Wednesday, June 3, 2026

140 - Daya Shatakam - 53 - எல்லாப் பலன்களையும் அருளும் தயாதேவி - Daya Devi, the Giver of Every Fruit

श्री:
जय गरुड सुपर्ण 
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

53 - எல்லாப் பலன்களையும் அருளும் தயாதேவி - Daya Devi, the Giver of Every Fruit
 
अपि करुणे जनस्य तरुणेन्दु विभूषणताम्
अपि कमलासनत्वमपि धाम वृषाद्रि पतेः ।
तरतमता वशेन तनुते ननु ते विततिः
परहित वर्ष्मणा परिपचेळिम केळिमती ॥ 53 ॥
 
पदच्छेदः
अपि करुणे जनस्य तरुण इन्दु विभूषणताम्
अपि कमल आसनत्वम् अपि धाम वृषाद्रि पतेः ।
तरतमता वशेन तनुते ननु ते विततिः
पर हित वर्ष्मणा परिपचेळिम केळिमती ॥ 53
 
करुणे — தயாதேவியே!
पर हित वर्ष्मणा  பிறருக்கு நன்மை செய்தல் என்ற வடிவத்திலே
परिपचेळिम — மிகப் பக்குவமடைந்த
केळिमती — லீலைகளையுடைய
ते विततिः  உனது பரப்பானது
तरतमता वशेन — (புண்ணியங்களின்) வேற்றுமைக்கு ஏற்ப
जनस्य — சேதநனுக்கு
तरुण इन्दु  இளம் பிறையை
विभूषणताम् अपि — அணிந்த சிவனாக ஆதலையும்
कमल आसनत्वम् अपि  தாமரையில் அமர்ந்த பிரமனாக ஆதலையும்
वृषाद्रि पतेः — திருவேங்கடமுடையானது
धाम अपि — ஸ்தாநமான ஸ்ரீவைகுண்டத்தையும்
तनुते ननु — அளிக்கின்றதன்றோ!

எல்லாப் பலன்களையும் அருளும் தயாதேவி

     தயாதேவியே! நீ செல்லாத இடம் இல்லையென்னும்படி எங்கும் விரிந்து நிற்கின்றாய். நீ புரியும் திருவிளையாடல்களெல்லாம் சேதநர்களுக்கு நன்மைகளாகவே ஆகின்றன. நீ சேதநர்கள் செய்த புண்ணியங்களின் ஏற்றக் குறைவுக்கு (தாரதம்யத்துக்கு) ஏற்றவாறு அவர்களுக்குப் பயனளிக்கின்றாய். சேதநர்கள் உன்னிடமிருந்து பெறமுடியாத பலன்களே இல்லையென்னலாம். ஒருவன் தான் சிவனாகவே ஆகவேண்டுமென்று விரும்பி அதற்கேற்ற புண்ணியத்தைச் செய்தால் அவனைச் சிவனக்குகின்றாய். ஒருவன் சிவனுக்கும் மேம்பட்ட பிரமதேவனாகவே ஆகவேண்டுமென விரும்பி அதனிலும் மிக்க புண்ணியத்தைச் செய்தால் அவனைப் பிரமனாகப் பிறப்பிக்கின்றாய். ஒருவன் பரிபூர்ண விவேகத்துடன் இந்த ஸ்தாபநங்களின் நிலையாமையை அறிந்து எந்நாளும் அழியாத மோக்ஷானந்தத்தை விரும்பி அதற்கு உபாயத்தைச் செய்தால் அவனுக்குத் திருவேங்கடமுடையானென்னும் பரமபதநாதனுடைய ஸ்ரீவைகுண்டத்தைக் கொடுத்தருள்கின்றாய். இப்படி சேதநர்கள் உன்னிடம் பெறமுடியாத பலன் ஏதுமில்லை. (53)

Daya Devi, the Giver of Every Fruit

Daya Devi! There is no place where you are not present. You pervade everywhere, and all your divine acts ultimately become sources of good for Jeevathmas. According to the degree of punya earned by each Jeevan, you grant them the appropriate results. Truly, there is no blessing that cannot be obtained through you.

If a person desires to become Siva and performs the required punya for that state, you grant him the position of Siva. If another person desires an even higher position, such as that of Brahma, and performs greater punya, you grant him birth as Brahma.

But if a person, with complete discrimination and wisdom, understands that all such positions are temporary and unstable, and instead desires the eternal bliss of Moksha, then you grant him the supreme abode of Sri Vaikuntha, the realm of Tiruvengadamudaiyan, the Lord of Paramapadam.

Thus, there is no fruit beyond your power to grant. You bestow every attainment according to the desire, understanding, and spiritual effort of each Jeevathma. (53)


🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸