श्री:
श्रीमते निगमान्त महादेशिकाय नम:
कृपे काकस्य एकं हितम् इति हिनस्ति स्म नयनम् ।
विलीन स्वातन्त्र्य: वृषगिरि पति: त्वत् विहृतिभिः
दिशति एवं देव: जनित सुगतिं दण्डन गतिम् ॥ 64 ॥
कृपे — தயாதேவியே!
वृषगिरि पति:— திருவேங்கடநாதன்
त्वत् विहृतिभिः — உன் லீலைகளால்
विलीन स्वातन्त्र्य:— சுதந்திரத்தை இழந்தவனாய்
अपां पत्युः: — ஸமுத்ர ராஜனுடைய
शत्रून् — பகைவர்களையும்
असहन मुने: — பொறுமையற்ற பரசுராம முனிவரின்
धर्म निगळं — புண்ணியமெனும் விலங்கையும்
काकस्य — காகத்தினுடைய
एकं नयनम् — ஒற்றைக் கண்ணையும்
हितम् इति — நன்மையென (கருதி)
हिनस्ति स्म — அழித்தான்.
एवं — இவ்வாறு
देव: — எம்பெருமான்
दण्डन गतिम् — தண்டிக்கும் முறையை
जनित सुगतिं — நல்ல பயனை விளைவிக்குமாறு
दिशति — கொடுக்கின்றான்.
தண்டனையையும் அனுக்ரஹமாக மாற்றும் தயை
தயாதேவியே! உன் லீலைகள் மிக விசித்ரமானவை. உன் லீலைகளால் திருவேங்கடமுடையான் தன் சுதந்திரமிழந்து உனக்குக் கட்டுப்பட்டுக் கிடக்கின்றான். சேதநர்கள் அறிந்து செய்யும் குற்றங்களுக்குத் தக்கவாறு அவன் கொடுக்கும் தண்டனைகளெல்லாம் குற்றவாளர்களுக்கு நன்மையாகவே முடிகின்றன. கடலில் அணை கட்டுவதற்காக ஸமுத்ரராஜனை அழைத்த இராமபிரான் அவன் வராமையால் கடுஞ்சினங் கொண்டு அவன்மீது அம்பெய்ய முற்பட்டான். உடனே வந்து பணிந்த ஸமுத்ரராஜன் அவ்வம்புகளைத் தன் பகைவர் மீது எய்யச் செய்தான். கடலரசனுக்கு அளித்த தண்டனை அவன் பகைவர்களை அழிக்க காரணமாக அவனுக்கு நன்மையாய் முடிந்தது. இராமபிரான் பிராட்டியை மணம் புரிந்துகொண்டு மிதிலையிலிருந்து வருகையில் அவன் பெருமையைப் பொறுக்காத பரசுராமர் எதிர்த்தார். அவரைத் தண்டிக்க இராமன் ஏய்த அம்பு அவர் ஸ்வர்க்கம் முதலிய உத்தம லோகங்களைப் பெறத் தடையாயிருந்த புண்ணியம் நீங்க உதவியது. பிராட்டியிடம் பெருங்குற்றம் செய்த காகத்தின்மீது எய்த அம்பு அவன் சரணமடைந்ததும் அவனது ஒற்றைக் கண்ணைமட்டும் கவர்ந்தது; அவனது உயிரை அழிக்காமல் காத்தது. இவ்வாறு எம்பெருமான் செய்யும் தண்டனைகளையெல்லாம் நன்மைகளிலேயே தலைக்கட்டுமாறு உன் லீலைகள் தாமே செய்கின்றன? கருணையில்லாவிடில் தண்டனைகள் நன்மைக்கு உடலாய் முடிவது எப்படி? (64)
Compassion that Transforms
Punishment into Blessing
O Daya
Devi! Your divine plays are truly wondrous.
Through
your influence, Tiruvengadamudaiyan, though naturally independent and
sovereign, appears to set aside His absolute freedom and remain under your
gentle control. Because of you, even the punishments He gives to Jeevathmas for
their knowingly committed sins ultimately become beneficial to the very persons
being punished.
Consider
the episode of Rama and Samudra Raja. When Rama sought the ocean's cooperation
in building the bridge to Lanka, the Ocean King did not appear despite being
summoned. Angered by this neglect, Rama prepared to release a powerful arrow
against him. At once, Samudra Raja came, surrendered, and sought forgiveness.
The arrow was then redirected against his enemies. Thus, what appeared to be a
punishment for the Ocean King ultimately became a blessing, for it destroyed
those who troubled him.
Again, when
Rama was returning from Mithila after marrying Sita, Parashurama, unable to
tolerate Rama's greatness, confronted Him. Rama's arrow, intended to punish
Parashurama, did not destroy him. Instead, it removed the accumulated merit
that was standing in the way of his higher spiritual progress. Thus, the
punishment became a means for his ultimate good.
Likewise,
the crow-demon Kakasura committed a grave offense against Sita Devi. Rama
released a Brahmastra against him. Yet when Kakasura surrendered, the
punishment was greatly softened. The missile took only one of his eyes and
spared his life. What could have ended in destruction became an act of mercy.
Thus, O
Daya Devi, your divine play ensures that every punishment administered by the
Lord culminates in some form of good. Correction becomes purification;
chastisement becomes protection; justice becomes grace.
Without
your compassion, how could punishment ever end as a blessing? It is your
presence alone that transforms divine justice into an instrument of upliftment
and welfare. (64)