Sunday, May 3, 2026

109 - Daya Shatakam - 22 - தெய்வீக திருமேனியை வெளிப்படுத்தும் கருணை கடல் - Compassion as the Ocean that Reveals the Divine Form

      श्री:

जय गरुड सुपर्ण 
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

22 - தெய்வீக திருமேனியை வெளிப்படுத்தும் கருணை கடல் - Compassion as the Ocean that Reveals the Divine Form

कलशोदधि संपदो भवत्याः 
करुणे सन्मति मन्थ संस्कृतायाः । 
अमृतांशमवैमि दिव्य देहं 
मृत सञ्जीवनमञ्जनाचलेन्दोः ॥ 22 ॥

पदच्छेदः
कलश उदधि संपद: भवत्याः 
करुणे सन्मति मन्थ संस्कृतायाः । 
अमृत अम्शम् अवैमि दिव्य देहं 
मृत सञ्जीवनम्  अञ्जनाचल इन्दोः ॥ 22 ॥

करुणे — கருணையே!
मृत सञ्जीवनम् — இறந்தவர்களுக்குப் பிழைப்பூட்டுமதான
अञ्जनाचल इन्दोः — திருமலைக்குச் சந்திரனான ஸ்ரீநிவாஸனுடைய
दिव्य देहं  — தெய்வீகத் திருமேனியை
सन्मति  — நல்ல எண்ணமாகிய
मन्थ — மத்தால்
संस्कृतायाः  — கடையப்பட்டவளாய்
कलश उदधि  — திருப்பாற்கடலின் 
संपद: — பெருமையையுடையவளான
भवत्याः  — உன்னுடைய
अमृत अम्शम् - அமுதப்பகுதியாக
अवैमि — அறிகின்றேன்.

தெய்வீக திருமேனியை வெளிப்படுத்தும் கருணை கடல்

தயாதேவியே! முன்பு திருப்பாற்கடல் மந்தரமலையை மத்தாக்கக்கொண்டு கடையப்பட்டபொழுது சந்திரன் முதலியவர்கள் கிடைத்தனர். பின்பு இறந்தவரைப் பிழைப்பூட்டும் அமுதம் வெளிப்பட்டது. இனியவளாகவும் கலக்கமுடியாதவளாகவும் இருப்பதால் நீ திருப்பாற்கடலாகின்றாய். நல்லோர்களது நல்ல அறிவாகிய மத்தினால் பாற்கடலாகிய உன்னைக் கடைந்தபொழுது உன்னிடமிருந்து தோன்றிய மிக ஸாரமான அமுதமே ஸ்ரீநிவாஸனுடைய தெய்வீகத் திருமேனியாய்த் திகழ்கின்றது. எல்லையற்ற கருணையாகிய உன்னாலேதான் சுத்த ஸத்துவ மயமான திருமேனியைக் கொண்டு இத்திருமலையில் அர்ச்சை வடிவாய் அவன் எழுந்தருளியுள்ளான். இறந்தவர்களுக்கு உயிரூட்டும் அமுதம்போல் இந்தத் திருமேனியும், ஸேவித்துச் சரணமடைந்தவர்க்கு யம பயத்தைப் போக்கி மோக்ஷம் வரையிலுள்ள எல்லாப் பலன்களையும் அளித்து வாழ்விக்கின்றது. இப்படி எம்பெருமான் திருமலையில் அர்ச்சை வடிவு கொண்டதற்கும் நீதானே காரணமாகின்றாய். (22) 

Compassion as the Ocean that Reveals the Divine Form

O Goddess of Compassion! Earlier, when the Milk Ocean was churned using Mount Mandara as the churning rod, many things like the moon emerged, and finally the nectar that could revive the dead came out. Because you are sweet and cannot be disturbed or agitated, you are like that Milk Ocean. When noble Jeevathmas, using their pure knowledge as the churning rod, churn you—the ocean of compassion—the most precious nectar that arises from you is the divine form of Lord Srinivasa. It is because of your boundless compassion that He has taken a pure, divine form and stands in Tirumala in archā - worshipful vigraha form. Just like nectar that gives life to the dead, this divine form gives life to those who worship and surrender to Him. It removes the fear of Yama (death) and grants all blessings, including moksha-liberation. Thus, you are the very cause for the Lord manifesting in Tirumala in this accessible divine form. (22) 

Notes by Sri :

இந்த ச்லோகத்தில் கூறப்பட்டுள்ள உவமைகள் : 

உவமை (எடுத்துக்காட்டு)

ஆத்மார்த்தம் (உள்ளார்ந்த பொருள்)

திருப்பாற்கடல்

தயாதேவி

மந்தரமலையால் கடைதல்

ஞானத்தால் கருணையை ஆராய்தல்

கடைந்ததில் கிடைத்த அமுதம்

ஸ்ரீநிவாஸனின் திவ்ய திருமேனி

அமுதம் உயிரூட்டுதல்

அர்ச்சாவதாரம் மோக்ஷம் அளித்தல், யமபயம் நீக்கம்

கடலில் தோன்றிய அரிய பொருட்கள்

கருணையால் கிடைக்கும் திவ்ய பலன்கள்

 Similes explained in this sloka:

Simile (Example)

Spiritual Meaning

Milk Ocean (Kshira Sagara)

Compassion (Daya Devi)

Churning with Mount Mandara

Churning through noble knowledge (jnana)

Nectar (Amrita) from churning

Divine Archa form of Lord Srinivasa

Nectar giving life to the dead

Perumal's archā form granting moksha and removing fear

Precious items emerging from ocean

Divine blessings arising from compassion


🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸