Tuesday, May 5, 2026

111 - Daya Shatakam - 24 - அடியார்களை காக்கும் கோபம் - Anger Protect Devotees

श्री:

जय गरुड सुपर्ण 
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

05. श्री श्रीदयाशतकम्  Daya Shatakam ஸ்ரீ தயா சதகம்

  24 - அடியார்களை காக்கும் கோபம்  - Anger Protect Devotees

प्रणत प्रतिकूल मूलघाती 
प्रतिघः कोऽपि वृषाचलेश्वरस्य । 
कळमे यवसापचाय नीत्या 
करुणे किंकरतां तवोपयाति ॥ 24 ॥

पदच्छेदः
प्रणत प्रतिकूल मूलघाती 
प्रतिघः कोऽपि वृषाचल ईश्वरस्य । 
कळमे यवस अपचाय नीत्या 
करुणे किंकरतां तव उपयाति ॥ 24 ॥

करुणे — தயாதேவியே!
कोऽपि — விலக்ஷணமாயுள்ள
वृषाचल ईश्वरस्य  — திருவேங்கடநாதனுடைய
प्रतिघः — கோபம்
प्रणत — வணங்கியவர்களின்
प्रतिकूल — எதிரிகளை
मूलघाती — வேரறுக்கின்றதாய்
कळमे — பயிரில்
यवस — களைகளை
अपचाय नीत्या — பறிக்கும் முறையில்
तव किंकरतां — உனக்கு அடிமை செய்யும் நிலையை
उपयाति — அடைகின்றது.

அடியார்களை காக்கும் கோபம்

தயாதேவியே! திருவேங்கடமுடையானுக்கும் சீற்றம் வருவதுண்டு. அது தன்னைத் தொழும் அடியவர்களுக்குப் பகைவராயுள்ளவர்பால்தான் உண்டாகும். அந்தக் கோபம் பாகவதர்களிடம் பகையுடையாரை வேரறுத்துவிடும். கருணையாகிய உன்னைக் கொண்டுதானே அவன் அடியாள்களை ரக்ஷிக்க வேண்டும். அவர்களுக்கு எதிரிகளால் நலிவு ஏற்படலாமா? அதற்காக எதிரிகளை அழித்தால்தானே அடியார்களைக் காக்க முடியும். ஆகவே நீ உன் செயலைச் செய்வதற்கு அந்த விலக்ஷணமான கோபம் அநுகூலமாயிருந்து உனக்கு அடிமை செய்கின்றது. உலகத்திலும் பயிர்களுடைய வளர்ச்சிக்குத் தடையாயிருக்கும் களைகளைப் பறித்தெறிவது பயிர்களைக் காப்பதற்கத்தானே உடலாகின்றது! அதுபோலத்தான் அடியார்களின் நலத்துக்காக அவர்களின் பகைவரை அழிப்பதும். இப்படி ஸ்ரீநிவாஸனுடைய கோபமென்ற குணமும் உனக்கு அடங்கி நிற்கின்றது. (24) 

Anger Protect Devotees

O Goddess of Compassion! At times, even Lord Srinivasa shows anger. But that anger arises only towards those who are enemies of His devotees. That anger destroys those who oppose His devotees at the root. Since He must protect His devotees through you, Compassion, how can He allow them to suffer at the hands of enemies? To protect them, those enemies must be removed. So, even that special kind of anger becomes helpful to your purpose and serves you. In the world too, when weeds that hinder the growth of crops are removed, it is done only to protect and help the crops grow well. In the same way, destroying the enemies of devotees is for their welfare. Thus, even the Lord’s quality of anger stands under your control and works in support of compassion. (24)

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸