Friday, June 12, 2026

149 - Daya Shatakam - 62 - ஆசைப் பேய்களும் மோக்ஷ அரசகுமாரனும் - The Demons of Desire and the Prince Awaiting Moksha

 श्री:

जय गरुड सुपर्ण 
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

62 - ஆசைப் பேய்களும் மோக்ஷ அரசகுமாரனும் - The Demons of Desire and the Prince Awaiting Moksha

विवित्सा वेताळी विगम परिशुद्धेऽपि हृदये 
पटु प्रत्याहार प्रभृति पुटपाक प्रचकिताः । 
नमन्तस्त्वां नारायण शिखरि कूटस्थ करुणे 
निरुद्ध त्वद्द्रोहा नृपति सुत नीतिं न जहति ॥ 62 ॥

पदच्छेदः
विवित्सा वेताळी विगम परिशुद्धे अपि हृदये 
पटु प्रत्याहार प्रभृति पुटपाक प्रचकिताः । 
नमन्त: त्वां  नारायण शिखरि कूटस्थ करुणे 
निरुद्ध त्वत् द्रोहा: नृपति सुत नीतिं न जहति ॥ 62 ॥

नारायण शिखरि — திருவேங்கடமலையின்
कूटस्थ — உச்சியிலுள்ள ஸ்ரீநிவாஸனுடைய
करुणे — தயாதேவியே!
हृदये — உள்ளம்
विवित्सा — ஆசையாகிய
वेताळी — பெண்பேய்
विगम — ஒழிந்ததால்
परिशुद्धे अपि — தூய்மை பெற்ற போதிலும்
पटु — கடுமையான
प्रत्याहार — இந்த்ரியங்களை அடக்குதல்
प्रभृति — முதலிய
पुटपाक — புடமிடும் செயலுக்கு
प्रचकिताः  — மிக அஞ்சியவர்களாய்
त्वां नमन्त:  — உன்னைச் சரணமடைபவராய்
निरुद्ध त्वत् द्रोहा: — உனக்குத் துரோகம் செய்யாதவர்களாய் (சில பெரியோர்)
नृपति सुत नीतिं  — அரச குமாரனது முறையை
न जहति — கைவிடுவதில்லை.

ஆசைப் பேய்களும் மோக்ஷ அரசகுமாரனும்

திருவேங்கடநாதனுடைய தயாதேவியே! உலகில் மக்களுக்கு வரும் மண்ணசை - பொன்னாசை - பெண்ணாசை முதலிய ஆசைகள் பெண் பேய்கள் போன்றவை. பெண்பேய்க்கு அது கேட்கும் பொருளையெல்லாம் கொடுக்கவேண்டும். இல்லாவிடில் பெருந்தீங்கு செய்யும். அவ்வாறே ஆசையாகிய பிசாசுக்குப் பொருள்களைக் கொடுத்துக்கொண்டிருக்கவேண்டும். இல்லாவிடில் அது பெருங்கேடு விளைவிக்கும். புண்ணிய சாலிகளான சில பெரியோர்கள் அவ்வாசைப் பேய்களை அறவே ஒழித்துத் தமது உள்ளத்தைத் தூய்மையாக்கிக் கொள்கின்றனர். இப்படி உள்ளத் தூய்மை பெறினும் அவர்கள் பக்தியோகம் செய்து மோக்ஷம் பெறத் தகுதி பெறுவது கடினமாயுள்ளது. பக்தியோகத்திற்கு அங்கங்களைச் செய்வது எளிதன்று. உதாரணமாய் - ப்ரத்யாஹாரம் என்று ஓர் அங்கம் உண்டு. இது இந்திரியங்களை வெளியிற் செல்லவிடாமல் உள்ளே இழுத்து அடக்குவது. இதை எளிதில் செய்ய முடியுமா? இவ்வாறே இன்னும் ஆறு அங்கங்கள் உள்ளன. இவற்றைச் செய்தலும் மிகக் கடினம். இவற்றைச் செய்தல், தன்னையே புடம் போட்டு எரிப்பது போன்றதாகும். இப்படி அங்கங்களைச் செய்வதே கஷ்டமாயிருக்க, அங்கியான பக்தியோகத்தைச் செய்வது எப்படி? இதற்கு அஞ்சிவிட்டனர் சில பெரியோர். அவர்கள் எளிய உபாயமான ப்ரபத்தியை உன்னிடம் செய்துவிடுகின்றனர். பிறகு அவர்கள் பாபங்களைப் புத்திபூர்வமாய்ச் செய்தால் உனக்குத் துரோகம் செய்ததாகவன்றோ ஆகும்; ஆதலின் சாஸ்த்ரம் மறுத்த செயலை அவர்கள் அறிந்து செய்வதில்லை. கால தோஷத்தால் எதாவது சிறு தவறு செய்ய நேடினும் சிறு தண்டனையைப் பெற்றுத் தூய்மை பெறுகின்றனர். மோக்ஷ ஸாம்ராஜ்யத்தை எதிர்பார்த்து நிற்கும் அவர்கள் முடிசூட்டிக்கொள்ளவிருக்கும் அரசிளங் குமரனைப்போல் விளங்குகின்றனர். ராஜகுமாரன் தவறு செய்தால் அவனுக்கும் தண்டனையுண்டு. ஆனால் அவனது தகுதிக்கேற்றவாறு சிறு தண்டனையே வரும். அவ்வாறே உன்னைச் சரணமடைந்தவர் விஷயத்திலும் தவற்றுக்குச் சிறு தண்டனையளித்து அவரைத் தூயராக்கி மோக்ஷானந்தத்தை அளிக்கின்றாய். (62) 

The Demons of Desire and the Prince Awaiting Moksha

O Daya Devi of Tiruvengadanathan!

The worldly desires that arise in people — desire for land, wealth, women, and other such attachments — are like female demons. A female demon must constantly be given whatever she demands; otherwise, she causes great harm. Likewise, the ghost called desire must continually be fed with worldly objects. If denied, it brings ruin and suffering.

Some blessed great Jeevathmas completely destroy these demon-like desires and purify their minds. Yet even after attaining such inner purity, it remains extremely difficult for them to become qualified for Bhakti Yoga and attain Moksham through it.

Why? Because the disciplines (angas) required for Bhakti Yoga are not easy to practice. For example, one such discipline is Pratyahara — withdrawing the senses from external objects and turning them inward under control. Is this easy to accomplish? In the same way, there are six other difficult disciplines as well. Practicing all these is like placing oneself into a furnace and burning oneself in purification.

When even the preparatory disciplines themselves are so difficult, how much harder must Bhakti Yoga itself be!

Realizing this, some great Jeevans become fearful of taking that difficult path. Instead, they perform Prapatti unto you, the simple and compassionate means.

After surrendering unto you, if they knowingly commit sins, it would amount to betraying your grace. Therefore, they do not deliberately engage in actions forbidden by Shaastram. Even if, due to the defects of Kali Yuga or human weakness, they happen to commit some minor mistakes, they undergo only small corrective punishments and become purified again.

Such surrendered Jeevathmas stand awaiting the kingdom of Moksham like princes who are about to be crowned kings.

If a prince commits a mistake, he too may be punished — but only with a light punishment appropriate to his royal status. Similarly, those who have surrendered unto you receive only small punishments for their faults. Through those corrections, you purify them and finally grant them the bliss of Moksham. (62)

Notes by Sri:

இந்த ச்லோகத்தில் கூறப்பட்டுள்ள உவமைகள் :

உவமை (எடுத்துக்காட்டு)

ஆத்மார்த்தம் (உள்ளார்ந்த பொருள்)

மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை போன்ற ஆசைகள் பெண் பேய்கள் போல

உலக ஆசைகள் ஜீவனைப் பிடித்து துன்பப்படுத்துகின்றன

பெண்பேய்க்கு அது கேட்பதை கொடுக்காவிட்டால் தீங்கு செய்வது

ஆசைகளுக்கு இடமளிக்காவிட்டால் மனக் கலக்கம் மற்றும் துன்பம் உண்டாகும்

ஆசைப் பேய்களை ஒழித்து உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவது

பெரியோர் வைராக்யம் பெற்று மன சுத்தி அடைதல்

பக்தியோக அங்கங்களைச் செய்தல் தன்னையே புடம் போட்டு எரிப்பது போல

பக்தியோகம் மிகவும் கடினமான சாதனை

மோக்ஷத்தை எதிர்பார்த்து நிற்பவர் முடிசூடவிருக்கும் அரசிளங்குமரன் போல

ப்ரபத்தி செய்தவர் மோக்ஷத்திற்கு நிச்சயமாகத் தகுதி பெற்றவர்

அரசகுமாரன் தவறு செய்தால் சிறு தண்டனை பெறுவது

ப்ரபன்னர் தவறு செய்தாலும் லேசான தண்டனையால் தூய்மை பெறுவர்

அரசகுமாரன் பின்னர் அரசாட்சியை அடைவது

ப்ரபன்னர் இறுதியில் மோக்ஷானந்தத்தை அடைவர்

 Similes explained in this sloka: 

Simile (Example)

Spiritual Meaning

Desires for land, wealth, and women are compared to female demons

Worldly desires seize and torment the Jeevathma

A female demon causes harm if not given what it demands

Uncontrolled desires create mental suffering and disturbance

Great Jeevans destroy these demon-like desires and purify the mind

Wise devotees attain detachment and inner purity

Practicing the disciplines of Bhakti Yoga is like placing oneself in a furnace

Bhakti Yoga is extremely difficult to practice

Those awaiting Moksha are like princes waiting to be crowned

A Prapanna is assured of eventual Moksha

A prince receiving only a light punishment for mistakes

A surrendered Jeevan receives only mild corrective punishment

The prince finally attaining the kingdom

The Prapanna ultimately attains Moksha-anandam

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸