Wednesday, June 10, 2026

147 - Daya Shatakam - 60 – தயை வெள்ளம் ஸம்ஸார மரத்தை வேரோடு சாய்க்கிறது - The Flood of Compassion Uproots the Tree of Samsara - ஆசார்யன் — தயையின் உருவம் - The Acharya — The Embodiment of Compassion

    श्री:
जय गरुड सुपर्ण 
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

60 – தயை வெள்ளம் ஸம்ஸார மரத்தை வேரோடு சாய்க்கிறது - The Flood of Compassion Uproots the Tree of Samsara - ஆசார்யன் — தயையின் உருவம் - The Acharya — The Embodiment of Compassion


मृदुहृदये दये मृदित काम हिते महिते
धृत विबुधे बुधेषु विततात्मधुरे मधुरे ।
वृषगिरि सार्वभौम दयिते मयि ते महतीं
भवुक निधे निधेहि भवमूल हरां लहरीम् ॥ 60
 
पदच्छेदः
मृदु हृदये दये मृदित काम हिते महिते
धृत विबुधे बुधेषु वितत आत्म धुरे मधुरे ।
वृषगिरि सार्वभौम दयिते मयि ते महतीं
भवुक निधे निधेहि भव मूल हरां लहरीम् ॥ 60
 
मृदु हृदये - மென்மையான உள்ளமுடையவளே!
धृत विबुधे - தேவர்களைக் காப்பவளே!
मृदित काम - ஆசையை வென்றவர்க்கு
हिते  - நன்மை புரியுமவளே!
बुधेषु - அறிஞர்களிடத்தில்
वितत आत्म धुरे — தன்பொறுப்பைக் கொடுத்தவளாய் 
वृषगिरि सार्वभौम — திருவேங்கடநாதனுக்கு 
दयिते — பிரியமானவளாய்
भवुक निधे — மங்களங்களுக்கு  உறைவிடமாய் 
मधुरे — இனியையாய்
महिते - போற்றப்படுபவளாயுள்ள
दये — தயாதேவியே !
भव मूल हरां — ஸம்ஸாரத்தை  வேரறுக்கின்ற
महतीं  பெரிய
ते लहरीम् — உனது அலையை
 मयि — என்மீது
निधेहि — வீசுவாயாக.

தயையின் பெருவெள்ளம் ஸம்ஸார மரத்தை வேரோடு சாய்க்கிறது

தயாதேவியே! உன் உள்ளம் மிக மென்மையானது. சேதநர்களின் சிறு துன்பத்தையும் நீ பொறுக்கமாட்டாய். சாஸ்த்ரங்களை அறிந்து அவற்றிற் கூறிய முறையில் உபாயங்களைச் செய்யும் தேவர்க(ளுள்பட அறிஞ)ளுக்கு அவர் விரும்பும் பலனைக் கொடுத்துப் போஷிக்கின்றாய். இன்னும் விசேஷ ஜ்ஞாநம் பெற்றவர் அற்பமான இம்மைப் பயன்களை விரும்ப மாட்டார்; அவற்றில் வெறுப்புக்கொண்டு மோக்ஷத்திற்கு உபாயமான ப்ரபத்தியைச் செய்வர். அவர்களுக்கு எந்நாளும் அழியாத மோக்ஷாந்தத்ததைத் தருகின்றாய். இந்த மோக்ஷம் கொடுப்பது உன்னால்தான் முடியும். மோக்ஷத்தைப் பெறுவதற்குச் சேதநர் செய்யவேண்டிய செயல்களுக்கும் நீதான் துணைபுரியவேண்டும். இந்தப் பொறுப்பும் உன்னுடையதேயாகும். ஆயினும் உனது இந்தப் பொறுப்பை ஆசார்யர்களிடம் கொடுத்துவிடுகின்றாய். அவர்கள் உன் ஏவலால் சேதநர்களுக்குச் சிறந்த உபதேசங்களைச் செய்து திருத்துகின்றனர்; நாளடைவில் அவர்களுக்கு மோக்ஷத்தில் ஆசையை வளரச் செய்கின்றனர்; அதற்கு உபாயமாகிய ப்ரபத்தியைச் செய்விக்கின்றனர்; இப்படி உன் பொறுப்பை ஆசார்யர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். சேதநர்களைக் காக்க அவதரித்துள்ள திருவேங்கடநாதன் நீ அவனிலும் மிக்க ஊக்கங்கொண்டு ஆசார்யர்கள் மூலமாகப் பல்வகையிலும் சேதநர்களைத் திருத்தி நல்வழிப்படுத்துவதால் உன்பால் அளவற்ற பிரியம் கொண்டுள்ளான். நீ சொல்லிற்றுச் செய்பவனாய் உள்ளான்; மேலும் நீ எல்லோருக்கும் எல்லா நன்மைகளையும் புரிந்துகொண்டு ஸர்வமங்களங்களுக்கும் உறைவிடமாயுள்ளாய். இவ்வாறு தங்களுக்கு ஸகல க்ஷேமங்களையும் அளிப்பதால் சேதநர்களுக்கு அநுபவிக்க மிக இனிமையாயுள்ளாய்; இத்துணைப் பெருமைகளைக் கருதி எல்லோரும் எம்பெருமானுடைய மற்றைக் குணங்களைக் காட்டிலும் உன்னையே மிகுதியாகப் போற்றுகின்றனர். ஒப்பற்ற சிறப்பையுடைய தயாதேவியே! என் ஸம்ஸாரபந்தம் ஒரு பெரிய மரம்போல் வளர்ந்துகொண்டேயிருக்கின்றது. அடியேன் உன்னிடம் ப்ரபத்தி செய்து என்னைக் காக்கும் பொறுப்பை உன்னிடத்தில் ஸமர்ப்பிக்கின்றேன். உனது பெரிய அலையை என்மீது வீசச்செய்து என் ஸம்ஸார பந்தமென்னும் மரத்தை வேருடன் வீழ்த்தி அடியேனை உனது வெள்ளத்தில் மூழ்கச் செய்தருள வேண்டும். (60) 

ஆசார்யன் — தயையின் உருவம்

[இந்தச் சுலோகத்தில் ஸ்ரீநிவாஸனுடைய கருணைக்குக் கூறிய அடைமொழிகள் (விசேஷணங்கள்) எல்லாம் ஆசார்யனுக்கும் பொருந்துவனவாகக் கண்ட பெரியோர்கள் பின்வருமாறு பதவுரையும் விளக்கவுரையும் கூறுவர்:- 

भवुक निधे  — மங்களங்களுக்கு உறைவிடமாயுள்ளவளே!
वृषगिरि सार्वभौम दयिते  — திருவேங்கடநாதனுக்குப் பிரியையான
दये — தயாதேவியே!
मृदु हृदये  — மென்மையான உள்ளத்தையுடையனாய்
मृदित काम  — ஆசைகளை ஒழித்தவனாய்
हिते — நன்மை புரியுமவனாய்
बुधेषु — வித்வான்களுள்
महिते — போற்றப்பட்வனாய்
मधुरे — (குணங்களால்) இனியனாயுள்ள ஆசார்யனிடத்தில்
वितत आत्म धुरे  — தன் பொறுப்பை ஸமர்ப்பித்த
मयि — என்னிடம்.
(எஞ்சிய பதங்களுக்கு முன்கூறிய உரையையே கொள்க.) 

எல்லா மங்களங்களுக்கும் உறைவிடமாயுள்ளவளே! திருவேங்கடநாதனுடைய தயாதேவியே! என்னுடைய ஆசார்யன் பிறது கஷ்டத்தைப் பொறுக்காத மென்மையான உள்ளமுடையன்; அற்ப பலன்களில் ஆசையை ஒழித்தவன்; சேதநருக்கு நன்மையே புரியுமவன்; அறிஞர்களுக்கு நல்லுபதேசம் கூறித் திருத்தி அவர்களை உஜ்ஜீவிக்கச் செய்யுமவன்; வித்வான்களின் குழுவில் மிகப்போற்றப்பெற்றவன்; இனிய தன்மையுடையன்; இத்தகைய ஆசார்யனிடம் என் பொறுப்பகளைத்தையும் ஸமர்ப்பித்துவிட்டேன். ஸம்ஸாரபந்தத்தை வேறுக்கும் உன்னுடைய பேரலையை அடியேன் மீது வீச்சசெய்யவேண்டும். (60)

The Flood of Compassion Uproots the Tree of Samsara

O Daya Devi! Your heart is exceedingly soft. You cannot bear even the slightest suffering of Jeevathmas.

Those who study the Shaastrams and perform the prescribed means are nourished by you with the fruits they desire — even the Devas and learned beings among them. But those endowed with deeper spiritual wisdom do not seek these small worldly rewards. Becoming detached from them, they perform Prapatti, the means for Moksham. To such Jeevans, you grant the eternal bliss of liberation that never perishes.

Only you are capable of granting Moksham. Moreover, even the actions that Jeevathmas must perform in order to attain Moksham can happen only through your support. Thus, this entire responsibility belongs to you.

Yet, you lovingly entrust this responsibility to the Acharyas. By your command, they give noble teachings to Jeevathmas and gradually reform them. In time, they nurture in them a longing for Moksham and guide them to perform Prapatti, the true means to attain it. In this way, the Acharyas take up and carry out your divine mission.

Tiruvengadanathan Himself incarnated to protect Jeevathmas. Yet you show even greater eagerness than Him in uplifting them through the Acharyas in countless ways. Because of this, He possesses immeasurable love for you and acts according to your word.

Further, you bestow every auspicious blessing upon all beings and stand as the very abode of all auspiciousness. Since you grant every form of welfare and goodness to Jeevathmas, you are sweeter and more delightful to experience than all the other divine qualities of Bhagavan. Therefore, all devotees praise you above His other qualities.

O incomparable Daya Devi! My Samsara bondage continues to grow like a huge tree. I now perform Prapatti unto you and place upon you the responsibility of protecting me. Please send forth your mighty flood-wave of compassion upon me. Uproot completely the great tree of my Samsara bondage and immerse me fully in your flood of grace. (60)

The Acharya — The Embodiment of Compassion

        Great elders observed that all the qualities attributed in this slokam to the compassion of Srinivasa can also be applied to the Acharya. Therefore, they gave the following deeper interpretation:

    “O abode of all auspiciousness! O Daya Devi of Tiruvengadanathan! My Acharya possesses a heart so tender that he cannot bear the suffering of others. He has no desire for insignificant worldly rewards. He exists only to do good to Jeevathmas. He gives noble instruction to seekers, reforms them, and uplifts them spiritually. Among assemblies of learned scholars, he is greatly revered. His nature is exceedingly sweet and gracious.Unto such an Acharya, I have surrendered all my responsibilities completely. Now, please send upon me your mighty wave of compassion that can uproot the bondage of Samsara itself.”


🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸