Monday, May 25, 2026

131 - Daya Shatakam - 44 - எம்பெருமானின் அனந்த ஆனந்த அனுபவத்திற்குக் கொண்டு செல்லும் கருணை - Compassion that Leads to the Infinite Experience of the Lord

 श्री:

जय गरुड सुपर्ण 
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

44 - எம்பெருமானின் அனந்த ஆனந்த அனுபவத்திற்குக் கொண்டு செல்லும் கருணைCompassion that Leads to the Infinite Experience of the Lord

यस्मिन् दृष्टे तदितर सुखै: गम्यते गोष्पदत्वं 
सत्यं ज्ञानं त्रिभिरवधिभि: मुक्त मानन्द सिन्धुम् । 
त्वत्स्वीकारात् तमिह कृतिनः सूरि बृन्दानुभाव्यम् 
नित्यापूर्वं निधिमिव दये निर्विशन्त्यञ्जनाद्रौ ॥ 44 ॥

पदच्छेदः
यस्मिन् दृष्टे तत् इतर सुखै: गम्यते गोष्पदत्वं 
सत्यं ज्ञानं त्रिभि: अवधिभि:  मुक्तम् आनन्द सिन्धुम् । 
त्वत्स्वीकारात् तम् इह कृतिनः सूरि बृन्द अनुभाव्यम् 
नित्य अपूर्वं निधिमिव दये निर्विशन्ति अञ्जन अद्रौ ॥ 44 ॥

दये - தயாதேவியே!
यस्मिन् - எந்தப் பரம புருஷன்
दृष्टे - காணப்பட்டால்
तत् इतर सुखै: - அவனையன்றி மற்ற இன்பங்களால்
गोष्पदत्वं – பசுவின் குளப்படியின் தன்மை
गम्यते - அடையப்படுகின்றதோ
सत्यं - மாறுபாடு அற்றவனாய்
ज्ञानं — ஜ்ஞானவடிவாய்
त्रिभि: — மூன்று
अवधिभि: — எல்லைகளால்
मुक्तम् — விடுபட்டவாய்
आनन्द सिन्धुम् — ஆநந்தக்கடலாய்
सूरि बृन्द— நித்யஸூரிகளின் கூட்டத்தால்
अनुभाव्यम् — அநுபவிக்கப்படுவாய்
नित्य अपूर्वं  — எப்பொழுதும் புதியனாய்த் தோற்றுவனாயுள்ள
तम् — அந்த ஸ்ரீநிவாஸனை
त्वत्स्वीकारात्  — நீ ஏற்றுக்கொண்டதால்
कृतिनः  — பாக்கியம் பெற்றவர்கள்
इह — இந்த ஸம்ஸாரமண்டலத்தில்
अञ्जन अद्रौ  — திருவேங்கடமலையில்
निधिमिव — நிதியையப்போல்
निर्विशन्ति — அநுபவிக்கின்றனர்.

எம்பெருமானின் அனந்த ஆனந்த அனுபவத்திற்குக் கொண்டு செல்லும் கருணை

தயாதேவியே! ஸ்ரீநிவாஸனுடைய ஸ்வரூபம் எந்நாளும் மாறுபாட்டை அடையாது; அசேதநப் பொருள்களைப்போல் உருவத்தில் மாறுபாடு கிடையாது; ஜீவாத்மாவைப் போல் ஸ்வபாவத்தில் மாறுபாடு கிடையாது. அவன் ஸ்வரூபம் எப்பொழுதும் ஜ்ஞானவடிவாகவே பிரகாசிக்கும். அவனை "இன்ன இடத்தில் இருக்கிறான். இன்ன இடத்தில் இல்லை" என்று இடத்தைக்கொண்டு அளவிடமுடியாது. "இந்த ஸமயத்தில்  இருக்கிறான். இந்த ஸமயத்தில் இல்லை" என்று காலத்தாலும் அளவிடமுடியாது; "இன்ன வஸ்துவின் வடிவமாக உள்ளான், இன்ன வஸ்துவின் வடிவமாக இல்லை" என்று வஸ்துவாலும் அளவிடமுடியாது. எல்லா இடத்திலும் எல்லா காலத்திலும் எல்லா வஸ்துவாகவும் விளங்குகின்றான்; எல்லையற்ற ஆநந்தக் கடலாயுள்ளான்; நித்ய ஸூரிகளும் முக்தர்களும் இடைவிடாது அவனை அநுபவித்துக் கொண்டேயிருக்கின்றனர். எத்தனை காலம் அநுபவித்தாலும் அவ்வப்பொழுது புதியனாய்த் தோன்றி உள்ளத்தைக் கவர்கின்றான். இத்தகைய எம்பெருமானை அநுபவிக்கப்பெற்றால் மற்ற ஸகல ஸுகங்களும் (பிரமனது போகம் உள்பட) மிக ற்பமாய்த் தோன்றும். கடலைக் காண்பவனுக்குப்  பசுவின் குளம்பினடியில் தேங்கியுள்ள நீரைக் காண்பதுபோல் மற்ற ஸுகங்கள் அவ்வளவு அற்பமாய்த் தோன்றும். இவ்வாறு  எம்பெருமானை அநுபிப்பதற்குக் கருணையாகிய நீ மனம் வைக்கவேண்டும். சேதநர்களை நீ ஏற்றுக்கொண்டுவிட்டால் அவர் மிகவும் பாக்கியசாலிகளாவர். இத்தகைய புண்யசாலிகள் திருவேங்கடமலையில் உன் உதவியால் ஸ்ரீநிவாஸனை ஒரு நிதியாகக்கொண்டு அநுபவிக்கப்பெறுகின்றனர். (44) 

Compassion that Leads to the Infinite Experience of the Lord

O Goddess of Compassion! The Swaroopam of Lord Srinivasa never undergoes any change. Unlike insentient objects, His form does not transform. Unlike the Jeevathma, His nature never changes. His true nature always shines as pure Jñānam. He cannot be limited by place and described as “present here and absent elsewhere.” He cannot be limited by time and said to exist only at one moment and not at another. Nor can He be limited by any object and described as belonging only to one form and not another. He exists everywhere, at all times, and in all things. He is an infinite ocean of bliss. Nitya Suris and Mukthas continuously experience Him without interruption.

No matter how long they experience Him, He appears ever fresh and new, constantly attracting their hearts. Once a person gains the experience of such a Lord, all other pleasures—including even the enjoyments of Brahma—appear insignificant. Just as the vast ocean makes the little water collected in a cow’s hoof-print seem worthless, all worldly pleasures become trivial before the bliss of experiencing Him.

O Compassion! You must decide to grant beings this divine experience of the Lord. Once you accept a person, that person becomes truly fortunate. Such blessed Jeevathmas, through your grace, experience Lord Srinivasa in Tiruvengadam as the greatest treasure. (45) 

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸