श्री:
श्रीमते निगमान्त महादेशिकाय नम:
திவ்ய
குணங்களைப் பொழியும் கருணை மேகம்
உலகில் மேகங்கள் பெருங்கலினின்று நீரை முகந்து எடுத்து நிரப்பிக்கொண்டு, மலையில் தங்கிக் குளிர்ந்த மாரியைப் பொழிந்து உரிய காலத்தில் பெருவெள்ளத்தால் உலகைக் குளிர்வித்து மகிழ்விக்கும்; மேடு-பள்ளம் என்ற பாகுபாடின்றிச் சமமாய் நீரைப் பொழியும். தயாதேவியே! நீ அத்தகைய மேகங்களின் வரிசை போன்றவள். உயர்வு-தாழ்வு முதலிய வேற்றுமைபாராது அனைவரிடமும் அன்பு கொள்கின்றாய். திருவேங்கட நாதனாகிய பெருங்கடலினின்று உயர்ந்த குணங்களை எடுத்துத்தன் வசமாக்கிக் கொள்கின்றாய்; திருவேங்கடமலையில் தங்குகின்றாய்; உன் செயலால் உலகு முழுதும் க்ஷேமத்தைப் பெற வேண்டுமென்று கருதுகின்றாய். அவ்வப்போது சேதநர்கள் மீது எம்பெருமானுடைய ஸௌசீல்யம் - ஸௌலப்யம் - வாத்ஸல்யம் முதலிய குணங்களாகிய நீர்வெள்ளத்தைப் பொழிகின்றாய். ஸௌசீல்யம்-மிகப் பெரியனாயிருந்தும் தாழ்ந்தவர்களுடன் கலந்து பரிமாறுந்தன்மை. ஸௌலப்யம்-அடியார்கள் தன்னை எளிதில் நெருங்கும்படி எளியனாதன்மை. வாத்ஸல்யம்-அடியார்களிடம் உள்ள குற்றங்களைப் புறக்கணிக்கச் செய்யும் அன்பு. அவை முதலிய எம்பெருமானுடைய குணங்கள் சேதநர்களுக்குப் பயன்படுமாறு தயையாகிய நீயே செய்கின்றாய். நீ இல்லாவிடில் அக்குணங்களே நிலைபெறமாட்டாவல்லவோ?
திருவேங்கடத்தில் உள்ள ஏழு மலைகள் சிங்கமலையும் ஒன்று.
[பின்வரும் கருத்தைக்கொண்ட முன்னோர்கள் மொழிக்கும் இந்தச் சுலோகம் சேருமென்பர் - நம்மாழ்வாராகிய மேகம் எம்பெருமானாகிய பெருங் கடலினின்று அவன் கருணையென்னும் நீரை முகந்துகொண்டது; அந்நீரை நாதமுனிகளென்னும் மலையில் பெய்தது. அந்நீர் உய்யக்கொண்டார் - மணக்கால் நம்பி என்னும் இரண்டு அருவிகளாய்ப் பெருகியது; பின் அவ்வருவிகள் ஆளவந்தாரென்னும் ஆற்றோடு கலந்தன. அந்த ஆறு ஸ்ரீ பாஷ்யகாரரென்னும் தாமரைப் பொய்கையில் போய் வீழ்ந்தது. அப்பொய்கைநீர் தான் பிராணிகளாகிற பயிர்களில் பாய்ந்து அவற்றைச் செழிக்கச்செய்து உலகத்தை நலம் பெறச் செய்தது.] (45)
Compassion as the Rain
Cloud of Divine Qualities
In this world, clouds draw water from the great
ocean, gather it within themselves, rest upon mountains, and then pour cool
rain at the proper time. By their abundant showers, they refresh and gladden
the whole world. They do not distinguish between high ground and low ground but
rain equally everywhere.
O Goddess of Compassion! You
are like such a row of rain clouds. Without considering differences such as
high and low, you show love equally to all beings. From the great ocean that is
Lord Tiruvengadanatha, you gather His exalted qualities and bring them under
your loving control. You remain established upon Tiruvengadam hill, desiring
the welfare of the entire world through your actions. At the proper time, you
shower upon beings the flood of the Lord’s divine qualities such as Saulabhyam,
Souseelyam, and Vaatsalyam.
·
Souseelyam — Though infinitely great, the
Lord freely mixes with even the lowliest beings.
·
Saulabhyam — He makes Himself easily
accessible to His devotees.
·
Vaatsalyam — His loving nature overlooks
the faults of His devotees.
It is you, Compassion, who
make these divine qualities truly beneficial to beings. Without you, even these
qualities would not fully shine forth for the upliftment of the world.
Among the seven hills of
Tiruvengadam is Simha Malai.
[The elders also connect this verse with another beautiful inner meaning: Nammalvar is compared to a cloud that drew the waters of the Lord’s compassion from the great ocean of the Lord Himself. That rain fell upon the mountain called Nathamuni. From there it flowed as two waterfalls named Uyyakkondar and Manakkal Nambi, later joining the river called Alavandar. That river finally entered the lotus pond known as Sri Bhashyakara (Ramanuja). From that pond, the waters spread into the fields of living beings, nourishing them and bringing welfare to the whole world.] (45)
लक्ष्मी नाथाख्य सिन्धौ शठरिपु जलध: प्राप्य कारुण्य नीरम्
नाथाध्रौ अभ्यषिञ्चत् तदनु रगुवराम् भोज चक्षु: जलाभ्याम्
गत्वा ताम् यामुऩाक्यम् सरितमत् यतीन्द्राख्य पद्मा-करेन्द्रं
संपूर्य प्राणि सस्ये प्रवहति बहुधा देशिकेन्द्र प्रमेकै:
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸