Tuesday, June 2, 2026

139 - Daya Shatakam - 52 - தயாதேவி & ஸரஸ்வதி - DayaDevi & Saraswathi

     श्री:
जय गरुड सुपर्ण 
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

52 - தயாதேவி & ஸரஸ்வதி - DayaDevi & Saraswathi

अभिमुक भाव संपदभिसंभविनां भविनां
क्वचिदुपलक्षिता क्वचिदभङ्गुर गूढ गतिः ।
विमल रसावहा वृषगिरीश दये भवती
सपदि सरस्वतीव शमयत्यघमप्रतिघम् ॥ 52
 
पदच्छेदः
अभिमुक भाव संपत् अभिसंभविनां भविनां
क्वचित् उपलक्षिता क्वचित् अभङ्गुर गूढ गतिः ।
विमल रस आवहा वृष गिरीश दये भवती
सपदि सरस्वती इव शमयति अघम्  अप्रतिघम् ॥ 52
 
वृष गिरीश दये — திருமலயப்பனுடைய கருணையே!
भवती — நீ
सरस्वती इव — ஸரஸ்வதியென்னும் ஆறுபோல்
विमल रस आवहा — தெளிந்த அன்பெனும் நீரைப் பெருக்குமவளாய்
अभिमुक भाव — எம்பெருமான் தமக்கு அநுகூலனாயிருத்தலென்னும்
संपत् — செல்வத்தை
अभिसंभविनां — முழுதும் பெற்றவர்களான
भविनां — ஸம்ஸாரிகளுக்கு
क्वचित् — சில இடத்தில்
उपलक्षिता — கண்ணுக்குப் புலப்பட்டவளாய்
क्वचित् — சில இடத்தில்
अभङ्गुर गूढ गतिः — தடையற்ற மறைவான நடையுடையளாய்
अप्रतिघम् — நீக்கமுடியாத
अघम्  பாபத்தை
सपदि — உடனே
शमयति — நீக்குகின்றாய்.

வெளிப்படையும் மறைமுகமுமான தயையின் அருள் & ஸரஸ்வதி

ஸரஸ்வதி என்னும் புண்ணிய நதி மிகத் தெளிவான நீருடன் ஓடுகின்றது. அந்த நதிக்கு ஒரு விசேஷம் உண்டு. சில இடங்களில் அதன் நீரோட்டம் மக்கள் கண்ணுக்குப் புலப்படும்; சில இடங்களில் புலப்படாது பூமிக்குள் ஓடிக் கொண்டிருக்கும். வெளிப்படையாய் ஓடும் இடத்தைக் கண்டு அதில் நீராட முற்படுபவனுக்கு அவனுடைய பெரும்பாவமெல்லாம் உடனே கழிந்து புண்ணியம் பெருகும். திருவேங்கடநாதனுடைய தயாதேவியே! நீயும் அந்த ஸரஸ்வதி நதி போன்றவள். எல்லாப் பிராணிகளிடமும் தூய அன்பெனும் நீரைப் பெருக்குகின்றாய். இருப்பினும் சிலருக்குச் சில ஸமயங்களில் வெளிப்படையாக நன்மை புரிகின்றாய். சிலர் விஷயத்தில் மறைமுகமாக உதவி புரிகின்றாய். அதாவது — சிலர் எம்பெருமானுடைய திருவுள்ளம் உவக்குமாறு சாஸ்த்ரத்தைத் தழுவி நடக்கின்றனர். அவர்கள் விஷயத்தில் எம்பெருமான் அநுகூலனாகித் தன் கடாக்ஷத்தைப் பொழிகின்றான். அவர்களுக்கு எம்பெருமானுடைய இந்த மனநிலை பெருஞ் செல்வமன்றோ? இச் செல்வத்தைப் பெற்ற அவர்களுக்கு வெளிப்படையாக ஸகல க்ஷேமங்களையும் அளிக்கின்றாய். சிலர் முந்திய கர்ம வசத்தால் பின்னும் பாபச்செயல்களைச் செய்து எம்பெருமான் திருவுள்ளம் கலங்கச் செய்கின்றனர். அவர்கள் விஷயத்தில் நீ மறைவாக நின்று உதவி புரிகின்றாய். அவர்களுடைய பாபம் நீங்குவதற்குச் சில பிராயச்சித்தங்களைச் செய்வித்தாவது சில தண்டனைகளைக் கொடுத்தாவது விரைவில் அவர்களைத் தூயராக்கிவிடுகின்றாய். அவர்கள் சில துன்பங்களை அநுபவிக்கச் செய்வது வெளிப்பார்வைக்குத் தீங்கு செய்தலாகத் தோன்றலாம். அவர்களையும் தூயராக்கவே நீ தண்டனையளிப்பதால் இது நீ மறைவாகச் செய்யும் உதவியாகவே ஆகும். எப்படியும் ஸம்ஸாரிகளுக்கு எம்பெருமானுக்கு அநுகூலமாக நடக்க வேண்டுமென்ற முழுக்கருத்துடையராயிருப்பதுவும் பெருஞ்செல்வமாகும். அவர்களை நீ தூயராக்கி ப்ரபத்தியில் மூட்டி வேறொன்றாலும் நீங்காத பாபங்களை நீக்கி விரைவில் மோக்ஷம் பெறச் செய்கின்றாய். (52) 

The Visible and Hidden Flow of compassion by DayaDevi & Saraswathi

The sacred river Saraswati flows with pure and crystal-clear water. This river has a unique nature. In some places, its waters are clearly visible to people, while in other places it flows hidden beneath the earth. Whoever bathes in the visible waters immediately becomes freed from great sins and gains punya.

In the same way, O Daya Devi of Tiruvengadanathan, you are like the river Saraswati. You overflow with the pure waters of love toward all beings. Yet your compassion works in two ways — openly for some and secretly for others.

Some people live according to the Shaastras and act in ways that please Emperuman. Toward them, Bhagavan becomes favorable and showers His compassionate glance. Is not such divine favor itself the greatest wealth? To such devotees, you openly grant every kind of blessing and protection.

Others, however, continue committing sins because of the force of past karma and thereby disturb the divine will of Emperuman. In their case, you help in a hidden manner. You make them perform acts of Prayaschittam or undergo certain sufferings so that their sins may quickly be removed and they may become purified. To outward eyes, these sufferings may appear like punishment or harm. But in truth, even these are forms of your compassion, because your purpose is only to purify and uplift them.

Thus, whether openly or secretly, your only intention is to make all Jeevans, become favorable toward Emperuman. You purify them, guide them toward Prapatti, remove sins that cannot otherwise be destroyed, and quickly lead them toward Moksha.

Notes by Sri:

இந்த ச்லோகத்தில் கூறப்பட்டுள்ள உவமைகள் :

உலகியல் உவமை

தத்துவப் பொருள்

ஸரஸ்வதி புண்ணிய நதி

தயாதேவி

தெளிந்த நீர்

எல்லாப் பிராணிகளிடத்தும் உள்ள தூய அன்பு

சில இடங்களில் வெளிப்படையாக ஓடும் நதி

வெளிப்படையாக அருள் புரியும் தயை

சில இடங்களில் பூமிக்குள் மறைந்து ஓடும் நதி

மறைமுகமாக உதவி செய்யும் தயை - தண்டனை, பிராயச்சித்தம் வழியாக

நதியில் நீராடுதல்

தயையின் அருளைப் பெறுதல்

நீராடியவுடன் பாபம் கழிதல்

பாபங்கள் நீங்கி தூய்மை பெறுதல்

புண்ணியம் பெருகுதல்

க்ஷேமம், ப்ரபத்தி, மோக்ஷம் ஆகிய நன்மைகள் கிடைத்தல்

 Similes explained in this sloka:

Simile (Example)

Spiritual Meaning

The Saraswati river

Daya Devi

Clear flowing water

Pure love and compassion

River visible in some places

Openly visible divine grace

River hidden underground in some places

Hidden or indirect divine help

Bathing in the river and becoming purified

Jeevans becoming purified through Daya

Removal of sins by the sacred river

Removal of sins through grace, Prayaschittam, and suffering

Gaining punya from the river

Receiving spiritual upliftment and Moksha

 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸