श्री:
श्रीमते निगमान्त महादेशिकाय नम:
திருமலையின் தாழ்வாரத்தில் வாழ பிரார்த்தனை
திருவேங்கடநாதனது கருணையே! இப்பிறவியில்
இந்தச் சரீரம் நன்றாக இருக்கும்பொழுதே திருவேங்கடமலைக்குச் செல்லவேண்டும். வயது
முதிர முதிரக் கை கால் கண் முதலிய இந்த்ரியங்கள் தளர்ந்துவிடும். ப்ராண வாயுவும்
தன் செயலை உரிய முறையில் செய்ய முடியாதுபோம். அந் நிலையில் திருமலையில் ஏறுவது
இயலாது. ஆதலின் சரீரம் நடக்கத் தகுதியுடைய பருவத்திலேயே, இந்த்ரியங்களும் ப்ராண வாயுவும் உரிய நிலையில்
இருக்கும்போதே திருமலைக்கு அடியேன் செல்லவேண்டும். அதன் தாழ்வரைகளில் எப்போதும்
வாழ்ந்து ஸ்ரீநிவாஸனை அநுபவிக்குமாறு நீ செய்தருள வேண்டும். திருமலையில் மிகப்
புகழ்பெற்ற புண்ணியமான நீரருவிகள் விழுந்துகொண்டேயிருக்கும். அவற்றை நோக்கும்போது
கருணையாகிய உனது வெள்ளம்தான் அவ்வாறு பெருகுகின்றதோவென்று தோன்றும். அப்போது
அவற்றையும் அனுபவிக்கலாம். (31)
O
Compassion of Paramathma Tiruvengadanatha! While this body is still healthy in
this birth, I must go to Tiruvengadam hill. As age advances, the hands, legs,
eyes, and other senses become weak. Even the life-breath loses its strength to
function properly. In such a condition, climbing the sacred hill will become
difficult. Therefore, while the body is still fit to walk, and while the senses
and life-breath are strong, please bless me to go to Tirumala.
May I live forever at the
foothills of Tirumala and experience the joy of Srinivasa there. The holy
waterfalls of Tirumala constantly pour down in great beauty and glory. Looking
at them, one feels as though they are the flowing floods of your compassion
itself. May I also enjoy those sacred streams. (31)
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸