तिमुपागतम् ॥ 9 ॥

पदच्छेदः
कमपि अनवधिं वन्दे करुणा वरुणालयम् । 
वृष शैल तटस्थानां स्वयं व्यक्तिम् उपागतम् ॥ 9 ॥

अनवधिं — எல்லையற்றதாய் 
वृष शैल — திருவேங்கட மலையின்
தடஸ்தானாம் — (அருகே)  தாழ்வறைகளில் இருப்பவர்க்கு 
 स्वयं व्यक्तिम् — தானாகத் தோற்றத்தை
उपागतम् — அடைந்ததாயுள்ள
कमपि — ஒரு 
करुणा वरुणालयम् — கருணைக் கடலை
वन्दे — வணங்குகின்றேன்.

திருவேங்கடமுடையான்  என்னும்  கருணைக் கடலை

திருவேங்கடமலையின் அருகே வாழ்பவர்களுக்கு எந்நாளும் அநுபவிக்கலாம்படி ஒரு கடல் தானாக வந்து தோன்றியுள்ளது. இக்கடலுக்கு நீர் கருணையேயாகும். இதுதான் திருவேங்கடமுடையான்  என்னும் அற்புதமான கருணைக்கடல். இதை இடம் - காலம் - வஸ்து இவற்றைக்கொண்டு அளவிட்டுப்பார்க்க முடியாது. இக்கடலை வணங்குகின்றேன். (9)

Srinivasa – The Ocean of Compassion

Near Tiruvengadam, there has appeared, on its own, an ocean that can be experienced at all times by those who live nearby. The water of this ocean is none other than compassion. This is the wondrous ocean of compassion called Lord Srinivasa. It cannot be measured by place, time, or object. I bow to this great ocean of compassion. (9)

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸