श्री:
श्रीमते निगमान्त महादेशिकाय नम:
05. श्री श्रीदयाशतकम् Daya Shatakam ஸ்ரீ தயா சதகம்
10 - ஸ்ரீநிவாஸனின் கருணை – மறைந்த புதையல் - Srinivasan’s Compassion - a Hidden Treasure
ஸ்ரீநிவாஸனின்
கருணை – மறைந்த புதையல்
உலகில் ஏழைகளுக்கு ஏதாவது புதையல்
கிடைத்தால் அதனல் அவர்கள் பல நன்மைகளைப் பெறுவர். பூமியின் கீழ் இருக்கும் புதையலை
மையிட்டுப் பார்த்தே தெரிந்து கொள்ளவேண்டும். திருவேங்கடமலைக்கு அஞ்சனமலை என்றும்
பெயருண்டு. இம்மலைக்குத் தலைவனான ஸ்ரீநிவாஸனது கருணை ஒரு புதையல் போன்றதாகும். இக்
கருணையால் நற்கதி பெற விரும்புபவர் கடினமான பக்தியோகம் முதலிய வேறு உபாயங்களைச்
செய்ய முடியாதவர்களாய் ப்ரபத்தியையே உபாயமாகக் கொண்டுள்ளனர். சேதநர்கள் இந்தக்
கருணையைக் கொண்டு அறம் - பொருள் - இன்பம் - வீடு என்னும் நால் வகைப் பயன்களையும்
அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு பெறுவர். இந்தக் கருணை எவ்வகைக் குற்றமுமற்றது; சாதி வேற்றுமை - உயர்வு தாழ்வு முதலியவற்றைக் கருதாது எல்லோரிடமும் பரவிக்
காக்கின்றது. இத்தகைய ஸ்ரீநிவாஸனது கருணையைப் புகழ்கின்றேன். (10)
[இங்கு அஞ்ஜன மலையப்பனது தயைக்கு அஞ்ஜனமில்லையென்ற சுவை காண்க.]
Srinivasan’s Compassion - a Hidden Treasure
In this
world, when poor people discover a hidden treasure, they gain many benefits
from it. Such buried treasure beneath the earth can be known only by applying
special means like collyrium to find it. Tiruvengadam is also called
Anjanamalai. The compassion of Lord Srinivasa, who is the Lord of this hill, is
like such a hidden treasure. Those who wish to attain the highest good through
this compassion, but are unable to practice difficult paths like Bhakti Yoga,
take up Prapatti as their means. By this compassion, all beings can attain the
four goals of life—dharma, artha, kama, and moksha—according to their wishes.
This compassion is free from all defects; it does not consider differences like
caste, status, or superiority and inferiority, but spreads equally to protect
everyone. I praise this boundless compassion of Lord Srinivasa. (10)
(Here, enjoy the subtle idea
that the compassion of Anjanamalaiyappan needs no ‘anjanam’ (special means like
collyrium) to be seen.)