Monday, May 4, 2026

110 - Daya Shatakam - 23 - கருணையே படைப்புத் தொழிலுக்கு காரணம் – Daya is the Cause for Creation

श्री:

जय गरुड सुपर्ण 
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

23 - கருணையே படைப்புத் தொழிலுக்கு காரணம் – Daya is the Cause for Creation

जलधेरिव शीतता दये त्वं 
वृषशैलाधिपतेः स्वभाव भूता । 
प्रलयारभटी नटीं  तदीक्षां 
प्रसभं ग्राहयसि प्रसत्ति लास्यम् ॥ 23 ॥

पदच्छेदः
जलधे: इव शीतता दये त्वं 
वृषशैल अधिपतेः स्वभाव भूता । 
प्रलय आरभटी नटीं   तत् ईक्षां 
प्रसभं ग्राहयसि प्रसत्ति लास्यम् ॥ 23 ॥

दये — தாயதேவியே!
जलधे: — கடலுக்கு
शीतता इव — குளிர்ச்சி போல
वृषशैल अधिपतेः — திருவேங்கடநாதனுக்கு
स्वभाव भूता — இயற்கைத் தன்மையாயுள்ள
त्वं — நீ
प्रलय — பிரளயமாகிய
आरभटी — கொடிய ஆட்டத்தில்
नटीं   — ஆடுபவளான
तत् ईक्षां  — அவனுடைய ஸங்கல்பத்தை
प्रसभं — வலிமையாக (த்திருப்பி)
प्रसत्ति — அநுக்ரஹமாகிய
लास्यम् — குளிர்ந்த நடத்தை
ग्राहयसि — கைக்கொள்ளச் செய்கின்றாய்.

படைப்புத் தொழில் காரணம்

தயதேவியே! நீருக்குக் குளிர்ச்சியே இயற்கையானது. தீயில் வைப்பதாலோ வெயிலாலோ சூடு ஏறினாலும் மறுபடி குளிர்ந்துவிடும். பெரிய நீர்நிலையான கடலின் தண்மையைப் பற்றிக் கூறவும் வேண்டுமோ? அதுபோல் திருவேங்கடநாதனுக்கு நீ இயற்கையான தன்மையாயுள்ளாய். கொடிய தன்மை நடுநடுவே வந்து சற்றுத் தலைக்காட்டினாலும் மறுபடி இயற்கையான நீயே தலையெடுத்துவிடுவாய். பிரளய காலத்தில் எம்பெருமானுடைய ஸங்கல்பமே ஒரு நாட்டியக்காரியாகிறது; ஜந்துக்களுக்குப் பிரளய காலத்தில் சரீரம் இந்த்ரியம் அனைத்தையும் இல்லையாக்கி அசேதனம்போற் செய்து தலைவிரி கோலமாய்க் கோர தாண்டவமாடுகின்றாள் அவனுடைய ஸங்கல்பமென்னும் நாட்டியக்காரி. உன் குளிர்ந்த தன்மைக்கு இது பொறுக்குமா? நீ அந்த ஸங்கல்பமென்னும் நாட்டியக்காரியை வலியப் பிடித்திழுத்து அந்தக் கொடிய ஆட்டத்தினின்று திருப்புகின்றாய்; பிராணிகளுக்குச் சரீர - இந்த்ரியங்களைக் கொடுத்துப் படைத்தல் என்னும் சாந்தமான அநுக்ரஹ நடனத்தைத் கைக்கொள்ளுமாறு செய்கின்றாய். 

எம்பெருமான் பிரளய காலத்தில் தன் ஸங்கல்பத்தால் பிராணிகள் அடைந்துள்ள நிலையைப் பார்த்துக் கருணை கொண்டு படைப்புத் தொழிலில் ஈடுபடுகின்றானென்றும் இதற்குக் காரணம் அவனது கருணையே என்றும் உட்கருத்து. (23) 

Cause for Creation

O Goddess of Compassion! Coolness is the natural quality of water. Even if it becomes hot due to fire or the sun, it eventually returns to its natural cool state. How much more so for a vast body like the ocean! In the same way, you are the natural quality of Lord Srinivasa. Even if a harsh tendency appears for a moment, your true nature of compassion soon rises again.

During the time of Pralaya, the Lord’s sankalpa (will) acts like a fierce dancer. It removes the bodies and senses of all beings, leaving them like inert matter - Achit, and performs a terrifying cosmic dance. Can your cool and gentle nature tolerate this? You restrain that fierce dancer and turn it away from such destruction. Instead, you guide it toward a peaceful and graceful dance—the act of creation—by restoring bodies and senses to beings.

Thus, seeing the state of beings during Pralaya, the Paramathma is moved by compassion and begins creation again. The inner meaning is that it is His compassion alone that becomes the cause for creation.

Notes by Sri :

·        Fierce Dancer – Emperuman’s Sankalpam during Pralaya

·     Graceful Dancer – Emperuman’s Sankalpam during Shristi due to impact of Daya.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸