श्री:
श्रीमते निगमान्त महादेशिकाय नम:
05. श्री श्रीदयाशतकम् Daya Shatakam ஸ்ரீ தயா சதகம்
63 - தயையின் ஆட்சி - The Sovereignty of Compassion
தயையின் ஆட்சி — ஸ்வதந்த்ரனையும் வசப்படுத்தும்
சக்தி
தாயதேவியே! நீ உன் நாயகன திருவேங்கடமுடையானை உன் இஷ்டப்படி ஆட்டி வைக்கின்றாய். அவன் பிறருக்கு அடங்காமல் ஸ்வதந்த்ராயிருப்பவன். அப்படியிருப்பவனைச் சரணமடைந்தவர்க்குக் கீழ்ப்படிந்து தேரோட்டுதல் - தூது செல்லல் முதலிய இழிசெயல்களைச் செய்யுமாறு ஏவுகின்றாய். அதுமட்டுமா? அவன் ஸகல வஸ்துக்களையும் ஒரே காலத்தில் கண்கூடாகத் தானே காண்பவன். அத்தகைய அவனை அடியார்களின் குற்றங்களைக் காணாதவன் போலாக்கிக் குற்றத்தைப் புறக்கணிக்கச் செய்கின்றாய். அவன் உன் கட்டளைக்குக் கீழ்ப்படியத்தானே வேண்டியிருக்கின்றது. அவன் உனக்கு நாயகனாயிருந்தும் தன்னை உனக்கு வசப்பட்டவனாக உலகுக்கு வெளிப்படையாய்க் காட்டிக்கொள்கின்றான். சாஸ்த்ரங்களில் எம்பெருமானைப்பற்றிக் கூறிய வரையறைகளையெல்லாம் இவ்வாறு நீ குலைத்து அவனுக்கு இயற்கையாயுள்ள தன்மைகளை மாற்றிப் பல திருவிளையாடல்களைப் புரிகின்றாய். இவற்றுக்கெல்லாம் உனது தைரியம் தானே காரணம்? (63)
The Sovereignty of
Compassion — The Power that Governs Even the Independent Lord
O Daya Devi!
You make your Lord, Tiruvengadamudaiyan, act according to your wish. He is absolutely independent (Swatantra), subject to none. Yet you command Him to perform humble services for those who surrender to Him—such as becoming a charioteer, serving as a messenger, and carrying out tasks that appear lowly for the Supreme Lord. And that is not all.
He is the One who directly perceives all things at all times. Nothing escapes His vision. Yet you make Him behave as though He does not see the faults of His devotees. You cause Him to overlook their shortcomings and treat them with mercy instead of judgment. He has no choice but to obey your command.
Though He
is your Lord, He openly reveals to the world that He is under your influence.
In this way, you seem to overturn all the usual descriptions found in the
Shaastras concerning Bhagavan. You transform the natural expressions of His
sovereignty and make Him perform countless divine acts of grace.
What is the reason for all this? Is it not the boundless courage and authority of your compassion? (63)
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸