Thursday, June 11, 2026

148 - Daya Shatakam - 61- தயையின் ஒரு துளி — பிரளயக் கடலினும் பெரிது - A Single Drop of Compassion — Greater than the Deluge Ocean

श्री:
जय गरुड सुपर्ण 
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

61- தயையின் ஒரு துளி — பிரளயக் கடலினும் பெரிது - A Single Drop of Compassion — Greater than the Deluge Ocean

अकूपारैरेकोदक समय वैतण्डिक जवैः 
अनिर्वाप्यां क्षिप्रं क्षपयितुमविद्याख्य बडबाम् । 
कृपे त्वं तत्तादृक्प्रथिम वृष पृथ्वीधर पति- 
स्वरूप द्वैगुण्य द्विगुण निज बिन्दुः प्रभवसि ॥ 61 ॥

पदच्छेदः
अकूपारै: एक उदक समय वैतण्डिक जवैः 
अनिर्वाप्यां क्षिप्रं क्षपयितुम् अविद्याख्य बडबाम् । 
कृपे त्वं तत्तादृक् प्रथिम वृष पृथ्वी धर पति- 
स्वरूप द्वैगुण्य द्विगुण निज बिन्दुः प्रभवसि ॥ 61 ॥

कृपे — கருணையே!
तत्तादृक् — அத்தகைய
प्रथिम — பெரியதான
वृष पृथ्वी धर — திருவேங்கடமலையின்
पति — நாயகனான ஸ்ரீநிவாஸனுடைய
स्वरूप — ஸ்வரூபத்தினும்
द्वैगुण्य — இருமடங்கு கொண்டதற்கும்
द्विगुण — இருமடங்கு கொண்டதான
निज बिन्दुः — தன் திவலையை உடைய
त्वं — நீ
एक उदक — எங்கும் ஒரே நீராய் உள்ள
समय — ப்ரளய காலத்தில்
वैतण्डिक — விதண்டாவாதம் செய்கின்றவரின்
जवैः  — வேகத்தைக் கொண்ட
अकूपारै: — கடல்களால்
अनिर्वाप्यां — அணைக்கமுடியாத
अविद्याख्य बडबाम् — கர்மமாகிய வடவா முகாக்நியை
क्षिप्रं — விரைவில்
क्षपयितुम् — ஒழிப்பதற்கு
प्रभवसि — சக்தியுடையாய்.

தயையின் ஒரு துளி — பிரளயக் கடலினும் பெரிது

தயாதேவியே! திருவேங்கட மலை எத்துணைப் பெரியது? என்று ஒருவன் கேட்டால் என்ன விடை? அத்துணைப் பெரிது என்றுதான் கூறலாம். இவ்வாறு மிகப் பெரிய திருமலைக்கு நாயகனாய் விளங்குகின்றான் ஸ்ரீநிவாஸன். அவனுடைய ஆத்மா ஜீவாத்மாவைப் போல் அணுவானதன்று. எங்கும் வியாபித்து நிற்கும் விபுவாகும். அது இல்லாத இடமே இல்லை. இவ்வாறு நிற்கும் அவனுடைய ஆத்மாவைத் திவ்யாத்ம ஸ்வரூபம் என்பர். அதனினும் நான்கு மடங்கு பெரிய ஒரு வஸ்து உண்டென்று வைத்துக்கொண்டால் அந்த வஸ்து தயாதேவியாகிய உன்னுடைய ஒரு திவலையே. உன் ஒரு துளி செய்யும் அருஞ்செயலைப் பிரளய காலத்துக் கடல்கள்கூடச் செய்யமுடியாது. பிரளய காலத்தில் வேறு பூதங்கள் புலப்படாதவாறு எங்கும் ஒரே நீர்ப் பரப்பாயிருக்கும். அப்பொழுது கடல்கள் காக்கவேண்டிய பொருள் - அழிக்கவேண்டிய பொருள் என்னும் பாகுபாடின்றி எல்லாவற்றையும் விழுங்கிக் கொந்தளித்துப் பெருமுழக்கம் செய்து மிக்க வேகத்துடன் இருக்கும். சிலர் விதண்டாவாதம் செய்வதுண்டு. அவர் ஸ்தாபிக்க வேண்டிய கொள்கை-மறுக்க வேண்டிய கொள்கை என்னும் வேற்றுமை கருதாது பிறர் சொல்லும் அனைத்தையும் மறுத்துப் பெருத்த ஆரவாரம் செய்து வேகத்துடன் பேசி நிற்பர். அவர்களின் பேச்சின் வேகம் போன்றதாம் பிரளய காலத்துக் கடல்களின் வேகம். கடல்களில் மிகுதியாய் வரும் நீரையெல்லாம் பருகி எல்லை மீறாது செய்வதற்குக் கடல் நடுவே வடவாமுகாக்நி (பெண் குதிரை முகங் கொண்டது) என்ற அக்நி உண்டு. இந்த அக்நியை  மட்டும் பிரளய காலக் கடல் நீரும் அணைக்கமுடியாதாம். இந்த அக்நி போல் உள்ளது என் கர்மங்களின் தொகுதி. இதை விரைவில் அடியோடு ஒழிப்பதற்கு உன்னால்தான் முடியும். இதற்கு உனது ஒரு திவலையே போதும். பரப்ரஹ்மத்தின் ஸ்வரூபத்தினும் நான்கு மடங்கு பெரிதாகவன்றோ உள்ளது உன் ஒரு திவலை. இவ்வாறு செய்து அடியேனைக் காத்தருளவேண்டும். (61) 

A Single Drop of Compassion — Greater than the Deluge Ocean

O Daya Devi! If someone asks, “How vast is the sacred Tirumala hill?” the only fitting answer would be, “It is immeasurably vast.”

Srinivasa, the Lord of this mighty hill, possesses a divine Self unlike the tiny atomic(anu) Jeevathma. His divine nature is Vibu - all-pervading, present everywhere without limitation. This is called His Divyaatma Swaroopam.

Yet, even if one were to imagine an entity four times greater than that infinite divine reality itself, that greatness would still amount only to a single tiny drop of you — O Daya Devi!

The extraordinary work accomplished by even one drop of your compassion cannot be achieved even by the oceans of the cosmic deluge (Pralaya). During Pralaya, all other elements disappear, and only endless waters remain everywhere. At that time, the deluge waters roar violently and swallow everything indiscriminately, without distinguishing between what should be protected and what should be destroyed.

This is compared to certain disputants who argue merely for the sake of argument. Without distinguishing between what should be accepted and what should be refuted, they loudly reject everything others say and continue arguing noisily and forcefully. The furious speed of such speech resembles the raging force of the deluge ocean.

In the middle of the ocean exists the mysterious Vadavaagni — the submarine fire with the form of a mare’s face — which drinks the excess waters and prevents the ocean from overflowing beyond its bounds. Even the waters of the cosmic deluge cannot extinguish this fire.

My accumulated karmas are like that unquenchable Vadavaagni. Only you can completely destroy them. For that, even a single drop of your compassion is sufficient.

For that one tiny drop of yours is greater than even the very nature of Parabrahmam itself.

Therefore, please protect me by destroying my karmic bondage completely. (61)🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸