Wednesday, April 15, 2026

Daya Shatakam - 04 - ரிஷிகளை வழிபடுதல் - Salutations to the Sages

    श्री:

जय गरुड सुपर्ण 
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


 04 - ரிஷிகளை வழிபடுதல் - Salutations to the Sages
पराशर मुखान् वन्दे भगीरथ नये स्थितान् । 
कमला कान्त कारुण्य गङ्गा प्लावित मद्विधान् ॥ 4 ॥

पदच्छेदः
पराशर मुखान् वन्दे भगीरथ नये स्थितान् । 
कमला कान्त कारुण्य गङ्गा प्लावित मद्विधान् ॥ 4 ॥

कमला कान्त  — ஸ்ரீநிவாஸனுடைய 
कारुण्य गङ्गा  — கருணையெனும் கங்கையால் 
प्लावित मद्विधान् — என்னைப் போன்றவர்களை மூழ்கச் செய்தவர்களை
भगीरथ नये — (அதனால்) பகீரதன்  நிலையில்
स्थितान् — நின்றவர்களான
पराशर मुखान्— பராசரர் முதலியவர்களாய் 
वन्दे — வணங்குகின்றேன்.

ரிஷிகளை வழிபடுதல்

பகீரதன் கடுந்தவம் புரிந்து கங்கையைக் கீழலகுக்குக் கொண்டு வந்தான்; கபிலரது சாபத்தால் எரிந்துபோன தன் மூதாதையர்களின் சாம்பலை அந்நீரால் நனைத்து அவர்களை நற்கதி பெறச் செய்தான். பராசரர்-வ்யாஸர்-வால்மீகி முதலிய மஹர்ஷிகள் அந்தப் பகீரதனைப் போன்றவர்கள். நாம் பாபங்களைச் செய்து ஆத்மாவைக் கெடுத்துக் கொண்டிருக்கின்றோம். அம்முனிவர்கள் ஸ்ரீவிஷ்ணுபுராணம் - மஹாபாரதம் - ஸ்ரீமத் ராமாயணம் முதலிய சிறந்த கிரந்தங்களை இயற்றினர். அவர்களது முயற்சி வடிவமான அவற்றைப் படித்து நாம் திருந்துகின்றோம். அதனால் ஸ்ரீநிவாஸனுடைய கருணையெனும் கங்கை வெள்ளம் நம் மீது பாய்கின்றது. நாம் நற்கதி பெறுகின்றோம். இவ்வாறு நம்மைக் காத்த அம்முனிவர்களை வணங்குகின்றேன். (4) 

Salutations to the Sages

King Bhagiratha performed severe penance and brought the Ganga down to earth. He used its waters to purify the ashes of his ancestors, who had been burnt by the curse of Kapila, and helped them attain a good state. In the same way, great sages like Parashara, Vyasa, and Valmiki are like Bhagiratha. We keep committing sins and harming our own souls. These sages gave us great texts like Vishnu Purana, Mahabharata, and Ramayana. By reading these, we slowly correct ourselves. Through this, the flood of compassion of Lord Srinivasa, like the Ganga, flows upon us, and we attain a good path. I bow to these sages who have protected and uplifted us. (4) 

Notes by Sri :

இந்த ச்லோகத்தில் கூறப்பட்டுள்ள உவமைகள் :

பகீரதன் கங்கை கொண்டு வந்து முன்னோர்களைக் காப்பதுபோல், முனிவர்கள் ஶாஸ்திரங்கள் மூலம் எம்பெருமானின் கருணையை நமக்கு அளித்து நற்கதி பெறச் செய்கின்றனர். 

உவமை (எடுத்துக்காட்டு)

உள்ளார்ந்த பொருள்

பகீரதன்

பராசரர், வ்யாசர், வால்மீகி போன்ற முனிவர்கள்

கங்கை

விஷ்ணுபுராணம், மஹாபாரதம், ராமாயணம் போன்ற நூல்கள்

பகீரதன் மூதாதையர் சாம்பல்

நமது பாபங்கள்

கங்கை வெள்ளம்

ஸ்ரீநிவாஸனின் கருணை

பகீரதன் மூதாதையர் நற்கதி அடைதல்

நாம் நற்கதி அடைதல்

Similes explained in this sloka:

Just as Bhagiratha brought the Ganga to uplift his ancestors, the sages gave us sacred texts through which the compassion of Srinivasa flows to us and leads us to a good path. 

Simile (Example)

Spiritual Meaning

Bhagiratha

Sages like Parashara, Vyasa, and Valmiki

Ganga

Works of the sages like Vishnu Purana, Mahabharata, and Ramayana

Ashes of Bhagirathan's ancestors

Our sins

Flood of Ganga

Compassion of Srinivasa

Bhagirathan's Ancestors attaining good state

We attain the right path


🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸